ஹம்து ஸலவாத், கல்வி துஆ, அல்லாஹ்வின் ரஹ்மத், உதவி , பொருத்தம் துஆ
பரவலாக முஸ்லீம்கள் இப்பொழுது அல் குரானுடைய கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்
இன்னும் நன்றாக தெரிந்து இருந்தால் இன்னும் அதிகமாக முக்கியத்துவம் தருவார்கள்
ஆனால் முஸ்லீம்களின் அதிகமானவர்கள் நிலைமை, உலகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்
102:1 اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ
102:1. செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
102:2 حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ
102:2. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
57:20 اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًاؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ
57:20. அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
35:5 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاوَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ
35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (5:3)
நாளை மறுமையிலே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுவார்கள். இந்த உம்மத்
25:30 وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا
25:30. “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.
யார் இந்த குர்ஆணை நம்பாத மக்களுக்காக இறக்கப்பட்ட வசனம், இன்று முஸ்லீம்களுக்கும் பொருந்தி போகிறது
பொருளாதார உலக கல்விக்கு 20 முதல் 25 ஆண்டுகள் செலவழிக்கிறார்கள்.
நாம் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அந்த மார்க்கத்தின் வேதத்தை நான் எந்த அளவு கற்று இருக்கிறேன் ? மிக குறைந்த மக்கள் தான் மார்க்கத்தின் வேதத்தை கற்கிறார்கள்.
குரானின் கல்வியை கற்க கருவுகொடுக்க வந்த நம் அனைவரையும் பொருந்தி கொள்வானாக
அல் குரானை நாம் எவ்வாறு அணுகுவது
1. அல் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பேச்சாகும். அல்லாஹ்வின் கலாமாகிய அல் குர்ஆன் படைக்கப்பட்டது இல்லை. இது அல்லாஹ்வின் ஒரு தன்மை.
26:192 وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ
26:192. மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
26:193 نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ
26:193. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
26:194 عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ
26:194. (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
26:195 بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيْنٍؕ
26:195. தெளிவான அரபி மொழியில்.
26:196 وَاِنَّهٗ لَفِىْ زُبُرِ الْاَوَّلِيْنَ
26:196. நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
26:197 اَوَلَمْ يَكُنْ لَّهُمْ اٰيَةً اَنْ يَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ
26:197. பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?
87:6 سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰٓىۙ
87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
75:16 لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ
75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
75:17 اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ ۖ
75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:18 فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗۚ
75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:19 ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ
75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
2. அல் குர்ஆணின் நோக்கம் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கமும், சொர்க்கத்தின் பக்கமும் வழி காட்டும்
2:2 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
17:9 اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا ۙ
17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;
35:29 اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ
35:29. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
73:4 اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ
73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
முஸ்லீம்கள் குர்ஆனோடு தொடந்து பசுமையாக தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
சடங்குக்கு, சம்பிரதாயம், தாயத்துகளுக்கு பயன்படுத்த கூடாது.
அல்குர்ஆனை ஓதினால், பின்பற்றினால், நேசித்தால் தான் பரக்கத் கிடைக்கும்.
ஓதி ஊதி கொண்டால் நோய் நிவாரணமாகும்.
3. அல்குர்ஆனை முறையாக கல்வி கற்ற ஆசிரியரிடம் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் ஆறு சஹாபாக்களிடம் அல்குர்ஆனை கற்றுக்கொள்ள சொன்னார்கள்.
உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனை தானும் கற்று பிறர்க்கும் கற்றுக் கொடுப்பவர்தான்
73:4 اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ
73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
அலி (ரலி) கூறினார்கள் تَرْتِيْلًا என்றால் "உச்சரிப்பை சரிப்படுத்தி ஓதுங்கள். நிறுத்த வேண்டிய இடங்களை சேர்த்து ஓதவேண்டிய இடங்களை தெரிந்து ஓதுவது என்கிறார்கள்"
ஒவ்வொரு முஸ்லிமும் அல்குர்ஆனை சரியாக ஓத தெரிந்து கொள்ள வேண்டும்
அரபி மொழியை பொறுத்த வரையில் ஒரு எழுத்தை மாற்றினால் அர்த்தமும் மாறிவிடும்
إن أحدكم إذا قام في صلاته فإنه يُناجي ربَّه،
உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால், அவர் தம் இறைவனிடம் பேசுகிறார்.
3. அல்குர்ஆனை ஓதினால் சிபாரிசு செய்யும்
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவரிடம் பரிந்துரையை கேட்டவர்கள் அல்லாஹ்வுக்கு ஷிர்க் இணை வைத்துவிட்டார்கள்.
அல்குர்ஆனை முறையாக ஓதி பின்பற்றினால் அல்குர்ஆனும் சிபாரிசு செய்யும், அல்லாஹ்வின் நல்லடியார்களையும் அவருக்காக சிபாரிசு செய்ய வைப்பான்
2:255 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?
21:28 وَ لَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰ
இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள்.
4. ஏன் தஜ்வீத் முறைப்படி ஓதவேண்டும்
الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ
குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
எந்த இடத்தில ஷத்து இருக்கிறதோ, அதை விட்டு விட்டு ஓதினால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது - இமாம் ஷாபிஈ (ரஹ்)
اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ ، كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا ، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا
அல்லாஹ் எப்படி பேசினானோ அதே போன்று ஜிப்ரஈல் (அலை) அவர்கள் ஓதினார்கள், எப்படி ஜிப்ரஈல் (அலை) அவர்கள் ஓதினார்களோ அதே போன்று நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் எப்படி ஓதினார்களோ அதே போன்று ஸஹாபாக்கள் ஓதினார்கள். அதை தான் தஜ்வீத் சட்டமாக தஜ்வீத் கலை இமாம்கள் வகுத்து கொடுத்துள்ளார்கள்.
3:31 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.