Thursday, December 16, 2021

மன்ஹஜ் என்றால் என்ன ?

  لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا


உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், (மன்ஹஜ்) வழியையும் நாமே ஏற்படுத்தினோம். 5:48



مِنْهَاجً - மன்ஹஜ் என்றால் வழிமுறை, பாதை, பாடத்திட்டம், நடைமுறை, அணுகுமுறை என்றெல்லாம் அகராதிப் பொருள் ஆகும்(அல் மவ்ரித்). 


நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் ஒரு கூட்டம்  ஷியாக்களாக, கவாரிஜ்களாக, முஃதஸிலாக்களாகப் பிரிந்து புதிய கொள்கைகளை உருவாக்கி  குர்ஆனுக்குத் தான்தோன்றித் தனமான விளக்கங்களை அளித்து வழிகெட்டுச் சென்ற போது நபி வழியையும் நபித்தோழர்களின் வழியையும் பின்பற்றக் கூடியவர்கள் அவர்களிடமிருந்து தங்களைப் பிரித்து அடையாளம் காட்டுவதற்காக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று பெயரிட்டுக் கொண்டார்கள். 


73 கூட்டமாக இந்த சமூகம் பிரிந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த போது நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கிறோமோ அந்த வழியைப் பின்பற்றக் கூடியவர்களே வெற்றி பெறுவர் என்ற ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறு பெயரிட்டுக் கொண்டனர். 


இன்று அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டே ஷியாக்களின் பல செயல்பாடுகளையும் கடைபிடிக்கக் கூடியவர்கள் ஷிர்க்கான் பித்அத்தான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அந்த பழைய  பரிசுத்தமான வழிமுறையைப் பின்பற்றி சீர்திருத்தம் செய்த நன்மக்கள் நபி (ஸல்) அவர்களால் பரிசுத்த தலைமுறை என நற்சான்று வழங்கப்பட்ட முந்தைய மூன்று தலைமுறையினர் எவ்வழியில் நடந்தார்களோ அவ்வழி நடப்பவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்துவதற்காக ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்’ என்பதுடன் ‘ஸலஃபுகளின் வழிமுறைகளை(மன்ஹஜ்ஜை)ப் பின்பற்றுபவர்கள்’ என்று சேர்த்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. 


ஸலஃப் என்றால் முந்திச் சென்றவர்கள், முன்னோர்கள் என்பது பொருளாகும்.  மன்ஹஜ் ஸலஃப் என்றால் முந்தியவர்களின் வழிமுறை என்பதாகும். யார் இந்த முந்தியவர்கள்? குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த ஸஹாபாக்கள் அவர்களை அடுத்து வந்த தாபிஈன்கள்,  தபவுத் தாபியீன்கள் என்று மூன்று சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த நன்மக்கள்.


அவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று சொன்னவர்கள் எவருமே குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக இருந்தாலும் அந்த முன்னோர்களைத் தான் தக்லீது செய்ய வேண்டும், குர்ஆன் ஹதீஸை விட்டு விட வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக பிந்தைய பித்அத் வாதிகளின் வழிமுறையை விட்டுவிட்டு முந்தைய நன்மக்களின் வழியில் குர்ஆன் ஸுன்னாவை பின்பற்ற வேண்டும் என்று தான் சொன்னார்கள். 


அவ்வாறாக தூய்மையான கல்விக்கு அடித்தளமிட்டு எமக்கு முன் சென்ற அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ / ஸலஃப் மன்ஹஜ் அறிஞர்களின் பெயர்களில் சில:

(H- மரணித்த ஹிஜ்ரி ஆண்டு)


1. நபித்தோழர்களிலிருந்து அனைவரும்


2. தாபியீன்களிலிருந்து:


ஸயீத் இப்னு முஸய்யிப் (90H)


அபு அல்-ஆலியா ரபீஆ இப்னு மஹ்ரான் (93H)


அலீ இப்னு ஹுஸைன் ஜைனுல் ஆபிதீன் (93H)


உர்வா இப்னு ஸுபைர் (94H)


உபைதுல்லாஹ் இப்னு மஸுத் (94H)


அப்துல்லாஹ் இப்னு முஹைரீஸ் (99H)


உமர் இப்னு அப்துல் அஸீஸ் (101H)


முஜாஹித் இப்னு ஜப்ர் (104H)


அபான் இப்னு உஸ்மான் இப்னு அஃப்பான் (105H)


அல் காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபூபக்ர் (106H)


ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் (106H)


அல் ஹஸன் அல்-பஸரீ (110H)


முஹம்மது இப்னு ஸீரீன் (110H)


முஹம்மது இப்னு அலீ இப்னு ஹுஸைன் (114H)


அபூ ஸுஹைல் அந்-நாபீஃ (117H)



முஹம்மது அஸ்-ஸுஹ்ரீ (124H)




3. தபஉத் தாபியீன்களிலிருந்து:


முஹம்மது அஸ் ஸுபைதி (148H)


அப்துல்லாஹ் இப்னு அவ்ன் (151H)


அபூ ஹனீபா அந் நுஃமான் இப்னு தாபித் (150H)


அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர் (153H)


அப்துர் ரஹ்மான் அல்-அவ்ஸாயி (157H)


ஷுபாஃ இப்னு அல்-ஹஜ்ஜாஜ் (160H)


ஸுபியான் அத்-தவ்ரீ (161H)


ஸயீத் இப்னு அப்தில் அஸீஸ் அத் தனூஹ்கி (167H)


அல்-லைத் இப்னு ஸாத் (175H)


ஷரீக் இப்னு அப்துல்லாஹ் (177H)


ஹம்மாத் இப்னு ஸலமாஹ் (179H)


மாலிக் இப்னு அனஸ் (179H)



இஸ்மாயீல் இப்னு உல்யாஹ் (193H)




4. ஹிஜ்ரி 200லிருந்து - 700வரை:


இமாம் அப்துல்லாஹ் இப்னு அல்-முபாரக் (171H)


இமாம் ஹுஸைம் இப்னு பஷீர் அல் வாஸிதி (183H)


இமாம் முஹம்மத் இப்னு அல்-ஹஸன் அஷ்-ஷைபானி (189H)


இமாம் வகீ இப்னு அல்-ஜர்ராஹ் (197H)


இமாம் ஸுபியான் இப்னு உயைனா (197H)


இமாம் அப்துர்-ரஹ்மான் இப்னு மஹ்தீ (198H)


இமாம் யஹ்யா இப்னு ஸஈத் அல்-கத்தான் (198H)


இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபிஈ (204H)


இமாம் யஸீத் இப்னு ஹாரூன் (206H)


இமாம் அப்து அர்-ரஸ்ஸாக் அஸ்-ஸன்ஆனி (211H)


இமாம் அப்துல்லாஹ் இப்னு யஸீத் அல் முக்ரீ (213H)


இமாம் அப்துல் அஃலா இப்னு முஷிர் அத் டமஸ்கீ (218H)


இமாம் அஃப்பான் இப்னு முஸ்லிம் (219H)


இமாம் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அல்-ஹுமைதி (219H)


இமாம் உபைத் அல் காஸிம் இப்னு ஸல்லாம் (224H)


இமாம் நுஐம் இப்னு ஹம்மாத் (228H)


இமாம் யஹ்யா இப்னு மஈன் (233H)


இமாம் அபு ஹைதமா ஸுஹைர் இப்னு ஹர்ப் அந்-நஸாஈ (234H)


இமாம் அபுல்-ஹஸன் அலீ இப்னுல்-மதனீ (234H)


