Friday, September 18, 2026

நபியவர்களின் ஷபாஅத் யாருக்கு?

 حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا هِقْلٌ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - عَنِ الأَوْزَاعِيِّ،

حَدَّثَنِي أَبُو عَمَّارٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخَ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى

الله عليه وسلم ‏ ‏ أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ وَأَوَّلُ شَافِعٍ

وَأَوَّلُ مُشَفَّعٍ ‏ ‏ ‏.‏

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் மறுமை நாளில் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினரின் தலைவன் (மற்றும் அவர்களில் மிகவும் கண்ணியமானவர்) ஆவேன். மேலும், மண்ணறை எவருக்காக முதலில் பிளக்கப்படுமோ (மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்படுவோரில்) அவரும் நானே. மேலும், நானே முதல் பரிந்துரையாளராகவும், (அவரது) பரிந்துரை முதலில் ஏற்கப்படுபவராகவும் இருப்பேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்

ஸஹீஹ் முஸ்லிம் : 5881

இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி

படைத்த மனிதர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 

‘அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து – தூய்மையான எண்ணத்துடன் ‘வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்’ என்று கூறினார்கள்’ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். 

(நூல்: புகாரி-99)

இணை வைக்காத நிலையில் மனிதர் என்ற அடிப்படையில் தவறுகள் குற்றங்கள் செய்த பாவிகளுக்காக நபியவர்களின் பரிந்துரை கிடைத்து விடும். அல்ஹம்துலில்லாஹ் !

ஹவ்லுல் கவ்ஸர் (நீர் தடாகம்)

மறுமை நாளில் நல்லடியார்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் விசேசமாக ஏற்பாடு செய்யப்பட்டநீர் தடாகம் தான் இந்த கவ்ஸராகும்.

ஹாரிஸா(ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) அறிவித்தார்:

“(அல்கவ்ஸர் எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ஸன்ஆவிற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்” என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத்(ரலி) அவர்கள் என்னிடம் அதன் கோப்பைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று வினவினார்கள். நான் இல்லை என்றேன். அதற்கு அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும் என (நபி(ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள். 

(புகாரி 6592)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்கவ்ஸர் எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்”

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6579)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


மறுமை நாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத் திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று அல்லாஹ் சொல்வான்.

ஸஹீஹுல் புகாரி : 6586

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ

பொருள்: "நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை யாரேனும் புதிதாக உருவாக்கினால், அது (அல்லாஹ்விடத்தில்) நிராகரிக்கப்பட்டதாகும்."

மற்றொரு அறிவிப்பில்: مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ 

பொருள்: "நம்முடைய கட்டளை (வழிகாட்டுதல்) இல்லாத ஒரு செயலை யாரேனும் செய்தால், அது நிராகரிக்கப்பட்டதாகும்."


- ஆதாரங்கள்

  - ஸஹீஹ் அல்-புகாரி (எண்: 2697)

  - ஸஹீஹ் முஸ்லிம் (எண்: 1718)

No comments:

Post a Comment