Friday, December 23, 2016

ஹதீஸ்கலை விதிகளுக்கு முரணாகிறது என்று மறுப்பதை விட குர்ஆனுக்கு முரணாகிறது என்று கூறி மறுப்பது மிகவும் உறுதியானதா?

குர்ஆனும் ஹதீசும் என்ன கூறுகிறது என்று முடிவு செய்வதுதான் அறிவார்ந்த செயல்.

ஹதீஸ்கலை விதிக்கு மாற்றமாக இருப்பதினால் ஒரு ஹதீஸை மறுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம். அப்போ அப்படி மறுப்பது தவறா? அல்லது அப்படி தவ்ஹீத் ஜமாஅத்  ஹதீஸை ஹதீஸ்கலை விதிக்கு மாற்றமாக இருப்பதினால் மறுப்பதில்லையா?

ஹதீஸ்கலை விதிக்கு மாற்றமாக இருப்பதினால் ஒரு ஹதீஸை மறுப்பது எல்லா முஸ்லீம்களின் நிலை. இதில் முஸ்லீம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை. எதில் கருத்து வேறுபாடு இல்லையோ அதில் கேள்வி கேட்பது குதர்க்கமானது. இதன் நோக்கம் உங்களின் கருத்தை தர்க ரீதியாக நியாயப்படுத்துவது தான்??.

முஃதஸிலாக்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி ஹதீஸ்களை மறுத்தார்கள். குரானுக்கு முரண்படுகிறது என்று தமிழகத்தை பொறுத்த வரையில் பிஜே எனும் முன்னாள் நாத்திகர் தான் ஹதீஸை மறுத்துள்ளார். அவருக்கு பின்னால் இருந்த ஜமாஅத் அதை அப்படியே நம்பி அவர் சொன்ன வாதத்தை அப்படையே வாந்தி எடுக்கிறது.

இவர் சொல்வது சரிதானா என்று சிந்திப்பவர்கள், அவர் போட்ட விதியிலேயே சிந்திக்கிறார்கள், இது தான் மதுஹப் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

இவர் சொல்வது சரிதானா, இவருக்கு வந்த முரண்பாடு போல் ஏன் இஸ்லாமிய வரலாற்றில் இது வரை வர வில்லை, இவர் மறுக்கும் அதே ஹதீஸை இது வரை வேறு யாராவது மறுத்துள்ளார்களா என்று ஆராய்ந்தால் சற்று மாற்று பாதை பிறக்கும். பிஜே மறுத்த ஹதீஸை நீங்களும் மீண்டும் ஆராய்ந்தால் உங்களுக்கும் முரண்படுவது போல் தான் தெரியும். காரணம் அவர் போட்ட விதியிலேயே சிந்திக்கிறீர்கள்.

வேறு ஒரு உதாரணத்தை எடுத்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு தஜ்ஜால் ஹதீஸை எடுத்து  கொள்வோம். தஜ்ஜால் ஹதீஸை பிஜே அல்லாஹ்வை பற்றிய அடிப்படை நம்பிக்கைக்கு முரண் படுகிறது என்று கூறி மறுத்து விடுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள். இதை சரியா தவறா என்று எவ்வாறு ஆராய்வீர்கள். தஜ்ஜால் பற்றி குரானில் வரவில்லை.


Friday, November 25, 2016

ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனில் பால்குடி பற்றிய வசனம் எழுதப்படவில்லை என்று கூறினார்களா? நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் குர்ஆனில் வசனம் நீக்கப்பட்டதா ??

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெரும் ஒரு ஹதீஸை பற்றிய விமர்சனமும் விளக்கமும்.

முதலில் இந்த ஹதீஸ் பற்றிய விமர்சன ஆய்விற்கு பின்னணி காரணம் என்ன?

தமிழ் நாட்டில் உள்ள ஒரு முன்னாள் நாத்திகர், அவரின் நாத்திக சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்பதால் சூனியம் இல்லை என்றார். இதற்கு பதிலளித்த அறிஞர்கள் சூனியம் உண்டு என்றும் அல்லாஹ் நாடினால் தாக்கம் ஏற்படும்  என்றும்  ஸஹீஹான ஹதீஸிலும் குரானிலும் வந்துள்ளதே என்கிறார்கள். அவர் சூனியம் பற்றிய குரானின் ௨:௧௦௨ என்ற வசனத்தை முதலில் வளைத்தனர், ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு திருத்தும் செய்தார் (அதை பற்றி ஒரு தனி விளக்கத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்). பிறகு குரானிற்கு முரண் படுகிறது என்று கூறி சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்தார். தனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் பல ஹதீஸ்களை மறுத்தார். அவர் முறுத்த ஹதீஸ்கள் முதஷாபிஹ் என்னும் பல கருத்திற்கு இடம்பாடான ஹதீஸ்கள். அது போன்ற ஹதீஸ்களில் ஒன்று தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

முதலில் ஹதீஸை பார்ப்போம்.

عن عائشة  أنها قالت: كان فيما أنزل من القرآن (عشر رضعات معلومات يحرّمن ) ثم نسخن بـ(خمس معلومات) فتوفي رسول الله وهن فيما يقرأ من القرآن .

(صحيح مسلم 4/167 ، سنن الدرامي 2/157 ، سنن الترمذي 3/456 . السنن الكبرى للبيهقي 7/454 ، سنن ابن ماجة 1/635 ، سنن النسائي 6/100 ، الموطأ 2/117) .

2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
Book :17


மேல் உள்ள ஹதீஸின் அரபி பிரயோகத்தை பாருங்கள்.

குரானில் அருளப்பட்டு இருந்த (فيما أنزل) ஆயத்து  ஒன்று தான் "10 முறை தாய் பால் அருந்தினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று"

பிறகு அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது.

فتوفي رسول الله நபி (ஸல்) மவ்த்தாக்கப்பட்டார்கள்.

وهن فيما يقرأ من القرآن - அந்த ஆயத்து குரானில் ஓதப்பட்ட ஆயத்தாக இருந்த நிலையில்.

விமர்சனம் 1: இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்கிறது, அப்படி என்றால் குர்ஆனில் இப்போது இல்லையே? அந்த ஆயத்து எங்கே?

விளக்கம்:


இந்த ஹதீஸ் நபி (ஸல்) மரணத்திற்கு பிறகு ஒரு ஆயத்து தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம் தருகிறது என்ற விளக்கத்தை எங்கிருந்து முதலில் அறிந்தீர்கள். நாத்திகரிடம்(பிஜே) இருந்தா?

"மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்றால் பலர் எப்படி ஓதினார்கள். பலர் ஓதவில்லை என்று தானே அர்த்தம்?

இங்கே ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களில் மரணத்தை பற்றி குறிப்பிட காரணம் என்ன?

உங்கள் அறிஞர் பிஜே தொலைந்து விட்டது என்பது தான் அர்த்தம் என்று சொல்கிறார், மற்ற அறிஞர்கள் ஐந்து முறை பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு உருவாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் தான் ஆதாரம் என்கிறார்கள். அது எப்படி?

ஐந்து முறை பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு உருவாகும் என்ற ஆயத்து எங்கே என்ற கேழ்விக்கு, இந்த ஹதீஸ் தான் விளக்கம். அதுவும் குரானில் இருந்து மாற்றப்பட்டது விட்டது. மாற்றப்பட்டது பலருக்கு தெரியும், மக்களில் சிலர் அதை ஓதி வந்தார்கள்.

விமர்சனம் 2: ஐந்து முறை என்பது எப்போது மாற்றப்பட்டது?

விளக்கம்:


நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு சில நாட்கள் முன்னர் மாற்றப்பட்டுள்ளது. "மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்"

இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்க பின்னணி என்ன? எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக தெரிகிறது. ஒரு வேலை அந்த ஆயத்து குரானில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஆயிஷா (ரலி) எப்படி கூறி இருப்பார்கள்?.

எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில்,குர்ஆனில் உள்ள இந்த ஆயத்து என்று தானே கூறி இருப்பார்கள்.

அவ்வாறு கூறாமல் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்" என்று கூறுவதிலிருந்து " குறிப்பிட்ட ஐந்து தடவைகள்" என்ற வசனம் நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் நீக்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது.

குறுக்கு கேள்வி: இந்த விளக்கத்தை சொல்லும் நீங்களும் பிற அறிஞர்களின் கருத்தை தானே தக்லீத் செய்கிறீர்கள்

விளக்கம்:


இது என்னுடய தனிப்பட்ட ஆய்வு மற்றும் விளக்கம். அது எப்படி பிறர் சொல்வதை கேட்டால் மட்டும் தக்லீத். பிஜே சொல்வதை சொன்னால் மட்டும் தக்கலீத் இல்லை??.