இமாம் அபூ பக்ர் இப்னு அபீ ஷைபா (235H)


இமாம் இஷாக் இப்னு ரஹாவைஹ் (238H)


இமாம் அபு தவ்ர் இப்ராஹீம் இப்னு காலித் (240)


இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (241H)


இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல்-புகாரீ (256H)


இமாம் முஸ்லிம் இப்னு அல்-ஹஜ்ஜாஜ் அல்-நைஸாபூரி (261H)


இமாம் அபீ ஸுறா அர்-ராஸி (264H)


இமாம் ஸாலிஹ் இப்னு அஹ்மத் இப்னு ஹன்பல் (266H)


இமாம் முஹம்மத் இப்னு வாராஹ் (270H)


இமாம் முஹம்மத் இப்னு யஸீத் இப்னு மாஜா (273H)


இமாம் அபூ தாவூத் ஸுலைமான் அல்-ஸிஜிஸ்தானி (275H)


இமாம் அபு முஹம்மத் இப்னு குதைபா அத்-தினவரீ (276H)


இமாம் அபூ ஹாத்திம் அர்-ராஸீ (277H)


இமாம் அபு ஈஸா முஹம்மத் அத்-திர்மிதி (279H)


இமாம் ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் அத்-துஸ்தரீ (283H)


இமாம் அபு அம்ர் இப்னு அபீ ஆஸிம் அஷ்-ஷைபானி (287H)


இமாம் அஹமத் இப்னு அபீ பக்ர் அஸ்-ஸுஹ்ரீ (292H)


இமாம் அல்-ஜுனைத் அல்-பக்தாதீ (297H)


இமாம் அஹமத் இப்னு ஸுஐப் அந்-நைஸாஈ (303H)


இமாம் முஹம்மத் இப்னு ஜரீர் அத் தபரீ (310H)


இமாம் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா (311H)


இமாம் அஹமத் இப்னு முஹம்மத் அல்-கல்லால் (311H)


இமாம் அபூ பக்ர் முஹம்மத் பின் இப்ராஹீம் பின் அல்-முன்திர் (318H)


இமாம் அபூ ஜாஃபர் அத்-தஹவீ (321H)


இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி (324H)


இமாம் இப்னு அபு ஹாத்திம் (327H)


இமாம் முஹம்மத் அல்-ஹஸன் அல்-பர்பஹாரி (329H)


இமாம் அஹமத் இப்னு ஸல்மான் அந் நஜ்ஜாத் (348H)


இமாம் முஹம்மத் இப்னு ஹிப்பான் (354H)


இமாம் முஹம்மத் பின் அல்-ஹுஸைன் அல்-ஆஜுர்ரீ (360H)


இமாம் அலி இப்னு உமர் அத்-தாரகுத்னீ (385H)


இமாம் இப்னு அபீ ஸைத் அல்-கைரவானி (386H)


இமாம் அபூ அப்துல்லாஹ் இப்னு பத்தாஹ் அல்-ஹன்பலீ (387H)


இமாம் இப்னு அபீ ஸம்னீன் (399H)


இமாம் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்-நைஸாபூரி (405H)


இமாம் அபுல்-காசிம் ஹிபதுல்லாஹ் அல்-லாலக்காஈ (418H)


இமாம் அபூ நுஐம் அல்-அஸ்பஹானி (430H)


இமாம் அபூ இஸ்மாயில் அஸ் ஸாபூனி (449H)


இமாம் அஹமத் இப்னு ஹுஸைன் அல்-பைஹகீ (458H)


இமாம் இப்னு அப்துல் பர் (463H)


இமாம் அபூ பக்ர் அல்-கதீப் அல்-பக்தாதி (463H)


இமாம் அஷ்-ஷரீஃப் அபு ஜாபர் அல்-ஹாஷிமி (470H)


இமாம் அபூ முதஃப்பர் அஸ்-ஸமானீ (489H)


இமாம் அபூ முஹம்மத் ஹுஸைன் அல்-பாகவீ (516H)


இமாம் அப்துல் காதிர் அல்-ஜீலானி (561H)


இமாம் அபூ தாஹிர் அஸ் ஸிலஃபீ (576H)


இமாம் அபூ முஹம்மத் இப்னு குதாமா அல்-மக்திஸீ (620H)


இமாம் இப்னு அஸ்-ஸலாஹ் அஷ்-ஷஹ்ராஸுரீ (643H)


இமாம் மஜ்த் உத்-தீன் இப்னு தைமிய்யா (652H)


இமாம் இப்னு அபீ ஷாமப் (665H)



இமாம் அபூ ஸகரிய்யா யஹ்யா அல்-நவவீ (676H)




5. ஹிஜ்ரி 700லிருந்து - 1200 வரை:


இமாம் இப்னு தகீக் அல்-ஈத் (702H)


இமாம் தகீ உத்-தீன் அஹமத் இப்னு தைமிய்யா (728H)


இமாம் அல்-ஹாபித் அல்-மிஸ்ஈ (742H)


இமாம் முஹம்மத் இப்னு அப்துல்-ஹாதி (744H)


இமாம் அபு அப்துல்லாஹ் அத்-தஹபீ (748H)


இமாம் முஹம்மத் இப்னு அல்-கைய்யும் அல்-ஜவ்ஸியா (751H)


இமாம் இஸ்மாயில் இப்னு உமர் இப்னு கதீர் (774H)


இமாம் அபூ இஷாக் அஷ்-ஷாதிபீ (790H)


இமாம் அல் ஹாபிழ் அஸ்-ஸர்கஸீ (794H)


இமாம் அல்-ஹாபிழ் இப்னு ரஜப் அல்-ஹன்பலீ (795H)


இமாம் இப்ராஹிம் இப்னு அஹ்மத் அல்-தனுகீ (800H)


இமாம் அல் ஹாபிழ் ஸைன் உத்-தீன் அல்-இராகீ (806H)


இமாம் இப்னு வஸீர் அல்-யமனீ (840H)


இமாம் அல்-ஹாபிழ் ஸிஹாப்-உத்-தீன் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (852H)


இமாம் அல்-ஹாபிழ் அஸ்-ஷவ்கானி (902H)


இமாம் ஜலால் உத்-தீன் அஸ்-ஸுயூத்தி (911H)


இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (974H)


இமாம் முஹம்மத் இப்னு அஹமத் அல்-ரம்லீ (1004H) 


இமாம் அஹ்மத் இப்னு அப்த் அல்-குத்தூஸ் அல்-ஷினவீ (1028H)


இமாம் அஹமத் இப்னு முஹம்மத் அல்-கஷஷி (1071H)


இமாம் உதுமான் இப்னு அஹமத் அந்-நஜ்தீ [1100H]


இமாம் இப்ராஹிம் இப்னு ஹஸன் அல்-குர்தி அல்-மதனீ (1101H) 


இமாம் அபுல் ஹஸன் அஸ்-ஸின்தீ (1132H)


இமாம் அப்துல்லாஹ் இப்னு ஸாலிம் அல்-பஸ்ஸ்ரீ (1134H)


இமாம் முஹம்மத் இப்னு இப்ராஹிம் அபூ தாஹிர் (1145H)


இமாம் முஹம்மத் ஹயாத் பின் இப்ராஹீம் அஸ்-ஸின்தீ (1163H)


இமாம் ஷா வலியுல்லாஹ் அத்-தெஹ்லவீ (1176H)


இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அஸ்-ஸன்ஆனி (1182H)


இமாம் முஹம்மத் அல்-ஸபரினீ (1183H)




6. ஹிஜ்ரி 1200லிருந்து தற்போது வரை:


ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்-வஹ்ஹாப் அத்-தமீமி (1206H)


ஷெய்க் ஸாலிஹ் பின் முஹம்மத் அல்-புல்லானீ (1218H)


ஷெய்க் ஸுலைமான் பின் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அப்துல்-வஹ்ஹாப் (1233H)


ஷெய்க் ஷாஹ் இஸ்மாயீல் ஷஹீட் தெஹ்லவீ (1246H)


ஷெய்க் முஹம்மத் பின் அலீ அஷ்-ஷவ்கானி (1250H)


ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் ஹஸன் ஆல் அஷ்-ஷெய்க் (1275H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்-ரஹ்மான் அபா புதைன் (1282H)


ஷெய்க் அப்துல்-லதீப் பின் அப்திர்-ரஹ்மான் பின் ஹஸன் ஆல் அஷ்-ஷெய்க் (1293H)


ஷெய்க் ஹமாத் இப்னு அதீக் (1301H)


ஷெய்க் ஸித்திக் ஹஸன் கான் (1307H)


ஷெய்க் இஷாக் இப்னு அப்துர்-ரஹ்மான் இப்னு ஹஸன் ஆல் அஷ்-ஷெய்க் (1319H)


ஷெய்க் ஸையித் நதீர் ஹுஸைன் தெஹ்லவி (1320H)


ஷெய்க் முஹம்மத் பஷீர் அஸ்-ஸஹ்ஸவானி (1323H)


ஷெய்க் ஹுஸைன் பின் முஹ்ஸின் அல்-யமனி (1327H)


ஷெய்க் ஜமால்-உத்-தீன் பின் முஹம்மத் அல்-காஸிமி (1332H)


ஷெய்க் சுலைமான் பின் ஸஹ்மான் (1349H)


ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்-ரஹ்மான் அல்-முபாரக்பூரி (1353H)


ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் நாஸிர் அஸ்-ஸீதீ (1376H)


ஷெய்க் ஹாபிழ் இப்னு அஹ்மத் அலீ அல்-ஹாகமீ (1377H)


ஷெய்க் அஹமத் பின் முஹம்மத் ஷாகிர் (1377H)


ஷெய்க் முஹம்மத் பின் அப்தில்-அஸீஸ் இப்னு மானி (1385H)


ஷெய்க் முஹம்மத் பின் இப்ராஹிம் பின் அப்துல்-லதீஃப் (1386H)


ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் யஹ்யா பின் அலீ அல்-முஅல்லிமீ (1386H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்-கராவீ (1389H)


ஷெய்க் முஹ்ஹிப் உத்-தீன் அல்-கதீப் (1389H)


ஷெய்க் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆல் அஷ்-ஷெய்க் (1389H)


ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்-ரஸ்ஸாக் ஹம்ஸா (1392H)


ஷெய்க் அப்துல்-ரஹ்மான் பின் காஸிம் அந்-நஜ்தீ (1392H)


ஷெய்க் அபூ முஹம்மத் அப்துல்-ஹக் பின் அப்துல்-வாஹித் அல்-காஸிமி (1392H)


ஷெய்க் முஹம்மத் அல்-அமீன் அஷ்-ஷன்கீதி (1393H)


ஷெய்க் முஹம்மத் கலீல் ஹர்ராஸ் (1395H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் ஹுமைத் (1402H)


ஷெய்க் இஹ்ஷன் இலாஹி ஸஹீர் (1407H)


ஷெய்க் முஹம்மத் தகீ-உத்-தீன் அல்-ஹிலாலி (1408H)


ஷெய்க் ஹமூத் பின் அப்துல்லாஹ் அத்-துவைஜிரி (1413H)


ஷெய்க் அபுல்-ஹஸன் உபைதில்லாஹ் பின் முஹம்மத் அல்-முபாரக்பூரி (1414H)


ஷெய்க் அப்துர்-ரஸ்ஸாக் அல்-அஃபீஃபீ (1415H)


ஷெய்க் முஹம்மத் அமான் அல்-ஜாமீ (1416H)


ஷெய்க் பதீ உத்-தீன் ஷா அர்-ராஷிதீ அஸ்-ஸின்தீ (1416H)


ஷெய்க் ஹமாத் பின் முஹம்மத் அல்-அன்ஸாரி (1418H)


ஷெய்க் மஹ்மூத் ஷாக்கிர் (1418H)


ஷெய்க் உமர் பின் முஹம்மத் ஃபல்லதாஹ் (1419H)


ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்-ஸுமாலீ (1420H)


ஷெய்க் அப்துல்-அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (1420H)


ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்-அல்பானி (1420H)


ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உதைமீன் (1421H)


ஷெய்க் முக்பில் பின் ஹாதீ அல்-வாதிஈ (1422H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்-ரஹ்மான் அல்-பஸ்ஸாம் (1423H)


ஷெய்க் அப்துஸ்-ஸலாம் இப்னு பர்ஜிஸ் ஆல் அப்தில்-கரீம்​ (1425H)


ஷெய்க் அப்துல்-காதிர் அல்-அர்னாஉத் (1425H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் காஉத் (1426H)


ஷெய்க் ஸபியுர்-ரஹ்மான் அல்-முபாரக்பூரி (1427H)


ஷெய்க் அப்துல்-கஃப்பார் ஹஸன் (1427H)


ஷெய்க் இப்ராஹிம் பின் முஹம்மத் ஆல் அஷ்-ஷெய்க் (1428H)


ஷெய்க் பக்ர் அபு ஸைத் (1429H)


ஷெய்க் அஹ்மத் பின் யஹ்யா அந்-நஜ்மீ (1429H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்-ரஹ்மான் அல்-ஜிப்ரீன் (1430H)


ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்-வஹ்ஹாப் அல்-பன்னா (1430H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் குதையான் (1431H)


ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துல்-அஸீஸ் அல்-அகீல் (1432H)


ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்-ஸுபையல் (1434H)  


ஷெய்க் ஸைத் பின் முஹம்மத் பின் ஹாதீ அல்-மத்ஹலீ (1435H)




^ ரஹிமஹுல்லாஹு அஜ்மயீன்




தற்போது வாழ்ந்து வருபவர்களில் (சிலர்):


ஷெய்க் அப்துல்-அஸீஸ் ஆல் அஷ்-ஷெய்க்


ஷெய்க் ஸாலிஹ் பின் முஹம்மத் அல்-லுஹைதான்


ஷெய்க் ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான்


ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் நாஸிர் அல்-பர்ராக்


ஷெய்க் அப்துல்-முஹ்ஸின் பின் ஹமாத் அல்-அப்பாத்


ஷெய்க் அப்துல்லாஹ் அல்-ஙுனைமீன்


ஷெய்க் முஹம்மத் பின் அலீ பின் ஆதம்


ஷெய்க் யஹ்யா அல்-முதர்ரிஸ்


ஷெய்க் அப்துல்-அஸீஸ் அர்-ராஜிஹி


ஷெய்க் அப்துர்-ரஹ்மான் அல்-அஜ்லான்


ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸுலைமான் பின் முஹம்மத் பின் முனீ