எனக்கு தெரிந்து என்னுடைய இந்த கேள்விகளை வேறு எந்த அறிஞரும் கேட்டதாக நான் அறிய வில்லை, அப்படி ஏதும் நீங்கள் அறிந்தால் அந்த வீடியோ தாருங்கள். மற்ற அறிஞர்களின் கருத்திற்கு ஒத்த கேள்வியை நான் கேட்டுள்ளேன் என்று அல்லாஹ்விற்கு நன்றி கூறுவேன்.

1. "மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்றால் பலர் எப்படி ஓதினார்கள். பலர் ஓதவில்லை என்று தானே அர்த்தம்?

2. இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்க பின்னணி என்ன? எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக தெரிகிறது. ஒரு வேலை அந்த ஆயத்து குரானில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஆயிஷா (ரலி) எப்படி கூறி இருப்பார்கள்?. எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் இந்த ஆயத்து என்று தானே கூறி இருப்பார்கள். அவ்வாறு கூறாமல் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்" என்று கூறுவதிலிருந்து " குறிப்பிட்ட ஐந்து தடவைகள்" என்ற வசனம் நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் நீக்கப்பட்டுள்ளது.

இடைக் கேள்வி: இந்த ஹதீஸ், ஒரு ஆயத்து தொலைந்த விட்டது என்று நாங்கள் சொன்னால், ஏன் எங்களை பிஜே வை தக்லீத் செய்கிறோம் என்று கூறுகிறீர்கள்.

விளக்கம்:


அரபி வாசகத்தின் நேரடி பொருள் என்ன. பின்னணி காரணம் என்ன என்று மேலே பார்த்தோம். உங்களுக்கு சுயமாக அரபியை படித்து பொருள் புரிய தெரியுமென்றால் இதை நீங்களே எனக்கு முன்னாள் அறிந்த்திருப்பீர்கள். அவ்வாறு உங்களுக்கு அரபியை படித்து பொருள் புரிய முடியாதென்றால் என்ன செய்வீர்கள்? இந்த விளக்கத்தை எடுத்து கொண்டு போய் உங்கள் அறிஞர்களிடம் மட்டும் கேட்பீர்கள். இதை தான் நான் தக்லீத் என்றேன்.

எப்போது ஒருவர் ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக சொல்ல ஆரம்பித்தாரே அப்பவே நாம் பிற அறிஞர்களிடமும் கேட்டு அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இவர் இந்நாள் வரை நல்லது தானே சொன்னார், எவ்வளவு சோதனைகளை சந்தித்துள்ளார், இவர் சொல்கின்ற விளக்கம் தான் நமது சுய புத்திக்கு சரியாக தெரிகின்றது என்று எண்ணினால் நம்மை இது தக்லீதலும் ஒரு புதிய மதுஹபிலும் தான் கொண்டு சேர்க்கும்.


விமர்சனம் 3: குரானிலிருந்து பிறகு நீக்க பட்டாள்..? அந்த வசனத்தை ஜைத் பின் தாபித் அவர்கள் குரானை தொகுக்கும் பொழுது நீக்கினார்களா அல்லது உஸ்மான் (ரலி)) குரானை தொகுக்கும் பொழுது ஆயிஷா மீது உள்ள கோபத்தில் நீக்கிவிட்டார்களா .....? யாருடைய ஆட்சியில் அல்லது யார் குரானை தொகுக்கும் பொழுது நீக்கினார்கள்.
(உண்மையிலேயே இந்த கேள்வியை என்னிடம் ஒரு tntj சகோதரர் கேட்டார்).

விளக்கம்:


வசனத்தை நீக்கியது அல்லாஹ், அது பலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது. எந்த எந்த பிரதியில் இருந்தது எந்த பிரதியில் இல்லை என்ற வரலாறு நம்மிடம் இல்லை. நீங்கள் அப்படி ஏதாவது ஒரு ஆயத்திற்காவது ஒரு வரலாறை கொண்டு வாருங்கள், பிறகு இந்த கேள்வியை கேளுங்கள்.

இடைக் கேள்வி: தக்லீத் விளக்கம் வேண்டும்?

தக்லீத் என்றால் இஸ்லாத்தின் மூலாதாரத்தை சுயமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர முடியாமல், ஒரு அறிஞர் சொல்வது சரியாக இருக்கும் என்ற நன்னம்பிக்கையில் அவர் சொல்வதை இஸ்லாம் என்று நம்பி பின்பற்றுவது.

விமர்சனம் 4: திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனமும் (தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்துவதற்கு) பருவ வயதை அடைந்தவருக்கு பத்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனமும் இறக்கப்பட்டது. எனது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு தாளில் அவை (எழுதப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுடைய விஷயத்தில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் (20112)

விளக்கம்:


எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் (20112)

என்ற முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்பு பலமான இரண்டு அறிவிப்பாளர்கள் (யஹ்யா பின் சயீத் அன்சாரி மற்றும் மாலிக் இப்னு அனஸ்) அறிவிக்கும் முவத்தா, முஸ்லிமின் அறிவிப்பிற்கு முரண்படுகிறது. இது லயீப் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் பிஜே பிறப்பதற்கு முன்னாலேயே சொல்லிவிட்டார்கள்.

அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இந்த முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்பை சுன்னத்தான விஷத்தை நிறுவுவதற்கு ஆதாரமாக எடுக்கமாட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் நினைப்பது போல் இந்த ஹதீஸை ஆதாரமானதாக எடுத்தாலும், இந்த ஹதீஸில் "பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது" என்று தான் உள்ளது. அது தின்றதால் அந்த ஆயத்தே குரானில் இல்லாமல் போனது என்று சொல்ல வில்லை. சொல்ல போனால் இந்த ஹதீஸை நீங்கள் நினைப்பது போல் ஆதாரமானதாக எடுத்தால் எந்த பிரதியில் இருந்தது என்ற உங்களுடைய கேள்விக்கு இது ஒரு பதில்.


விமர்சனம் 5: ஆயிஷா ரலி அறிவிப்பில் மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு அறிவிப்பு வருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்மும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2869).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2869)

விளக்கம்:


ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று உள்ளது, அப்படி என்றால் எத்தனை முறை குடிப்பதால் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவு ஏற்படும்? ஐந்து முறை தானே. இதெப்படி முரணாகும். முரண் ஹதீஸில் இல்லை அதை விளக்கியவர்களிடமும் அதை அப்படியே நம்பியவர்களிடமும் தான் உள்ளது. இதில் முரண்பாடு இல்லை


விமர்சனம் 6: ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466

தொளிவு படுத்துங்கள்

விளக்கம்:


நீங்கள் சொன்ன ஃபத்ஹுல் பாரீயில் அதே பக்கத்தில் முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் மாற்றாரு ஸஹீஹான அறிவிப்பில் இப்படி சொல்கிறது என்று சொல்கிறார்கள்

وعند عبد الرزاق بإسناد صحيح عنها قالت : لا يحرم دون خمس رضعات معلومات

ஐந்து முறை பால் குடித்தாலே தீவிர மஹ்ரம் உறவு ஏற்படாது

முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் மாற்றாரு அறிவிப்பில்

رقم الحديث: 13524
(حديث موقوف) عَنْ عَنْ مَعْمَرٍ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ ، قَالَ : أَتَيْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَسَأَلْتُهُ عَنْ صَبِيٍّ شَرِبَ قَلِيلا مِنْ لَبَنِ امْرَأَةٍ ؟ فَقَالَ لِي عُرْوَةُ : كَانَتْ عَائِشَةُ ، تَقُولُ : " لا يُحَرِّمُ دُونَ سَبْعِ رَضَعَاتٍ ، أَوْ خَمْسٍ " ، قَالَ : فَأَتَيْتُ ابْنَ الْمُسَيِّبِ ، فَسَأَلْتُهُ ، قَالَ : لا أَقُولُ قَوْلَ عَائِشَةَ ، وَلا أَقُولُ قَوْلَ ابْنِ عَبَّاسٍ وَلَكِنْ لَوْ دَخَلَتْ بَطْنَهُ قَطْرَةٌ بَعْدَ أَنْ يَعْلَمَ أَنَّهَا دَخَلَتْ بَطْنَهُ حَرُمَ .

"ஆயிஷா (ரலி) அவர்கள் ஐந்து முறை என்றோ ஏழு முறை என்றோ சொன்னார்கள்" என்று உள்ளது. அதாவது அறிவிப்பாளருக்கு சரியாக தெரியவில்லை. எனவே மற்ற பலமான அறிவிப்பின்படி, ஐந்து என்பது தான் சரியான எண்ணிக்கை.