ஷெய்க் ரபீ பின் ஹாதீ அல்-மத்ஹலீ


ஷெய்க் அலீ பின் நாஸிர் அல்-ஃபாகிஹீ


ஷெய்க் ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் அல்-ஹுமைத்


ஷெய்க் ஸாலிஹ் பின் ஙானிம் அஸ்-ஸத்லான்


ஷெய்க் ஸாலிஹ் பின் ஸாத் அஸ்-ஸுஹைமீ


ஷெய்க் வஸி-உல்லாஹ் பின் முஹம்மத் அப்பாஸ்


ஷெய்க் ஸாலிஹ் பின் அப்துல்-அஸீஸ் ஆல் அஷ்-ஷெய்க்


ஷெய்க் அப்துல்-கரீம் அல்-குதைர்


ஷெய்க் அஹமத் இப்னு அலீ ஸியார் அல்-முபாரகீ


ஷெய்க் ஸாத் பின் நாஸிர் அஷ்-ஷத்ரீ


ஷெய்க் யஹ்யா இப்னு அலி அல்-ஹஜுரி




^ ஹபிதஹுல்லாஹ் அஜ்மயீன்

Sunday, November 7, 2021

நிம்மதி


நிம்மதியான தூக்கம் வேண்டுமா

 


அகீதா வாஸிதிய்யா - அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் பண்புகள்

 ஒரு மனிதன் முதலில் அறிய வேண்டியது அல்லாஹ்வை பற்றித்தான்


அல்லாஹ்வுடைய பண்புகளை அல்குர்ஆன்  எப்படி விவரிக்கின்றதோ, ஹதீஸ்கள்  எப்படி விவரிக்கின்றதோ

அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது.


வேறு விளக்கம் கொடுக்காமல் ஏற்றுக்கொள்வது

மறுக்காமல் ஏற்றுக்கொள்வது

உதாரணங்கள் சொல்லாமல் ஏற்றுக்கொள்வது

வடிவங்கள் சொல்லாமல் ஏற்றுக்கொள்வது


தத்துவவியல், சிந்தனையாளர்கள் அல்லாஹ்வின் தன்மைகளையும், பெயர்களையும் 

ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர்.


1. https://www.youtube.com/watch?v=uBwUN9_qUQ0



2. https://www.youtube.com/watch?v=HZUTRNkzMtE



3. https://www.youtube.com/watch?v=by7X19FoQjc



4. https://www.youtube.com/watch?v=_Qb-fTUR8hY



5. https://www.youtube.com/watch?v=EX4g9F_hJC0


6. https://www.youtube.com/watch?v=Tu4QhSeMVuA


7. https://www.youtube.com/watch?v=NEPasUYtGMU


8. https://www.youtube.com/watch?v=F86FxETy4tg


9. https://www.youtube.com/watch?v=04772NwwyDc


10. https://www.youtube.com/watch?v=ruNQMzQtFDA



Tuesday, October 12, 2021

கொள்கை பற்றிய 200 கேள்விகள் - ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)

கொள்கை பற்றிய 200 கேள்விகள்
அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)

தமிழில்: அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan.

வினா 1: மனிதர்கள் மீதுள்ள முதல் கடமை என்ன ?
விடை :

அல்லாஹ் மனிதர்களை எதற்காகப் படைத்தான், அவர்களிடம் என்ன ​உறுதிமொழி வாங்கினான் என்பதையும், மேலும் தூதர்களையும் அவர்களிடம் அனுப்பி, அவனது வேதங்ளையும் இறக்கினான், இம்மை​, மறுமை, சுவர்க்கம், நரகம் போன்றவைகளையும் படைத்தான் என்பதையும். மேலும் ​கியாமத் நாள் வருவதும் மீஸான் தராசில் நிறுக்கப்படுவதும், நன்மை​​தீமை ஏடுகள் வழங்கப்படுவதற்குமான உண்மைகளை​​ அறிந்து கொள்வதும் நம்புவதும் மனிதர்கள் மீதுள்ள முதல் கடமையாகும்.



வினா 2: அல்லாஹ் படைப்பினங்களை எதற்காகப் படைத்தான்?​​ ​​​ ​
விடை :

அல்லாஹ் தனது திருமறையில் இது சம்பந்தமாக பின்வருமாறு கூறுகின்றான்.​

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏
44:38. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ‌ؕ ذٰ لِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْا‌ۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِؕ‏
38:27. வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமேயாகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்.

وَ خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
45:22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கின்றான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
51:56. ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.



வினா 3: (அப்த்) அடிமை என்பதன் கருத்து என்ன?
விடை

அடிமை என்ற பதம் பொதுவாக அல்லாஹ்வின் படைப்புகளில் (உயிருள்ள, உயிரற்ற) அனைத்தையும்​ அடக்கிய போதிலும் குறிப்பாக முஃமின்களையே அது குறிக்கும் ஏனெனில் அவர்களே அல்லாஹ்வின் சங்கை மிக்க அடியார்களும் உள்ளச்சம் கொண்ட நேச​​ர்களுமாவார்கள். அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.

வினா 4: (இபாதத்) வணக்கம் என்றால் என்ன?
விடை

வணக்கம் என்றால் உள்ரங்கமான அல்லது வெளிப்படையான சொற்கள் செயல்கள் ரீதியில் அல்லாஹ் விரும்பக்கூடிய அணைத்தும், மேலும் அவைகளுக்கு முரன்பாடான அல்லது எதிரானவைகளில் இருந்து நீங்கியிருத்தலும் வணக்கமாகும்.


வினா 5: ஒரு செயல் எப்போது (இபாதத்) வணக்கமாக மாறும்?
விடை

அச்செயலில் இரண்டு விசயங்கள் முழுமையாக இருக்க வேண்டும் அவை,
1. முழுமையான கீழ்ப்படிவுடன்
2. முழுமையான நேசமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்.(…​​விசுவாசிகளோ அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக்கடுமை யானவர்கள்…)​ அல்பகரா 165.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சயமாக தங்கள் இரட்சகனின் பயத்தால் அஞ்சி எச்சரிக்கையாக இருக்கின்றார்களே அத்தகையோரும்) அல்முஃமினூன் 57

இவ்விரண்டையும் ஒரே வசனத்தில் இனைத்துக் கூறும் போது (…நிச்சயமாக, இவர்கள் யாவரும் நன்மைகளில் (மிகத் துரிதமாக) விரைபவர்களாக இருந்தார்கள், (நம்முடைய அருளை) ஆசித்தும், (நம் தண்டனையைப்) பயந்தும், நம்மை (பிரார்த்தனை செய்து) அழைப்பவர் களாகவும் இருந்தார்கள், அவர்கள் (யாவரும்) நம்மிடம் உள்ளச்சமுடையோர்களாகவும் இருந்தார்கள்.


வினா 6; ஒரு அடியான் (ரப்பை) அவனைப் படைத்து பரிபாலித்து பாதுகாப்பவனை​​​ நேசிப்பதற்கான அடையாளம் என்ன ?

விடை:

ஒரு அடியான் தனது ரப்பை நேசிப்பதின் அடையாளம் அல்லாஹ் நேசிப்பவற்றை அவன் நேசிப்பதும் அல்லாஹ்வுக்கு கோப மூட்டக்கூடிவைகளைத் தவிர்த்தும் அவனது கட்டளைகளை ஏற்று அவனது விளக்கள்களைத் தவிர்ந்துக் கொள்வான்​​, மேலும் அல்லாஹ்வின் நேசர்களை நேசித்து அவனது விரோதி களைப் பகைத்துக்கொள்வான். எனவே தான் அல்லாஹ்வுக்காக​ நேசிப்பதும் அவனுக்காகவே பகைத்துக் கொள்வதும் ஈமானின் பலமான கயிராகும்.

Wednesday, October 6, 2021

ஆதாரமற்ற வரலாற்றுச் செய்திகள்

 இந்தியாவுக்கு தமீமுல் அன்ஸாரீ, உக்காஷா, மாலிக் பின் தீனார் என 3 நபித்தோழர்கள் வருகை தந்ததாகவும் அவர்களின் அடக்கஸ்தலங்கள் அங்கிருப்பதாகவும் தமிழுலகில் தொகுக்கப்பட்ட பல நூட்களில் காணமுடிகின்றது. இவை ஆதாரமற்ற செய்திகளாகும் என்பது மாத்திரமின்றி பல வரலாற்றுச் சான்றுகளோடு முரண்படுவது மாத்திரமின்றி இதனை எழுதியவர்களுக்கும் இஸ்லாமிய வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் காட்டுகின்றது.


முதல் நபித்தோழரான தமீமுத்தாரி அல்அன்ஸாரி ரழி அவர்கள் கிறிஸ்தவராக இருந்து நபியவர்களின் இறுதிக்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் அவர்கள் மதீனாவிலிருந்து ஷாமுக்கு இடம்பெயர்ந்து அங்கு மரணித்தார்கள் என்று மாத்திரமே வரலாற்று நூட்கள் குறிப்பிடுகின்றன. பார்க்க இப்னு ஹஜரின் அல்இஸாபா (1/ 488)

உக்காஷா ரழி அவர்களையும் இப்பட்டியலில் சேர்ப்பது நகைப்புக்கிடமானது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் அவர்கள் அபூபக்ர் ரழி அவர்களின் காலத்தில் நடைபெற்ற மதம்மாறியவர்களுடனான போரில் ஷஹீதாகி விட்டார்கள். அரபு நாட்டில் மரணித்தவரின் கப்ர் எவ்வாறு இந்தியா வந்தது?! பார்க்க இப்னு ஹஜரின் அல்இஸாபா (4/ 440)

மாலிக் இப்னு தீனார் என்ற ஒரு நபித்தோழரின் அடக்கஸ்தலமும் இந்தியாவில் உள்ளது என்பதுதான் அனைத்தையும் மிஞ்சிய அதிசயமாகும். அவர் ஒரு நபித்தோழரே கிடையாது மாறாக அவர் தாபிஈன்களைச் சார்ந்தவர். ஈராக்கில் மரணித்த அவரது அடக்கஸ்தலம் எவ்வாறு இந்தியா வந்தது என்பதுதான் புரியவில்லை. பார்க்க இமாம் தஹபியின் ஸியர் அஃலாமின் நுபளா (5/ 362) ஸர்கலியின் அல்அஃலாம் (5/ 261)

மேற்கூறிய தவறான தகவல்கள் வெறும் வாய்ப்பேச்சுகளாக மாத்திரமின்றி பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுகள், வரலாற்று நூட்கள் என்பவற்றில் பிரபல எழுத்தாளர்கள், ஆய்வாளர்களால் எவ்வித விமர்சனமுமின்றி முன்வைக்கப்படுவதனால்தான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

Abdullah Uwais Meezani
M.A KSA, PhD researcher
Special in Thafseer
King Saud University
Riyadh,KSA.

Friday, September 10, 2021

 இஸ்லாம் முஸ்லிம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?.


இஸ்லாம் என்றால் இறை கட்டளைக்கு அடி பணிதல் என்பது அர்த்தம்.

ஒரு இறைவனை வழிபடுவதுடன் அவனுடைய கட்டளைகளுக்கு அடிபணிவது முஸ்லிம்.

இந்த சொற்கள் பெருமை அடிப்பதற்கான சொற்கள் அல்ல.

ஓரிறைக் கொள்கையை வாய்மையுடன் ஏற்று வாழாமலும் இறைக் கட்டளைக்கு கீழ்படியாமலும் இருப்பவர்களை குறித்து அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று குர்ஆனில் பல வசனங்கள் எச்சரிப்பதை காணலாம்.

 மறுமையை நிரந்தரமாக எடுத்துக் கொண்டவர்களின் நிலையும் நாமும்


இவ்வுலகத்தின் நிலையும் மறுமையின் நிலையும்


6:32
وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே toசிறந்தது. விளங்க மாட்டீர்களா?

3:185.
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

(அல்குர்ஆன் 57:20)
اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருள் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.


நாம் ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம், பிறகு ஏன் மரணிக்கிறோம்
ஆடு மாடு எப்பவும் அடுத்து என்ன சாப்பிடுவது என்று தான் பார்க்கும்

மறுமையின்மீது நம்பிக்கை உள்ளோர்க்கு நன்மையின் மீது ஆசை இருக்கும்
மறுமையை நம்பியவர்கள் அதிகமாக அனுப்பி குறைவாக அனுபவித்தார்கள்
சகாத் 2.5%, ஏராளமான கேள்விகள்
ஸஹாபாக்கள் 2.5% போன்ற சிறியதை வைத்துக்கொண்டு மீதத்தை கொடுத்தார்கள்
ஆயிஷா (ரலி) வீட்டில் ஆட்டு கறி அறுத்த சம்பவம். குடுத்தது மறுமையில் மீதமாயிருக்கும்
மனிதர்களையும் ஜின்களையும் வணங்குவதற்காக அல்லாஹ் படைத்தான்
நேரத்தை நாம் எவ்வளவு அல்லாஹ்வை வணங்க செல்வழிக்கின்றோம்
குறைந்தபட்சம் எண்ணத்திலும், நாவிலும் வணங்குகிறோமா
எங்கு பேசினாலும் துன்யா
எதை நீங்கள் அதிகமாக கேட்கின்றோர்களோ, பேசுகிறோர்களோ, நினைகிறோர்களோ அதுதான் உங்களுக்கு முக்கியம்
தொழுகையில் எதை நினைக்கிறோமோ அது தான் நமது உள்ளம் முழுக்க இருக்கும்
மறுமையின்மீது நம்பிக்கை உள்ளோர்க்கு நனமையின் செய்வது எளிதாக இருக்கும்
கண் தெரியாத ஸஹாபிகு அதான் கேட்டால் தொழுகைக்கு வாருங்கள். இது எப்படி அவர்களுக்கு எளிதாக இருந்தது
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸைப் பாருங்கள் :
கண் தெரியாத ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! பள்ளிக்கு அழைத்து வரும் வழிகாட்டி எனக்கு இல்லை என்று குறிப்பிட்டு, தனக்கு வீட்டில் தொழ அனுமதி வழங்கும் படி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். அவர் திரும்பிச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூப்பிட்டு, நீ தொழுகைக்கான அழைப்பைச் செவியுறுகின்றாயா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நீ பள்ளிக்கு வந்து விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம்)

20 நிமிடம் குர்ஆன் , 10 நிமிட திக்ரில் கொட்டாவி
மறுமையை தூரமாக பார்ப்பார்கள்,

Wednesday, April 28, 2021

சலப், சலபி – சரியான புரிதல்!

 சலப், சலபி – சரியான புரிதல்! 

#மௌலவி #அப்துர் #ரஹ்மான் #மன்பஈ 


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


இந்த வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.


சலஃப் என்ற வார்த்தைக்கு முன்னோர் என்பது பொருள். இது அஸ்ஸலஃபுஸ் ஸாலிஹ் - நல்ல முன்னோர் - என்பதின் சுருக்கம். 


சலஃபி என்ற வார்த்தைக்கு முன்னோரைச் சார்ந்தவர் என்பது பொருளாகும் அதாவது நல்ல முன்னோரின் வழியில் நடப்பவர் என்பது கருத்து.


மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகளை நல்ல முன்னோர் எவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பவர், குர்ஆனையும் ஹதீஸையும் அவர்கள் எவ்வாறு அணுகினார்களோ அதே முறையில் அணுகுபவர் என்ற கருத்திலேயே குர்ஆன், ஹதீஸை பின்பற்றும் மக்கள் சலஃபி என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். 


நல்ல முன்னோர் குர்ஆனையும் ஹதீஸையும் அணுகிய முறை என்பது சுய கருத்து, மனோ இச்சை, தனது கூட்டத்தின் கருத்து ஆகியவற்றையெல்லாம் விட இவ்விரண்டுக்கும் முன்னுரிமை வழங்கி இரண்டையும் ஏற்று நடப்பதாகும்.


மேலும் அடிப்படை நம்பிக்கைகளான அல்லாஹ், அவனது பண்புகள், விதி உள்ளிட்ட நம்பிக்கைகளிலேயே சுய கருத்துக்களை நுழைத்ததால் வழிகேடுகள் தோன்றின. இதுபோன்ற வழிகேடுகளுக்கு அப்பாற்பட்டு தூய்மையான நம்பிக்கைகளை கொண்டவர்களாக இருந்த சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉதாபிஈன்கள் ஆகியோரின் வழிமுறையை குறிப்பிடுவதற்கும் சலஃப் வழிமுறை என்ற வாசகம் பயன்படுத்தப்படுகிறது.


இந்த சரியான அணுகுமுறைக்கு மாற்றம் செய்த கெட்ட பின்னோரால்தான் முஸ்லிம் உம்மத்தில் குழப்பங்களும் வழிகேடுகளும் ஏற்பட்டன. தவறான அணுகுமுறையால் வழி கெட்டுப்போனவர்கள் தாமும் குர்ஆன் ஹதீஸ் வழியில் இருப்பதாக வாதம் செய்து கொண்டிருப்பதால் சரியான அணுகுமுறை கொண்டவர்கள் ஒரு அடையாளத்துக்காக சலஃபி என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர் அவ்வளவுதான். 


இது ஒரு ஜமாஅத்தின் பெயரல்ல. பிரிவு அல்ல.


சரி! மேற்கண்ட கருத்தில் ஒருவர், தான் நல்ல முன்னோரின் வழிநடப்பதாக சொல்லிக்கொள்ளலாமா? சொல்லிக்கொள்ளலாம்!


அல்லாஹு தாஆலா நபிமார்கள் குறித்தும் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நல்லோர்கள் குறித்தும் பேசிவிட்டு, “இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால் இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக” என்று நபிக்கு கூறுகிறான்.(அல்குர்ஆன் 6: 90).

வஹியின் மூலம் வழங்கியிருப்பதையே பின்பற்ற வேண்டும் என்று நபிக்கும் நமக்கும் குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தியுள்ள அல்லாஹ் மேற்கண்டவாரும் கூறியுள்ளான். இரண்டையும் முரண்பாடில்லாமல் புரிந்து கொள்கிறோம். இது போலவே சலப் வழிமுறையில் நடப்பது என்பது குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதற்கு முரணல்ல.

மேற்கண்ட வசனத்தை போலவே, “பின்னர் நேர்மையாளரான இப்ராஹிமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும் என்று நாம் உமக்கு வஹி அறிவித்தோம்” (16:123) என்ற வசனத்தின் கருத்தும் அமைந்துள்ளது.

இன்னொரு வசனம்: அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவ மன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். (4: 26)

நம்மை குர்ஆன் வழியிலும் நபியின் வழியிலும் நடக்க வேண்டுமென்று பல இடங்களில் வலியுறுத்தும் அல்லாஹ் இப்படியும் சொல்கிறான்.

இது சரிதான் எனும்போது குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுபவர்கள் நல்ல முன்னோரின் வழிமுறையில் நடப்பதாக சொல்வதும் சரிதான். இந்த கருத்தில்தான் நபித்தோழர்கள் உள்ளிட்ட மார்க்கத்தை நமக்கு எத்திவைத்த நல்லோர் எல்லாம் நபிதோழர்களையும் நல்ல முன்னோரையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறுகின்றனர். உதாரணத்துக்கு சிலருடைய கூற்றுக்களை கீழே தருகிறேன்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முன்மாதிரியை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால் நபித்தோழர்களை முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள்ளவும். அவர்களே இந்த சமுதாயத்தில் மிக நல்ல உள்ளம் கொண்டவர்கள், ஆழமான கல்வி உடையவர்கள், குறைவாக சிரமம் எடுத்துக் கொள்பவர்கள், நேர்வழியில் நிலையானவர்கள், மிக அழகிய நிலையை உடையவர்கள். தனது நபியின் தோழமைக்காக அல்லாஹ் தேர்வு செய்த கூட்டம். எனவே அவர்களின் சிறப்பை ஒப்புக்கொள்ளுங்கள், அவர்களின் அடிச்சுவடுகளில் அவர்களை பின்பற்றுங்கள். ஏனெனில் அவர்கள் நேரான வழியில் இருந்தனர்.

(நூல்: ஜாமிஉ பயானில் இல்மி வபழ்லிஹி )


மிகப் பெரிய ஹதீஸ் அறிவிப்பாளரும் தபஉத் தாபியீன்களில் மூத்தவருமான அல் அவ்ஜாயி (ரஹ்) கூறுகிறார்கள்: மக்கள் உன்னை புறக்கணித்தாலும் முன் சென்றவர்களின் அடிச்சுவடுகளை நீ பற்றிப்பிடி! மனிதர்களின் கருத்துக்களை குறித்து எச்சரிக்கையாக இரு – அவர்கள் அலங்காரமாக பேசினாலும்!
(நூல்: அஷ்ஷரீஆ (ஆஜுரி), ஷரபு அஸ்ஹாபில் ஹதீஸ் )