விமர்சனம் 7: ஆயிஷா ரலி அறிவிப்பில் மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு அறிவிப்பு வருகிறது.

மூன்று ஐந்து ஏழு பத்து, என்று எங்கே உள்ளது? இந்த கேள்வியே அடிப்படை நியாயமற்ற கேள்வி.

பத்து தடவை என்று முதலில் ஆயத் இறங்கியது, பிறகு ஐந்தாக மாற்றப்பட்டது. ஏழு என்பது அறிவிப்பாளரின் பலகீனமான அறிவிப்பு. மூன்று எங்கே இருந்து வந்தது? TNTJ அறிஞர்களின் பலகீனமான ஆய்வில் வந்தது என்று நான் நினைக்கிறன்.

விமர்சனம் 8:  இன்னும் இமாம் இப்னு ஹஜரின் கூற்று :

فتح الباري – ابن حجر ள جزء 9 – صفحة 147 ன

وأيضا فقول عائشة عشر رضعات معلومات ثم نسخن بخمس معلومات فمات النبي صلى الله عليه وسلم وهن مما يقرأ لا ينتهض للاحتجاج على الأصح من قولي الاصوليين لأن القرآن لا يثبت الا بالتواتر والراوي روى هذا على أنه قرآن لا خبر فلم يثبت كونه قرآنا ولا ذكر الراوي أنه خبر ليقبل قوله فيه والله أعلم

இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார். குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது.

ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147

விளக்கம்:


இதற்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பை அரபி கற்ற ஆலிம்களிடம் கேட்டு பாருங்கள். எனக்கு தெரிந்த மொழிபெயர்ப்பு

மேலும், ஆயிஷா (ரலி) அறிவிப்பான் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்பதை கொண்டு (குர்ஆனில் ஒரு ஆயத்தை நாம் இணைக்க முடியாது) குரான் முத்தவாதிரான ஹதீஸை கொண்டு தான் நிறுவப்படும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது.

எனவே யாரும் இந்த ஹதீஸை மறுக்கவில்லை. ஆக இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் இதை ஹதீஸ் என்பதில் எந்த மறுப்பும் சொல்லவில்லை. குர்ஆனில் இருந்து மாற்றப்பட்டது என்பதையும் மறுக்கவில்லை.

Friday, November 18, 2016

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில்


முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இரண்டுவித பிரச்சினைகள்:

1) இஸ்லாத்திற்கு எதிரான  (குர்ஆன், நபிமொழிகள் இவற்றிற்கு எதிரான) குற்றச்சாட்டுகள்.
2) முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்.

மேற்கண்ட இரண்டையும் இணைத்து இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளாக திரிப்பது வாததிறமையை மட்டுமே ஆதாரமாக கொண்டவர்களின் வழக்கம். இஸ்லாம் என்பது குர்ஆன் என்னும் இறைவேதமும், நபிகளாரின் நபிமொழிகளே தவிர முஸ்லிம்கள் அல்ல.

ஆனால் ஒருவரின் கொள்கை ஏட்டின் வழியாக மற்றவர்களை கவர்ந்திடுமா? அல்லது மனிதர்கள் வாழ்ந்து காட்டிய வழியால் கவர்ந்திடுமா? என்றால், வாழ்ந்து காட்டுவதால்தான் மற்றவர்களை கவர்ந்திடும்.

எனவே முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நாடுகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளும் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளாக விமர்ச்சிக்கப்படுகிறது. இது உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகும். எனவே முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு ஒழுக்க சீலர்களாக, நியாயவாதிகளாக, நடுநிலைவாதிகளாக இஸ்லாம் சொல்லும் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மதத்தைப் பற்றி விமர்சனம் செய்ய அம்மதத்திற்கு எதிரானோர் எழுதிய புத்தகங்களையோ, இணையதளங்களையோ வாசித்துவிட்டு வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விமர்சனமாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. தி.க.இயக்கத்தினர்கள் எழுதிய புத்தகங்களை இந்து மதத்தைப் பற்றிய நடுநிலை விமர்சனமாக பார்க்க முடியாது.

இன்று “இஸ்லாம் – முஸ்லிமல்லாதவர்களின் பார்வையில்” என்று விமர்ச்சிக்கப்படுவதும் இஸ்லாத்தை பிடிக்காத முஸ்லிம்களோ, பிறமதத்தினர்களோ எழுதிய புத்தகங்களின் மறுபதிப்பே தவிர நடுநிலையான விமர்சனம் அல்ல.

காய்தல் உவத்தல் ஒருவரின் விமர்சனத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை எழுதியவரரோ அல்லது பிறரோ சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எழுதியவரின் எழுத்துக்களே சாட்சி. அவரின் “இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்” என்ற பழைய தலைப்பே அதற்கு சாட்சியாக நிற்கிறது. எப்படி இருந்தாலும் விமர்சனங்களுக்கு கண்ணியமான முறையில் பதில் கொடுக்க முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

காய்தல் என்பது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். "காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே"--அறநெறிச்சாரம்

இந்தச் சூழ்நிலையில் தமிழ்மணம் வாசகர்களுக்கு முஹம்மது நபியைப்பற்றிய நடுநிலையான விமர்சனம் ஒன்றை தருவது நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்க்கு மிகப்பெரும் செல்வாக்கும் வல்லமையும் பெற்றிருந்தவர்கள் (நல்லவர்கள், தீயவர்கள் மற்றும் புகழ்பெற்றவர்களில்) யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில் முஹம்மது நபிக்கு முதலாம் இடத்தையும், உமர்(ரலி) அவர்களுக்கு 52-வது இடத்தையும் கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.

முஹம்மது நபி (கி.பி. 570 to 632) 

இந்த உலகத்தில் மிகப்பெரிய செல்வாக்கும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதன்மையானவராக தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அவருடைய வழக்கை அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் மற்றும் சமயத் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதி்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக விளங்குகிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மை யானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் தலைநகராக விளங்கிய நாகரிகத்தின் தலைநகரில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.

ஆனால், முஹம்மதோ வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள்.

ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய சூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள்.

அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. அவர்கள் தம் நாற்பதாம் வயதை அடையும் வரை, குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் அவர்களிடம் மிகக் குறைவாகவே இருந்தன.

அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை.

அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.

பிறகு சிறுகசிறுக, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் என்னினார்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிடைத்தது.

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்கள் கிடைத்தனர்.

இதனால் அவர்களுக்கு கிடைத்த செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக ஆக்கியது. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மதைப் பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.

இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது, மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கோத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் இறுதி இரண்டரை ஆண்டுகளும் கண்டார்கள். அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.

அரபு நாட்டின் (Bedouin என்னும்)  நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி அவர்களுக்குள் ஒருவரையொருவர் அழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே காலத்தில் நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படைகள் இருக்கவில்லை.

ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஒன்று சேர்க்கப்பட்டு உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.

அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கலின் புதிய பாரசீக பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை(Constantinople) மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையை பார்த்தால், இந்த எதிரிகளுடன் அரபு நாடோடிக் கோத்திரத்தார் ஈடுகொடுக்க முடியாதோர்தாம்.

எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பைஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

முஹம்மது அவர்களின் நெருங்கிய தோழர்களில், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை.

கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடதிசை நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் (strait) கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றியது.  ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த நாடோடிக் கோத்திரத்தார் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத - இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலை பெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசமாக இருந்து வந்தாலும், அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் நடந்த போருக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர்.

ஆனாலும் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது.

இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும்,வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை எப்படிக் கணக்கிடுவது?

ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர்.

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.


ஒன்று இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி,  ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான் 

கிறிஸ்துவ வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு ( அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான் காரணமாக இருந்தார்.(St. PAUL)

இஸ்லாத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய மரபுகளை வகுப்பதிலும் முஹம்மது நபி அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இறை வெளிப்பாடுகள் உறுதியான நம்பிக்கையுடனும், கடமையுணர்வுடனும், பதிவு செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை.

கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். 

உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார், இனிவரும் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்று நிகழ்வுகளில் முக்கியம் வாய்ந்த பல நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லலாம். உதாரணமாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்கா விட்டாலும், ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றிருப்பார்கள்.

அனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபியவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. எனவே அன்னார் இல்லாமலேயே இது போன்ற வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை.

மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன.

குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருக்கும் காரணத்தால் பதின்மூன்று நூற்றாண்டுகளுக் கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்கா மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.

இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே நம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. உதாரணமாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.
நன்றி : The 100
ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட்
தமிழில்:
இரா. நடராசன்
மோ. வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா
மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப்
பதிப்பாசிரியர் : மணவை முஸ்தபா
Published by:
Meera Publication
AE 103, Anna Nagar
Chennai – 600 040, India
தமிழ் வார்த்தைகளில் சுறு திருத்தங்களுடன் மறு பதிவீடு  செய்வது, முஹம்மது அப்துல் காதிர், சித்தையன் கோட்டை.

Sunday, September 11, 2016

பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படவேண்டிய இடம் மஸ்ஜிதா? மைதானமா?

- ஹுஸைன் ரபீக் பயானீ மதனீ(BA honest, MA reading in Madeena university)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திடலில்தான் தொழுது வந்துள்ளார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. எனவே திடலில் தொழுவது தான் நபி வழியாகும் என்பதில் ஷாபி மத்ஹபைத் தவிர உள்ள ஏனைய மூன்று மத்ஹபுகளினதும் நான்கு மத்ஹபுகளுக்கு வெளியிலுள்ள ஏனைய அறிஞர்களினதும் கருத்காகும். ஷாபி மத்ஹபை சார்ந்த அறிஞர்களில் பெரும்பாலானவர்களோ ஒரு மஸ்ஜிதில் ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றப்போதுமான இடவசதி இருந்தால் மைதானத்தில் தொழுவதை விட அந்த மஸ்ஜிதில் தொழுவது சிறந்தது என்றும் மைதானத்தில் தொழுதாலும் தவறில்லை என்றும் கருதுகின்றனர். அதே போன்று ஷாபி மத்ஹபின் சில அறிஞர்கள் பெரும்பாலான அறிஞர்களைப் போன்றே திடலில் தொழுவது சிறந்தது என்று கருதுகின்றனர்.
பெருநாள் தொழுகை திடலில் நிறைவேற்றப்படுவது சிறந்தது என்ற பெரும்பாலான அறிஞர்களின் கருத்து பலமானதா? அல்லது பெருநாளில் ஒன்றுகூடுவதற்கு மஸ்ஜிதில் போதிய வசதி இருந்தால் அந்த மஸ்ஜிதில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது சிறந்தது என்ற ஷாபி மத்ஹபின் கருத்து பலமானதா? என்பதை சுன்னாவின் அடிப்படையில் ஆய்வு செய்து பின்பற்றுவதே மக்களை வழிநடத்தும் அறிஞர்களின் கடமையாகும். இவ்விரு கருத்துக்களின் ஆதாரங்களை இப்போது கவனிப்போம்.

திடலில் தொழுவதுதான் நபி மொழி என்பவர்களின் ஆதாரம்:-


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை மைதானத்தில் தான் தொடர்ந்து தொழுது வந்துள்ளார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அது சம்பந்தமான பல ஹதீஸ்கள் புஹாரி, முஸ்லிம் உட்பட பல ஹதீஸ் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன.

பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் நிறைவேற்றுவது சிறந்தது என்பவர்களின் ஆதாரம்:-


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திடலில் தொழுதது ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டும் என்பதினாலாகும். அந்த நோக்கம் மஸ்ஜிதில் கைகூடி விட்டால் அங்கு தொழுவதே சிறந்தது. பைஹகியில் இடம்பெரும் பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாகும். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மழைபெய்த போது பெருநாள் தொழுகயை மஸ்ஜிதில் நிறைவேற்றிவிட்டு பின்வருமாறு கூறினார்கள். “மக்களே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களை திடலுக்கு அழைத்துச் சென்று தொழுகை நடத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில் திடலே மக்களுக்கு இலகுவானதாகவும் விசாலமானதாகவும் (போதுமானதாகவும்) இருந்தது. மஸ்ஜிதோ அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே மழை பெய்துவிட்டால் மஸ்ஜிதே மக்களுக்கு இலகுவானதாகும் (வசதியானதாகும்).”

மேற்படி ஆதாரத்திற்கான விமர்சனங்கள்:-


ஷாபி மத்ஹபினர் முன்வைக்கும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றாக பைஹகியின் அஸ்ஸுனனுல் குப்ராவில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியானது பலவீனமானதாகும். அந்த அறிவிப்பில்முஹம்மத் இப்னு அப்துல் அஸீஸ் என்ற ஒரு அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமான ஒரு அறிவிப்பாளர். இமாம்களான புஹாரி, அபூஹாதிம், நஸாயீ, உகைலி, இப்னு ஹிப்பான், தாரகுத்னி, தஹபி ஆகிய அறிஞர்கள் இவரை பலவீனப்படுத்தியுள்ளனர். எனவே இத்தகவலை ஆதாரமாக எடுக்க முடியாது. ‘‘முன்கருல் ஹதீஸ்”, ‘‘மத்ரூகுல் ஹதீஸ்” போன்ற கடும் பலவீனத்தைக் குறிக்கும் வார்த்தைகளால் இவ்வறிவிப்பாளர் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஹதீஸ் கலையின் விதிகளின் அடிப்படையில் மிகப்பலவீனமான ஒருவரின் அறிவிப்பை ஆதாரமாக எடுக்க முடியாது. அது மாத்திரமன்றி மிக பலவீனமான ஒரு அறிவிப்பு வேறு அறிவிப்புக்களால் பலமடையக்கூட முடியாது, அது வேறு அறிவிப்புக்களைப் பலப்படுத்தவும் கூட உதவாது. எனவே இடப்பற்றாக்குறையால்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திடலில் தொழுதார்கள் என்ற வாதம் தவறானதாகும்.
அதே போன்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் பெருநாள் தினத்தில் மஸ்ஜிதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்குமாயின் ஜும்மா தொழுகையிலும் அது ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் ஜும்மா தொழுகையும் திடலில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஜும்மாத் தொழுகைக்குக் கூடும் மக்களின் எண்ணிக்கைக்கும் பெருநாள் தொழுகைக்கு கூடும் மக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்க முடியாது.
அதே போன்று இடப்பற்றாக்குறைதான் காரணமாக இருந்தால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மஸ்ஜிதை விசாலப்படுத்தியிருப்பார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மஸ்ஜிதில் தொழுவது ஏனைய மஸ்ஜிதுகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். ஆனாலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகையை அங்கு நிறைவேற்றாமல் திடலில் தொழுவதைத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு இடப்பற்றாகுறைதான் காரணமாக இருந்திருக்குமாயின் அந்த மஸ்ஜிதின் சிறப்பை பெற்றுக்கொள்வதற்காக அதனை விசாலப்படுத்தி பெருநாள் தொழுகையையும் அங்கே நிறைவேற்றியிருப்பார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவ்வாறு செய்யாததினால் பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதே சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே பெருநாளில் ஒன்று கூடுவதற்கு மஸ்ஜிதில் போதியளவு இடம் இருந்தாலும் திடலில் தொழுவதே சுன்னாவாகும்.
மழைபெய்த ஒரு சந்தர்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் தொழுதார்கள் என்று அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி உள்ளது. இதனையும் சிலர் மஸ்ஜிதில் பெருநாள் தொழுவதற்கு ஆதாரம் காட்டுகின்றனர்.
இந்த செய்தி பலமானது என்று வைத்துக்கொண்டாலும் மழை பெய்ததற்காக - ஒரு நிர்பந்தத்திற்காகத் தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மஸ்ஜிதில் தொழுதார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும். அவ்வாறாயின் நிர்பந்தம் இல்லாத போது திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதே நபி வழி என்பதையும் விளங்க முடியும். பொதுவாக நிர்பந்தமான நேரத்தில் மஸ்ஜிதில் தொழுது கொள்ளலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனாலும் மேற்படி அறிவிப்பு பலவீனமானதாகும். ஏனெனில் ஈஸா இப்னு அப்தில் அஃலா என்ற நம்பகத்தன்மை அறியப்படாத அறிவிப்பாளரும், உபைதுல்லாஹ் அத்தைமி என்ற தனித்து அறிவிக்கும் போது பலவீனமான நிலையில் உள்ள ஒரு அறிவிப்பாளரும் அந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்பதிலும் மத்ஹபுகளில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என்பதிலும் இன்று மக்கள் மத்தியில் விழிப்புனர்வு ஏற்பட்டிருப்பதால் பல ஊர்களில் பெருநாள் தொழுகை திடலில் நிறைவேற்றப்படுகிறது. சிலர் இதனை எதிர்பதற்குக் களமிறங்கியிருப்பது வேதனைக்குறியதாகும். இவர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக பைஹகியில் இடம்பெற்றுள்ள மிகப்பலவீனமான அறிவிப்பை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். இதன் மூலம் மக்களைக் குழப்பி சுன்னாவைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.
இன்று அதிகமாக ஒரே ஊரில் பல மஸ்ஜிதுகளில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படுகிறது. இது சுன்னாவிற்கு மாற்றமானது மாத்திரமின்றி இவர்களின் மத்ஹபுக்கே மாற்றமானதாகும். ஏனெனில் ஊர் மக்கள் ஒன்று கூடுவதற்கு ஊரில் இருக்கும் ஒரு மஸ்ஜித் போதுமானதாக இல்லாதிருந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து திடலில் தொழுவதே சிறந்தது என்பது ஷாபி மத்ஹபின் கருத்தாகும்.
இன்னும் சில ஊர்களில் பல மஸ்ஜிதுகளில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றக்கூடிய மக்கள் பெருநாளில் ஒரே திடலில் கூடி தொழுகையை நிறைவேற்றுகின்றனர். இதுவே சுன்னாவிற்கும் ஒற்றுமைக்கும் உகந்ததாகும். அதுமாத்திரமின்றி ஷாபி மத்ஹபின் கருத்துக்கும் ஏற்புடையதாகும்.
எனவே பெருநாளில் ஊர் மக்கள் அனைவரும் ஒரே திடலில் கூடி தொழுகையை நிறைவேற்றுவதே சுன்னாவாகும். தொழுகை கடமையில்லாத மாதவிடாய் பெண்கள் கூட இந்த திடலுக்கு சமூகமளித்து தொழும் இடத்தில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழியுருத்தினார்கள். இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக்கொள்ளும் ஆடை ஒரு பெண்ணிடம் இல்லாவிட்டால் வேறு ஒரு பெண் அவளுக்கு ஒரு ஆடையை இரவலாக கொடுத்து அவள் பெருநாளின் ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்கு உதவ வேண்டும் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழியுருத்தியிருக்கிறார்கள். இந்த சுன்னாவை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் எம்மணைவருக்கும் அணுகூலம் புரிவானாக!
குறிப்பு:-மேலதிக விளக்கத்திற்கு ‘‘ ஸலாதுல் ஈதைன் பில் முஸல்லா ஹியஸ்ஸுன்னஹ்”