இப்னு மஸ்ஊத்(ரலி), அல் அவ்ஜாயி (ரஹ்) ஆகியோர் கூறியிருப்பது போன்று நல்வழியில் நடந்த அக்கால பெரியோர் பலரும் கூறியுள்ளனர். இக்காலத்தில் சிலர் சொல்வது போல் சலபுக்களின் வழிமுறையில் நடப்பது வழிகேடு என்றால் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அல் அவ்ஜாயி (ரஹ்) அவர்களும் வழிகேட்டை போதித்த வழிகேடர்கள் ஆவார்கள். (நவூது பில்லாஹ்) வழிகேடர்கள் என்றால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்றாகும். இவர்கள் இப்படிச் சொல்வார்களா?
இது போல் குர்ஆன், ஹதீஸை நிலை நாட்டுவதற்காக பாடுபட்ட பெரிய அறிஞர்களும் சலபுக்களின் வழிநடக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்கள்.
இப்னு தைமியா (ரஹ்) கூறுகிறார்கள்: சலபுக்களின் வழியை வெளிப்படுத்தி அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் மீது குறையில்லை…. நிச்சயமாக சலபுக்களின் வழி சத்தியமானதாக தவிர வேறு விதமாக இருக்காது.(நூல்: மஜ்மூஉல் பதாவா – பா:4 பக்: 149)
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுவது: முழுமையான நன்மை என்பது சலபுஸ் சாலிஹை பின்பற்றுவதிலும் நபியின் ஹதீஸ் பற்றிய அறிவை அதிகரித்துக் கொள்வதிலும் உள்ளது…. (பத்ஹுல் பாரி- பா: 6 பக்: 505)
இதுபோல் மிகப் பெரிய இமாம்கள் பலரும் கூறியுள்ளார்கள். இவர்களெல்லாம் வழிகெட்டவர்கள் அல்ல.
ஆக மேற்கண்ட் விளக்கங்களின் படி நேர்வழியில் நடக்கும் ஒருவர், தாம் “சலபுஸ் ஸாலிஹ்” உடைய வழிமுறையில் நடைபோடுவதாக சொல்லிக் கொள்வது சரியான நடைமுறைதான்.
இங்கு முக்கியமான ஒரு விசயத்தைக் குறித்து பேசியாக வேண்டும். அது, வணக்கவழிபாடுகளிலும் வாழ்க்கை நடைமுறை சட்டங்களிலும் சலபுக்களின் சொல், செயலை அப்படியே பின்பற்றி நடக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் “சலபுக்களின் வழிமுறை” என்ற வாசகம் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த அர்த்தத்தில் இந்த வாசகம் பயன்படுத்தப்படுவதாக சித்தரிப்பது பெரிய தவறாகும். நாம் மேலே விளக்கியுள்ள கருத்திலேயே நன்மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
அப்படியானால் சலபுக்கள் என்ற நல்ல முன்னோர் மார்க்க சட்டங்கள் தொடர்பாக கூறியுள்ள, நடைமுறைப்படுத்தியுள்ள விசயங்களை எவ்வாறு அணுகுவது?
முதலில் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும்! குர்ஆனிலும் ஹதீசிலும் தெளிவாக கிடைக்கும் சட்டங்களில் சலபுக்களோ மற்றவர்களோ என்ன சொல்லியிருக்கிறார்கள், என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை.
குர்ஆனிலும் ஹதீஸிலும் ஒரு சட்டம் வெளிப்படையாக கிடைக்காவிட்டாலும் அல்லது கிடைத்தாலும் அதை செயல்படுத்துவது எவ்வாறு என்பதில் தெளிவு கிடைக்காவிட்டாலும் குர்ஆனையும் ஹதீஸையும் நன்கு அறிந்தவர்கள் வாயிலாக அதனை தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் இன்று வரை பொதுவாக முஸ்லிம்களின் நிலை. மார்க்கம் கற்றவர்களும் கூட சில விசயங்களுக்கான தீர்வுகளை தம்மை விட நன்கரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். முந்தைய அறிஞர்கள் எழுதியதை படித்து தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் இது போன்ற நிலைகளில் முஸ்லிம்கள் சஹாபாக்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அடுத்து தாபியீன்கள், தபவுத்தாபிஈன்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மேற்கண்ட காரணத்தினால்தான் மூல ஹதீஸ் நூல்கள் ஒவ்வொன்றிலும் சஹாபாக்களின் கூற்றுக்களும் செயல்களும் நூற்றுக்கனக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறை அறிஞர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவறான நடைமுறையாகவும் வழிகேடாகவும் இருந்தால் எல்லா ஹதீஸ் நூற்களின் ஆசிரியர்களும் இப்படி செய்திருக்க மாட்டார்கள். சஹாபாக்களின் கூற்றுக்களும் செயல்பாடுகளும் ஹதீஸ் நூற்களில் கணிசமான அளவு இடம் பெறுவதால் இவை “ஹதீஸ் மவ்கூப்” என்று ஹதீஸில் ஒரு வகையாக ஆக்கப்பட்டுள்ளது. அசர் என்றும் குறிப்பிடப்படும்.

இவ்வாறு ஹதீஸ் நூல்களில் இடம்பெறும் சஹாபாக்களின் சொல், செயல்களுக்கு ஆதாரமாக புஹாரியிலிருந்து மட்டும் மிகச் சில உதாரணங்களை குறிப்பிடுகிறேன்.

இமாம் புகாரி அவர்கள் பெருநாள் குறித்த ஹதீஸ்களை பதிவு செய்யும்போது இவ்வாறு எழுதுகிறார்கள்:

“பாடம்: பெருநாள் தொழுகை தவறிவிட்டால் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும்…. (பெருநாள் தொழுகை தவறிவிட்ட போது) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமை இப்னு அபீ உத்பாவுக்கு ஆணையிட்டு (பஸ்ராவிலிருந்து ஆறு மைல் தொலைவிலிருந்த) ஸாவியா எனும் இடத்தில் தம் மனைவி மக்களைத் திரட்டி நகரவாசிகள் தொழுவது போன்று (இரண்டு ரகஅத்துகள் ) தொழு(வித்)தார்கள்”.

இங்கு பெருநாள் தொழுகை தவறினால் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்ற தலைப்புக்கு ஆதாரமாக அனஸ் (ரலி) அவர்களின் செயலை இமாம் அவர்கள் ஆதாரமாக எழுதுகிறார்கள். இதற்குக் கீழே, “பெருநாள் தொழுகை தவறிவிட்டால் (தனியாக) இரண்டு ரகஅத்துகள் தொழ வேண்டும்” என்ற அத்தாஉ (ரஹ்) அவர்களின் கூற்றையும் குறிப்பிடுகிறார்கள். (அத்தாஉ அவர்கள் பிரபலமான தாபஈ)
(பார்க்க: புகாரி 986 வது ஹதீசுக்குப்பின் )
மற்றொரு இடத்தில், “உயிரிணத்திற்கு பதிலாக உயிரினத்தையும் அடிமைக்கு பதிலாக அடிமையும் கடனாக (பிறகு தருவதாக) விற்பது” என்று தலைப்பிட்டுள்ள இமாம் புகாரி அவர்கள் கீழ்வரும் நபித்தோழரின் செயல்பாட்டை பதிவு செய்கிறார்கள்: “ஒட்டகத்தின் சொந்தக்காரர் தமது சொந்தப் பொறுப்பில் ரபதா எனுமிடத்தில் அதை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இப்னு உமர் (ரலி) அவர்கள் நான்கு ஒட்டகங்களை கொடுத்து பயணம் செய்வதற்கேற்ற ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்”
இதனை தொடர்ந்து வேறு இரு சஹாபாக்களின் சொல்லையும் செயலையும் பதிவு செய்துள்ளார்கள். (பார்க்க: புகாரி 2227 ஹதீசுக்கு பின்)