(صلاة العيدين في المصلى هي السنة)
என்ற இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நூலைப் பார்க்கவும்.

ஆக்கம்: ஹுஸைன் ரபீக் பயானீ மதனீ(BA honest, MA reading in Madeena university)

Tuesday, August 16, 2016

தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கை பிரிவுகள்.


‪‎1. JAQH‬/அஹ்லே ஹதீஸ்/ஸலபிய்யா
குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் கூட்டம்.. மற்றும் நபி(ஸல்) அவர்களை ஸஹாபாக்களின் புரிதலின்படி ஏற்பார்கள். அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாத் வழியில் இருப்பவர்கள்.


2. ‪‎சுன்னத்ஜமாத்‬ என்று சொல்லும் கூட்டம்:
தர்கா வழிபாடு, மௌலூத், சந்தனகூடு, வரதட்சனை, தாயத்து போன்ற அனாச்சாரங்களை கடைபிடிக்கும் கூட்டம்..அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்னும் குர்ஆன் வசனங்களை மறுத்து அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைத கொள்கையை கொண்டவர்கள்.. இவர்களிடம் சுன்னத்தும் இருக்காது ஜமாத்தும் இருக்காது.
‪‎
3. முரீத்கள்‬(sufi):
தங்களுக்குள் ஒரு ஷேக்கை ஏற்படுத்தி அல்லாஹ்வுக்கு செய்யும் ஸஜ்தாவை ஷேக்கின் காலில் விழுந்து செய்வார்கள். சென்னையில் இருந்து கொண்டே இவர்களின் ஷேக்குகள் மக்காவில் தொழுவார்களாம்.
‪‎
4. தப்லீக்‬:
தொழுகை இபாதத் போன்ற நன்மையின் பக்கம் மக்களை அழைப்பார்கள்.. ஆனால் தீமைகளை தடுக்க மாட்டார்கள். அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்னும் குர்ஆன் வசனங்களை மறுத்து அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைத கொள்கையை கொண்டவர்கள். ஹதீஸ் நூல்களை ஓரங்கட்டிவிட்டு "அமல்களின் சிறப்புகள்" என்ற இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் நிறைந்த நூலை படிப்பார்கள்.
‪‎5. TNTJ‬:
தவ்ஹீதை ஏற்றாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பீஜே என்ற தங்கள் தலைவரின் புத்திக்கு முரணானால் மறுக்கும் கூட்டம்.. ஸஹாபாக்களை பின்தள்ளிவிட்டு பீஜே என்ற தனிமனிதரை தக்லீத் செய்வார்கள்..ஹதீஸ்களை மறுக்க ஸஹாபாக்களை கிரிமினல், பதவி வெறி பிடித்தவர்கள் என்று விமர்சனம் செய்பவர்கள். தங்களைத்தவிர உலகிலுள்ள அனைவரும் காஃபிர்கள் என்பார்கள்..
தவ்ஹீதின் பெயரில் ஆரம்பம் செய்து ஷிர்க் இல் இருந்து மக்களை காப்பாற்றி " ஹதீஸ் மறுப்பு" என்ற குப்ர் இல் தள்ள கூடிய கூட்டம்.


இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய கூட்டங்கள்:
‪‎
1. காதியானிகள்‬( அஹ்மதியாக்கள்):
நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு மிர்சா குலாம் காதியானி என்பவரை கடைசி நபியாக ஏற்ற கூட்டம்.
‪‎2. அஹ்லே‬ ‪‎குர்ஆன்‬:
குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் பொய் என்று தூக்கி எறிந்த கூட்டம்.

---------------------------------------------

நாம் பின்பற்ற தகுதியானவர்கள் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் உத்தம தோழர்களும் தான்.


அல்லாஹ் கூறுகிறான்


9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.


இதற்கு அடுத்து வந்த அனைவரும் மார்க்கத்தின் அறிஞர்கள் என்ற அந்தஸ்தை அடைவார்கள். அவர்களில் காலம் மற்றும் கல்விக்கேற்ப ஏற்ற தாழ்வு உள்ளது. பின் வந்த அறிஞர்களும் மேலே சொன்ன நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் உத்தம தோழர்களையும் மட்டும் பின்பற்றியவர்களாக இருக்க வேண்டும்.


இது தான் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்னும் நேரான வழி என்று நான் கற்ற வரை அறிந்துள்ளேன். எனவே இந்த அடிப்படையில் உள்ளவர்களாக தமிழகத்தில் JAQH என்ற அமைப்பையும், இந்திய அளவில் அஹ்லே ஹதீஸையும், உலக அளவில் ஸலஃபிய்யா வையும் நான் காண்கிறான்.


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன, அடிப்படை கோட்பாடுகள் என்ன, அதற்கு வரலாற்றில் வேறு என்ன பெயர்களில் இமாம்கள் அழைத்தார்கள், அதற்கு மாற்றமான கொள்கை பிரிவுகள் என்ன என்பதை அறிய
https://youtu.be/Hw4JG3Q5zMM

Wednesday, August 10, 2016

அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது சரியா.

https://www.facebook.com/sooniyam2014/videos/1192923090739885/

அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது இவரது புதிய கருத்தாக தெரிகிறது. அதனால் தான் போல நீங்களும் நல்ல point கிடைத்து விட்டது என்று ஷேர் செய்துள்ளீர்கள். அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது பிஜே மொழி பெயர்பிற்க்கே முரணாக உள்ளது. பிஜே தர்ஜுமாவில்.

அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கேடு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதன் மூலம் என்பது சூனியத்தைக் குறிக்கவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.

அதன் மூலம் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு முன் சொல்லப்பட்டது என்ன? சூனியத்தால் காஃபிராகி விடுவோம் என்று அஞ்சி அதை விட்டு விட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடிய கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் மூலம் என்ற சொல் இதையே குறிக்கும். சூனியத்தைக் குறிக்காது.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையின் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்பட முடியும் என்று தான் இச்சொற்றொடர் கூறுகிறது. சூனியத்தினால் கேடு ஏற்படும் கூறவில்லை.

http://www.tamilquran.in/vilakkangal.php?id=495

அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது கீழுள்ள வசனத்திற்கும் முரணாக உள்ளது.

مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ64:11 مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 
64:11. நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.

எனவே அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது சரியா அல்லது பிஜே சொல்வது சரியா மேலும் இந்த ஆயத்தில் உள்ளது சரியா என்று சற்று ஆராய்ந்து சொல்லுங்கள்.


Tuesday, August 9, 2016

இவர் ஒரு அறிஞர், இவர் சுய ஆராய்ச்சி திறன் கொண்டவர் என்று நீங்கள் நம்பினால்? நீங்கள் TNTJ / SLTJ சொல்வதை ஆராய்ந்து தான் ஏற்று கொள்கிறீர்கள் என்று நினைத்தால் இந்த பதிவில் உள்ள குறைகளை கண்டறிந்து சொல்லுங்கள்.

http://www.sooniyam.com/?p=264

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.  

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  

நூல் : முஸ்லிம் (2876) 

ஐந்து தடவை பால் குடித்தால் பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை குர்ஆனில் இருந்தது. அதை மக்களும் ஓதிக் கொண்டிருந்தார்கள். பிராணி ஒன்று வீட்டினுள் நுழைந்து எழுதி வைக்கப்பட்டிருந்த அந்த வசனத்தை உண்டு விட்டது. அதனால் இன்று அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று மேலுள்ள செய்திகள் கூறுகிறது. பல காரணங்களால் இச்செய்தி தவறாகிறது.  1. குர்ஆனில் இருந்த ஒரு வசனம் தவறிவிட்டது என்று இந்தச் செய்தி கூறுகிது. ஆனால் குர்ஆனில் எதுவும் தவறாது. குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்று குர்ஆன் கூறுகிறது.  நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன் (15 : 9) குர்ஆனில் எந்த விதமான மாற்றத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது என்று குர்ஆன் கூறும் போது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆனில் இருந்த ஒரு வசனத்தை மக்கள் குர்ஆனுடன் சேர்க்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு நம்மிடம் இருக்கின்ற குர்ஆன் முழுமையானதல்ல. இன்னும் இரண்டு வசனம் அத்துடன் சேர்க்கப்பட வேண்டியுள்ளது என்று இந்த செய்தி கூறுகிறது. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியுôது.  2. குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டதைப் போல் பல நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.  மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். அல்குர்ஆன் (29 : 49) ஆனால் இச்செய்தி எழுதிவைக்கப்பட்டிருந்த தாளை பிராணி சாப்பிட்டதால் தான் அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று கூறுகிது. இது சரியான காரணம் அல்ல. ஏனென்றால் எழுதி வைக்கப்பட்ட தாள் தொலைந்து விட்டாலும் பலருடைய உள்ளங்களில் அந்த வசனம் பாதுகாக்கப்பட்டிருக்கும். வசனம் தொலைந்து போனதற்குச் சொல்லப்படும் தவறான இந்தக் காரணத்தை வைத்தே இது உண்மை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.  3. குர்ஆனுடைய தனித்தன்மை என்னவென்றால் பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் ஏக மனதாக குர்ஆன் தொகுக்கப்பட்டது. இக்குர்ஆனை தொகுக்கும் பணியை ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் செய்தார்கள். பல நபித்தோழர்களிடம் சென்று அவர்கள் வைத்திருந்த வசனங்களை ஒன்று திரட்டி பல நபித்தோழர்கள் முன்னிலையில் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்டது.  ஐந்து தடவை பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழர்களும் கூறவில்லை. குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்த பல நபித்தோழர்கள் இந்த வசனம் குர்ஆனில் உள்ளது என்று கூறவில்லை. குர்ஆனைத் தொகுக்கும் வேலை முடிக்கப்பட்ட போது ஏன் இந்த வசனத்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் கேட்கவும் இல்லை.  அந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் அல்லாஹ் இறக்கிய வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து அந்த சமுதாயம் முழுவதும் எப்படி மறந்திருக்கும்?  4. இந்த வசனம் பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டுவது தொடர்பானது என்று இந்தச் செய்தி சொல்கிறது. சிறுவர்களுக்குத் தான் பால்குடி சட்டம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கிறது. சாலிமுடைய சம்பவத்தை விளக்கும் போது இது பற்றி தெளிவாகக் கூறினோம். பால்குடி உறவு இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குத் தான் என்று குர்ஆன் கூறும் போது பெரியவர்களுக்கு 10 முறை பால் புகட்டுமாறு முரண்பாடாக குர்ஆன் கூறாது. 10 தடவையாக இருந்ததை 5 தடவையாக மாற்றி பருவவயதை அடைந்தவர்களுக்கு பால்புகட்டும் அசிங்கத்தை குர்ஆன் கூறுமா?  இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்பவர்கள் இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்று ஒரு தீர்ப்பு கூடத் தர மாட்டார்கள். இதைத் தங்களது வாழ்கையில் செயல்படுத்தவும் மாட்டார்கள். பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்ற சட்டம் குர்ஆன் கூறும் சட்டமாக இருந்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாமல் பல நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவ்வாரு யாரும் கூறவில்லை.  5. பால்குடி உறவு ஏற்படுவதற்கு ஐந்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக இரண்டுக்கு மேல் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் இந்த ஹதீஸ் மற்ற விமர்சிக்கப்படாத ஹதீஸ்களுடன் மோதுகிறது.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : உம்முல் ஃபள்ல் (ரலி) நூல் : முஸ்லிம் (2872) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) நூல் : நஸயீ (3257) 6. ஒருவரிடமிருந்து முரண்பட்ட பலவிதங்களில் செய்தி அறிவிக்கப்பட்டால் அந்தச் செய்திக்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் முள்தரப் (குளறுபடியானது) என்று சொல்வார்கள். இவ்வாறு முரண்பட்டு வரும் செய்திகள் அனைத்தும் நம்பகமான உறுதிமிக்க ஆட்கள் வழியாக வந்தாலும் முரண்பாடு வந்து விட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  ஐந்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நாம் விமர்சித்துக் கொண்டிருக்கின்ற ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் கூறுகிறது. பத்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் மூன்று முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஏழு முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கருதியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு விதத்தில் முரண்பட்டு அறிவிப்பு வருவதால் இந்த செய்தி குளறுபடியானதாகி விடுகிறது.  எனக்குப் பால்புகட்டுவதற்காக ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை அவர்களின் சகோதரியும் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளுமான உம்மு குல்சூம் (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். இவர் என்னிடம் வந்து செல்வதற்காக 10 முறை இவருக்கு நீங்கள் பால் புகட்டுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் (உம்மு குல்சூமிடம்) கூறினார்கள். உம்மு குல்சூம் எனக்கு மூன்று தடவை பால் புகட்டினார்கள். பின்பு அவர்கள் நோயுற்றதால் எனக்கு மூன்று தடவை தவிர அவர்கள் பாலூட்டவில்லை. உம்மு குல்சூம் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக 10 முறை பாலூட்டாததால் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து செல்லவில்லை.  அறிவிப்பவர் : சாலிம் பின் அப்தில்லாஹ்  நூல் : பைஹகீ பாகம் : 7 பக்கம் : 457  சஹ்லா (ரலி) அவர்களுடைய சம்வத்தில் சம்பந்தப்பட்ட சாலிம் வேறு. மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சாலிம் வேறு. சாலிம் பின் அப்தில்லாஹ் என்பவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் பிறக்கிறார். சாலிமிற்கு 10 முறை பால் புகட்டுமாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்மும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (2869) ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466              பல குழப்பங்கள் இந்தச் செய்தியில் இருப்பதால் எதிர்த் தரப்பினர் ஆதரிக்கும் அறிஞர்களில் பலர் நாம் எடுத்து வைத்திருக்கும் கேள்விகளை எழுப்பி இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் மாலிக் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளவில்லை.  