மேலும், வக்ப் சொத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டவர் அதிலிருந்து தனது நண்பருக்கும் விருப்பமானவருக்கும் வழங்கலாம் என்பதற்கு ஆதாரமாக ஒரு தாபிஈயின் கூற்றையும் ஒரு சஹாபியின் செயலையும் இமாம் புகாரி பதிவு செய்துள்ளார்கள். பார்க்க: புகாரி 2313
இவ்வாறு புகாரியில் மிக அதிகமான இடங்களில் சஹாபாக்கள் உள்ளிட்ட சிறந்த தலைமுறையை சேர்ந்தவர்களின் கூற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புகாரி மட்டுமின்றி சிஹாஹ் சித்தா உள்ளிட்ட மூல ஆதாரங்களாக திகழும் ஹதீஸ் நூல்களிலெல்லாம் இவ்வாறான பதிவுகள் உள்ளன. இந்த ஹதீஸ் நூல்களோடு சிறிதளவு தொடர்பு உள்ளவருக்கும் இது தெரிந்த விசயம்தான்.
சிஹாஹ் சித்தாவுக்கு முன்னர் தொகுக்கப்பட்ட முசன்னப் இப்னி அபீ ஷைபா, முசன்னப் அப்திர் ரஸ்ஸாக் உள்ளிட்ட ஹதீஸ் நூல்களில் பெருமளவில் சஹாபாக்களின் கூற்றுக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
தபவு தாபிஈன்களிடம் மார்க்கம் பயின்றவரும் ஹதீஸ் அறிவிப்பாளர்களில் முக்கியமானவருமான இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவது: இறை வேதமும் சுன்னாவும் ஆதாரமாக உள்ள விசயத்தை செவியுற்றவர் அதனை பின்பற்றாமல் இருக்க காரணம் சொல்வது துண்டிக்கப்பட்டதாகும். அதை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை. அவ்வாறு (ஆதாரம்) இல்லையானால் நாம் நபித் தோழர்களின் கூற்றுக்களை நோக்கி அல்லது அவர்களில் ஒருவரின் கூற்றை நோக்கி செல்வோம்…… நபித் தோழர்களில் இமாம்களாக இருப்போரிடமிருந்து (அபூ பக்ர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோரிடமிருந்து) கூற்று எதுவும் கிடைக்கப்பெறாவிட்டால் பிற நபித்தோழர்களும் மார்க்கத்தில் நம்பிக்கைக்குரிய இடத்தில் உள்ளனர். அவர்களின் கூற்றை நாம் எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு பின்னர் வந்தவர்களை பின்பற்றுவதை விட அவர்களை பின்பற்றுவதே நமக்கு ஏற்றமானதாகும். (நூல்: #இமாம் #பைஹகீயின் “மஅரிபதுஸ் சுனன் வல் ஆசார்” பா: 1 பக்: 183 – அல்மக்தபா அஷ்ஷாமிலா – பதிப்பு: 3.61)
இப்படி கூறும் இமாம் ஷாபிஈ அவர்களும், சஹாபாக்களின் கூற்றுக்களையும் செயல்பாடுகளையும் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்துள்ள ஹதீஸ் அறிஞர்களும் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றிய நல்ல மக்கள்தான். இவர்களின் இந்த நிலைப்பாடு குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதற்கு முரண்பட்டதல்ல.
இதன் பிறகும் இது வழிகேடு என்று தொண்டியாணி போன்றோர் சொல்வார்களானால் மார்க்கத்தை உம்மத்திற்கு எத்தி வைத்த மேற்கண்ட இமாம்களெல்லாம் வழிகேடர்களாவார்கள். ஏனென்றால் தொண்டியாணி போன்றோரின் வாதப்படி, இந்த இமாம்களெல்லாம் மார்க்கத்தில் மூன்றாவது ஆதாரத்தை உருவாக்கி ஓரிறை கொள்கையிலிருந்து தடம் புரண்டவர்கள். கப்ரு வணங்கிகளுக்கும் இவர்களுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை. (#தொண்டியாணி #தனது #ஆன்லைன்பீஜே #இணைய #தலத்தில் #வெளியிட்டுள்ள #வழிகெட்ட #சலபிக் #கொள்கை #என்ற #கட்டுரையில் #இந்த #கருத்தை #பதிவு #செய்துள்ளார்.)

இந்த அளவுக்கு வழிகெட்டவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்கக்கூடாது. இதன்படி இவர்களின் நூல்களில் உள்ள ஹதீஸ்களையும் ஏற்கக்கூடாது என்று கூறும் நிலை ஏற்படும். அந்த நிலையை நோக்கித்தான் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள் தொண்டியாணி போன்றோர்.
நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள், ஒரு விசயத்தில் குர்ஆன், ஹதீஸில் நேரடியான ஆதாரத்தை காண முடியாவிட்டால் பிற்காலத்தவரின் கூற்றுக்களை விட சஹாபாக்களின் கூற்றுக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள். அதற்குப்பின் அவர்களுக்கு அடுத்து வந்த தாபியீன்கள், தபவு தாபியீன்களின் கருத்துக்களை பார்கிறாகள்.
இதற்குக் காரணம் நபி ஸல் அவர்கள் இந்த மூன்று தலைமுறையினரையும் சிறந்த தலைமுறையினர் என்று பாராட்டி இருக்கிறார்கள். இந்த ஹதீஸை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் வந்த எல்லா தலைமுறையினரையும் விட அவர்கள் சிறப்பு அடைந்ததற்கு இறை நம்பிக்கையில் உறுதி, தியாகம் ஆகியவற்றுடன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மிக நன்றாக கட்டுப்பட்டும் நடந்தார்கள். நம்மை விட சிறப்பான முறையில் நடந்தவர்களின் செயல்பாடுகளை தேவைப்படும் போது கவனித்துப் பார்ப்பது சரியான முறைதான்.
இதன் பிறகும் இதனை குறை கூறும் தொண்டியாணி போன்றோருக்கு நாம் கூறிக்கொள்வது: நீங்கள் மார்க்கம் குறித்து எதை எழுதினாலும் தலைப்பை எழுதி அதற்குக் கீழே ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் மட்டுமே எழுதுங்கள். உங்கள் விளக்கம் எதையும் எழுதாதீர்கள். இதை நீங்கள் செய்து விட்டு பிறகு வந்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டை குறை சொல்லுங்கள்.
அதே நேரத்தில் நபித்தோழர்களிடதிலும் மனிதர்கள் என்ற ரீதியில் தவறுகள் நிகழும் என்பதை நாம் மறுக்கவில்லை. மறதி, ஆதாரத்தை அறியாமல் இருத்தல், ஆய்வில் தவறுதல் போன்ற காரணங்களால் அவர்களிடம் தவறு நிகழ்ந்துள்ளது. அந்த தவறுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றுதான் கூறுகிறோம்.
புதிய வாதமா? :
சலபுஸ் சாலிஹீன்களின் வழிமுறையை எடுத்து நடக்க வேண்டும் என்று கூறுவது தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகளிடம் புதிதாக நுழைந்த தவறான வாதம் என்று சிலர் சித்தரிக்கிறார்கள். இது தவறாகும். ஏறத்தாள இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தொண்டியாணி தவ்ஹீத்வாதிகளுடன் இணைந்திருந்த போது சஹாபாக்களின் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறார். அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் உள்ள ஜமாஅத் என்பது சஹாபாக்களை குறிப்பிடுகிறது. அவர்களின் வழியில் நாங்கள் தான் நடக்கிறோம். ஆகவே நாங்கள்தான் உண்மையான சுன்னத் ஜமாஅத் என்று ஷிர்க், பித்அதில் ஈடுபடுவோருக்கு மறுப்பளித்து பேசி இருக்கிறார். இதுவெல்லாம் ஆடியோ பதிவுகளில் உள்ளது.
தவ்ஹீத்வாதிகள் இந்த சலப் எனும் வார்த்தையை புதிதாக கொண்டு வருவதாக பிதற்றுவோறுக்கு மறுப்பாக தெளிவான ஆதாரத்தை கீழே தருகிறேன். தெளிவடையுங்கள்!
தமிழகத்து தவ்ஹீத்வாதிகளின் மூத்த வழிகாட்டி ஷெய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள்
1979 ம் வருடம் மொழிபெயர்த்து எழுதி வெளியிட்ட “இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் வாழ்க்கை வரலாறு” என்ற நூலில் எழுதுவது:
சஹாபாக்களும்,தாபஈன்களும், அவர்களை பின் தொடர்ந்தவர்களும்,நான்கு இமாம்களும்,சலபுஸ்சாலிஹீன்களும் என்ன கொள்கையில் இருந்தார்களோ அவற்றையே நாங்களும் நம்புகிறோம்….
(பக்: 66 – முதல் பதிப்பு)
இது இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் கடிதத்தில் வரக்கூடியது. இது போல் வேறு சில இடங்களிலும் வருகிறது.