சர்ஹஸீ குர்துபீ இப்னு அப்தில் பர் அலாவுதீன் என்ற இப்னுத் தர்குமானீ அபூ ஜஃஃபர் தஹாவீ நிலாமுத்தீன் நய்சாபூரி மற்றும் ஸர்கானீ உட்பட பலர் இந்த ஹதீஸ் தரும் தவறான கருத்துக்களை நிராகரித்துள்ளார்கள். குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இமாம் இப்னு ஹஜரின் கூற்று :  فتح الباري – ابن حجر , جزء 9 – صفحة 147  وأيضا فقول عائشة عشر رضعات معلومات ثم نسخن بخمس معلومات فمات النبي صلى الله عليه وسلم وهن مما يقرأ لا ينتهض للاحتجاج على الأصح من قولي الاصوليين لأن القرآن لا يثبت الا بالتواتر والراوي روى هذا على أنه قرآن لا خبر فلم يثبت كونه قرآنا ولا ذكر الراوي أنه خبر ليقبل قوله فيه والله أعلم இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார். குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது.  ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை.  நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147 அவர்களது விளக்கம். குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறும் வசனத்தில் திக்ர் என்ற வாசகம் வந்துள்ளது. திக்ர் என்பது குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளும். ஹதீஸைப் பாதுகாப்பதாகவும் அல்லாஹ் கூறுவதால் ஐந்து தடவை பால்குடித்தால் பால்குடிஉறவு ஏற்படும் என்ற வசனம் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இதைச் சரிகாணுபவர்கள் கூறுகிறார்கள்.  நமது விளக்கம். குர்ஆனில் இல்லாத ஒரு வசனம் இருந்ததாகக் கூறுவதோடு தங்களின் அலட்சியத்தால் காணாமல் போய்விட்டது என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதப்பட்டு வந்த அந்த வசனம் இதன் பிறகு ஓதப்படவில்லை. இன்று வரை நாமும் அந்த வசனத்தை ஓதுவது கிடையாது. குர்ஆனில் சேர்க்கப்பட்ட நிலையில் ஓதப்பட்டு வந்த ஒரு வசனம் தொலைக்கப்பட்டு ஓதப்படாமல் இருந்தால் அவ்வசனம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். மாறாக குர்ஆனில் மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதப்படும். இந்தக் கருத்தை அந்தச் செய்தி தரும் போது ஹதீஸின் மூலம் குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று முற்றிலும் முரணாக சொல்வது ஏற்புடையதல்ல.  அந்த இரண்டு வசனமும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றால் அந்த இரண்டு வசனத்தையும் இன்று தொழுகையில் இவர்கள் ஓதுவார்களா? பருவ வயதை அடைந்தவர்களுக்கு பெண்கள் 5 தடவை பால் புகட்ட வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? இறைவனுடைய இந்தச் சட்டத்தை செயல் படுத்துவார்களா? ஹதீஸையும் இறைவன் பாதுகாத்துள்ளான் என்பது சரியான கருத்து தான். இதை நாம் மறுக்கவே இல்லை. குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்ற விதி ஹதீஸைப் பாதுகாப்பதற்கான விதிகளில் ஒன்று. மேலுள்ள செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறிய செய்திகளுக்குள் இச்செய்தி அடங்காது. ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்துள்ளது. ஒருவரிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்தால் அந்த செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஹதீஸ் கலையின் விதியின் பிரகாரமும் இது பாதுகாக்கப்பட்ட செய்திகளுக்குள் அடங்காது.  அவர்கள் விளக்கம். பலருடைய அங்கீகாரம் இருந்தால் தான் குர்ஆன் என்று முடிவு செய்ய முடியும் என்று நாம் கூறினோம். ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் தான் தவ்பா என்ற அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் இருந்ததாக ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தி புகாரியில் (4989) வது எண்ணில் இடம் பெற்றுள்ளது. பலரது கூற்று அவசியமென்றால் ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் இருந்த இந்த வசனங்களை குர்ஆன் என்று முடிவு செய்திருக்கக் கூடாது.  ஹுசைமா மட்டும் அறிவித்த அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் அறிவிக்கும் இந்த வசனத்தையும் குர்ஆனில் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள்.  நமது விளக்கம். ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் இருந்த இரண்டு வசனம் குர்ஆனில் சேர்க்கப்பட்ட போது எந்த நபித்தோழரும் அதை மறுக்கவில்லை. மாறாக எல்லோரும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தவர்கள் கூட இதை மறுக்கவில்லை. இந்த அடிப்படையில் பல நபித்தோழர்களின் அங்கீகாரம் அந்த இரண்டு வசனத்திற்கும் கிடைத்துள்ளது. இது போன்ற அங்கீகாரம் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் செய்திக்குக் கிடைக்கவில்லை.  இது மட்டும் தான் குர்ஆன் என்று சிலர் முடிவு செய்திருக்கும் போது அவர்களுக்கு மாற்றமாக ஹுசைமா (ரலி) அவர்கள் இந்த வசனங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்ததை ஸைத் (ரலி) அவர்களுக்கு சொன்னார்கள். தங்களிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று அவர்கள் வாதிடவும் இல்லை.  ஆனால் இன்று நம்மிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று பல நபித்தோழர்கள் முடிவு செய்துவிட்ட போது இன்னும் இருக்கிறது என்று கூறுவது அந்த ஒட்டு மொத்த சமூகம் எடுத்த முடிவுக்கு எதிரானதாகும்.  ஹுசைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இரண்டு வசனங்களை நான் பெற்றுக் கொண்டேன் என்று ஸைத் (ரலி) அவர்கள் கூறுவதால் வேறு யாரும் இந்த வசனங்களைத் தெரிந்திருக்கவில்லை என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. எழுதி வைக்கப்பட்டதாக யாரிடத்திலும் இல்லை என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல நபித்தோழர்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருந்தார்கள்.  ஸைத் (ரலி) அவர்கள் குர்ஆனை நன்கு விளங்கியவராக இருந்தார்கள். அமானிதத்தைப் பேணக்கூடியவர். அறிவுள்ள இளைஞர். நபி (ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை எழுதக் கூடியவர். இவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைப் புகழ்ந்து சொல்கிறார்கள்.  நூல் : புகாரி (4986) வஹீயை எழுதி வந்த ஸைத் (ரலி) அவர்களுக்கு குர்ஆனைப் பற்றி நிறைய அறிவு இருந்தது. அதனால் தான் குர்ஆனைத் தொகுக்கும் பணிக்கு இவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் தேர்வு செய்தார்கள். குர்ஆனை மனனம் செய்திருந்தாலும் அதில் தவறு ஏதும் வந்து விடக் கூடாது என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் மற்ற மற்ற நபித் தோழர்களிடமிருந்த வசனங்களைத் திரட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.  ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது : நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்த போது அல்அஹ்ஸாப் எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள். (அந்த வசனம் இது தான்) இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். (33 : 23) அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி) நூல் : புகாரி (4784) பல முறை அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத தான் கேட்டிருப்பதாக ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த வசனம் குஸைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இருந்தது என்றும் கூறுகிறார்கள். தனக்கு நினைவில் இருக்கும் வசனத்தை ஏன் குஸைமாவிடம் சென்று கேட்கிறார்கள் என்றால் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான்.  இன்னும் குஸைமா (ரலி) அவர்கள் தன்னிடம் இருந்த குர்ஆன் வசனங்களை எழுத்தில் பாதுகாத்து வைத்திருக்கலாம். குர்ஆனுடைய பாதுகாப்பிற்கு இம்முறை ஏற்றது என்பதால் தனக்கு குர்ஆன் மனனமாக இருந்தாலும் எழுத்தை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று ஸைத் (ரலி) அவர்கள் கருதியுள்ளார்கள். இன்னும் குஸைமா (ரலி) அவர்கள் ஒரு நபருக்கு சமமானவர் அல்ல. நபி (ஸல்) அவர்கள் குஸைமாவின் சாட்சியை இரண்டு நபருக்கு நிகரானதாக ஆக்கினார்கள். எனவே தவ்பாவின் கடைசியில் இடம்பெற்றுள்ள இரண்டு வசனம் குஸைமாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் தான் இந்த இரண்டு வசனமும் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. 

All Rights Reserved By www.sooniyam.com - 2013-2014 http://www.sooniyam.com/?p=264 | சூனியம்.காம்

Tuesday, April 12, 2016

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (6:125)
“எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது“ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
ஷஹீஹ் புகாரி-71

Saturday, March 12, 2016

கேள்வி : சகுனம் உண்டா? ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 5093 ஐக் கண்டேன். சகுனமும் இருப்பது போல் வருகிறது. (இணைய தளம் - ரஹ்மத்.நெட், தமிழில் புகாரி), அதாவது....அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்). இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - என்பதாக வருகிறது. அப்படி என்றால்...புது பெண் வரவால், புது வீடு வாங்கினால், குதிரை (மற்றும் கால்நடை) வாங்கினால் அபசகுனமும் வர வாய்ப்பு உள்ளதா? அவை சரிஇல்லை என்றால் பல கஸ்டங்களும் சோதனைகளும் சுகவீனமும் வருமா? கெட்டதும் நடக்குமா? யாரும் இறந்து போக வாய்ப்பும் உள்ளதா? அவைகள் நலமுடன் இருந்தால் எல்லாம் நலமுடன் அமையுமா? எல்லாம் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். விரிவான விளக்கம் தாருங்கள். (ஹமீது ஹுஸைன் யாஹுமெயில் மூலமாக)
    சகுனம் தொடர்பாக வல்ல அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாக இவ்விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ளும்படி எச்சரிக்கிறான்.
    சூரத்துல் மாயிதா 90 ஆவது வசனத்தில், 'மது, சூது இவற்றுடன் அம்பு எறிந்து குறி (சகுனம்) பார்த்தலையும் ஷைத்தானின் வேலை என்று குறிப்பிட்டு, விசுவாசிகள் இவற்றிலிருந்து தவிர்ந்து தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறான்.
    மேலும் ரஸுல் (ஸல்) அவர்கள் சகுனம் பார்ப்பதில் வேறொரு வகையான பறவை சகுனத்தை தடை செய்துள்ளார்கள். பறவை சகுனம் என்பது குறிப்பிட்ட ஒரு பறவையை காணும் பொழுதோ அதன் சப்தத்தை கேட்பதைக் கொண்டோ அது பறக்கும் திசையை வைத்தோ ஒரு காரியம் நல்லவிதமாக அல்லது தீங்காக அமையும் என தீர்மானிப்பது.
    சகுனம் பார்ப்பது இணைவைப்பதாகும். நமக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் அதை இறைவன் தவக்குல் (எனும் உறுதியான நம்பிக்கை) மூலம் நீக்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 1663)
    தவிர மேலும் ஒரு ஹதீஸில் 'தொற்று நோயோ, சகுனமோ கிடையாது' (திர்மிதி 1664) என்றும் கூறியுள்ளார்கள். எனவே இவற்றிலிருந்து சகுனம் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
    இனி தாங்கள் சுட்டிக்காட்டிய புஹாரி ஹதீஸ் எண் 5093 யிலும் கூட குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அபசகுனம் (ஒருவேளை) நேரிடலாம் என்ற செய்தி தான் இருக்கிறதே அல்லாமல் இதன் மூலம் சகுனம் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது.
    இமாம் மாலிக் மற்றும் சிலர் இந்த ஹதீஸுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்கும் முகமாக, 'சிலவேளை ஒரு வீட்டில் குடியிருப்பதைக் கொண்டு, ஒரு பெண்ணை மணமுடிப்பது கொண்டு, ஒரு குதிரையை (வாகனத்தைக்) கொண்டு அல்லாஹ் தீமையை நாடியிருந்தால் இவை அபசகுனமாக அமையும்' என்று குறிப்பிடுகின்றனர்.
    சுனன் அபூதாவூதின் விளக்கவுரையான முஆலிமுன் சுனன் எனும் விரிவுரையின் ஆசிரியர் இமாம் கத்தாபி அவர்கள் சகுனம் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் வீடு, பெண், வாகனம், பணியாள் ஆகிய நான்கு விஷயங்களிலும் சகுனம் உண்டு எனக் குறிப்பிடுகின்றார்.
    இமாம் இப்னு கைய்யூம் அவர்களோ, '(மேற்குறிப்பிட்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாக கொள்ள முடியாது. எனினும் அல்லாஹ் சில விஷயங்களில் அபிவிருத்தியையும், சில விஷயங்களில் தீங்கையும் நாடியிருக்கிறான். பிள்ளைகளும் நண்பர்களும் அமைவதைப் போல. சில விஷயங்கள் (அல்லாஹ்வின் நாட்டப்படி) நன்மையானதாகவோ, சில நேரங்களில் தீமையானதாகவோ அமைந்து விடுகின்றன' எனக் குறிப்பிடுகின்றார்.
    எனவே இவற்றின் மூலம் அல்லாஹ் நாடினால் தீங்கும் நடக்கலாம், அதாவது இவை நமக்கு துரதிஷ்டமாக அமையலாம் என விளங்க முடிகிறது.
    இங்கு நாம் சகுனம் பற்றி சற்று விரிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
    பொதுவாக சகுனம் என்பது ஒரு சில காட்சிகளை வைத்து, தான் மேற்கொள்ளும் காரியத்தின் (செயலின்) முடிவை தீர்மானிக்கும் நடைமுறையாகும். அதாவது நாம் செல்லும் வழியில் பூனை குறுக்கிட்டால், அல்லது ஒரு விதவை எதிர்பட்டால், ஆந்தை அலறினால், நாய் நரி ஊளையிட்டால் இது போன்ற நிகழ்வுகளைக் கொண்டு தான் மேற்க் கொள்ளும் காரியத்தின் முடிவு மோசமானதாக இருக்குமென தீர்மானிப்பது. இதனால் மேற்குறிப்பிட்ட அல்லது இது போன்ற காட்சிகளை (நிகழ்வுகளை) அபசகுனமாக கருதுவது.
    இது போல காகம் கரைந்தால், எங்கோ மணி ஓசை கேட்டால், நரி முகத்தில் கண் விழித்தால், கண்ணாடியில் கண் விழித்தால் மற்றும் இது போன்ற சில காட்சிகளையும் நிகழ்வுகளையும் கொண்டு தான் மேற்கொள்ளும் காரியத்தின் முடிவு நலவாக இருக்குமென தீர்மானிப்பது. இவற்றை சுபசகுனமாக கருதுவது. இதைப் போலவே அம்பெறிந்து குறிபார்ப்பதும் (திருவுள)சீட்டு குலுக்கி எடுப்பதும் பறவை பறக்கும் திசை பார்ப்பதும் ஆகும்.
    ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள புஹாரி ஹதீஸ் எண் 5093 இல் அபசகுனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேற்குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இம்மூன்று விஷயங்களும் (வேறொரு அறிவிப்பின்படி நான்கு விஷயங்களும்) அல்லாஹ்வின் நாட்டப்படி மோசமான முடிவுகளை சிரமங்களை தரக்கூடியதாக அமையலாம் என்ற கருத்தில் தான் 'அபசகுனமாக' என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
    இவற்றிலிருந்து பாதுகாவல் பெற நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள முறை சரியான தீர்வாக அமையும்.
    நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் யாரேனும் மணம் புரிந்தாலும், அல்லது ஒரு பணியாளை வேலைக்கமர்த்தினால் (வேறொரு அறிவிப்பில் கழுதையை வாங்கினால் அதன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு என்றும் மேலதிகமாக வந்துள்ளது) இத்துஆவை ஓதிக் கொள்ளுங்கள்' என கற்றுத் தந்துள்ளார்கள்.
    அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வகைர மா ஜிபில்தஹா அலைஹ், வஅவூதுபிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜிபில்தஹா அலைஹ்.
    பொருள்: எங்களின் இறைவா! நிச்சயமாக நான் உன்னிடத்தில் இதிலுள்ள நன்மையையும் இயல்பாக இது எந்த நன்மையில் ஆக்கப்பட்டுள்ளதோ அதனையும் தரும்படி கோருகிறேன். மேலும் இதிலுள்ள தீமையையும் இயல்பாக இது எந்த தீங்கில் அமையப் பெற்றுள்ளதோ அதனையும் விட்டு உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா, ஹாக்கிம்)
    எனவே இந்நான்கு விஷயங்களிலும் இத்துஆவை ஓதிக் கொள்வது நமக்கு நன்மை பயக்கும்.
    மேலும் எந்த செயலை செய்ய நாடும் பொழுதும் அவற்றில் நலவை நாடி பிரார்த்தனை (இஸ்திகாரா) செய்யும் படியும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே இஸ்திகாரா மூலமும் நாம் நன்மையை அடையலாம். வல்ல அல்லாஹ் மிக அறிந்தவன்.

Thursday, February 18, 2016

மறுமை நாளின் அடையாளம், குரானை காட்டி ஹதீஸ் மறுக்கப்படுவது.

முரண்பாடு  ஹதீஸ்களில் உள்ளதா அல்லது உள்ளது போல் காட்டபடுகிறதா என்பதை என்னால் முடிந்த வரை முயற்சி செய்து சொல்கிறேன்?.


وعنه في ابن ماجه أن النبي - صلى الله عليه وسلم - قال: يوشك الرجل متكأ على أريكته يحدث بحديث عني فيقول بيننا وبينكم كتاب الله عز وجل فما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه ألا وإن ما حرم رسول الله مثل ما حرم الله.. رواه ابن ماجه.



மிக்தாம்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் நபி(ஸல்) கூறினார்கள் 

ஒருவர் தனது சாய்ந்த இருக்கையில் (வசதியும், அதிகாரமும் உள்ள ஒருவர்) அமர்ந்து இருக்கக்கூடிய மனிதரை பற்றி உங்ளை நான் எச்சரிக்கிறேன், 

அவரிடம் என்னுடைய ஹதீஸ்களில் ஒரு ஹதீஸை அறிவித்தால் அவர் சொல்லுவார் 

எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் மகத்துவமும் மேன்மையும் மிக்க அல்லாஹ்வுடைய குர்ஆன் உள்ளது, 

அதில் எதை நாம் ஹலால் என்று காண்கிறோமோ அதை ஹலால் என்று எடுத்துக்கொள்வோம் 
எதை ஹராம் என்று காண்கிறோமோ அதை ஹராம் என்று எடுத்துக்கொள்வோம் என்று சொல்வார். 

அறிந்த கொள்ளுங்கள் அல்லாஹ்வின் தூதர் எதை ஹராம் ஆகினார்களோ அது அல்லாஹ் ஹராம் ஆக்கியது போலதான் 

( இப்னு மாஜா)