கொள்கை பற்றிய 200 கேள்விகள்
அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)
தமிழில்: அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan.
வினா 1: மனிதர்கள் மீதுள்ள முதல் கடமை என்ன ?
விடை :
அல்லாஹ் மனிதர்களை எதற்காகப் படைத்தான், அவர்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான் என்பதையும், மேலும் தூதர்களையும் அவர்களிடம் அனுப்பி, அவனது வேதங்ளையும் இறக்கினான், இம்மை, மறுமை, சுவர்க்கம், நரகம் போன்றவைகளையும் படைத்தான் என்பதையும். மேலும் கியாமத் நாள் வருவதும் மீஸான் தராசில் நிறுக்கப்படுவதும், நன்மைதீமை ஏடுகள் வழங்கப்படுவதற்குமான உண்மைகளை அறிந்து கொள்வதும் நம்புவதும் மனிதர்கள் மீதுள்ள முதல் கடமையாகும்.
வினா 2: அல்லாஹ் படைப்பினங்களை எதற்காகப் படைத்தான்?
விடை :
அல்லாஹ் தனது திருமறையில் இது சம்பந்தமாக பின்வருமாறு கூறுகின்றான்.
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ
44:38. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ؕ ذٰ لِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْاۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِؕ
38:27. வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமேயாகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்.
وَ خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
45:22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கின்றான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
51:56. ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.
வினா 3: (அப்த்) அடிமை என்பதன் கருத்து என்ன?
விடை
அடிமை என்ற பதம் பொதுவாக அல்லாஹ்வின் படைப்புகளில் (உயிருள்ள, உயிரற்ற) அனைத்தையும் அடக்கிய போதிலும் குறிப்பாக முஃமின்களையே அது குறிக்கும் ஏனெனில் அவர்களே அல்லாஹ்வின் சங்கை மிக்க அடியார்களும் உள்ளச்சம் கொண்ட நேசர்களுமாவார்கள். அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
வினா 4: (இபாதத்) வணக்கம் என்றால் என்ன?
விடை
வணக்கம் என்றால் உள்ரங்கமான அல்லது வெளிப்படையான சொற்கள் செயல்கள் ரீதியில் அல்லாஹ் விரும்பக்கூடிய அணைத்தும், மேலும் அவைகளுக்கு முரன்பாடான அல்லது எதிரானவைகளில் இருந்து நீங்கியிருத்தலும் வணக்கமாகும்.
வினா 5: ஒரு செயல் எப்போது (இபாதத்) வணக்கமாக மாறும்?
விடை
அச்செயலில் இரண்டு விசயங்கள் முழுமையாக இருக்க வேண்டும் அவை,
1. முழுமையான கீழ்ப்படிவுடன்
2. முழுமையான நேசமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்.(…விசுவாசிகளோ அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக்கடுமை யானவர்கள்…) அல்பகரா 165.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சயமாக தங்கள் இரட்சகனின் பயத்தால் அஞ்சி எச்சரிக்கையாக இருக்கின்றார்களே அத்தகையோரும்) அல்முஃமினூன் 57
இவ்விரண்டையும் ஒரே வசனத்தில் இனைத்துக் கூறும் போது (…நிச்சயமாக, இவர்கள் யாவரும் நன்மைகளில் (மிகத் துரிதமாக) விரைபவர்களாக இருந்தார்கள், (நம்முடைய அருளை) ஆசித்தும், (நம் தண்டனையைப்) பயந்தும், நம்மை (பிரார்த்தனை செய்து) அழைப்பவர் களாகவும் இருந்தார்கள், அவர்கள் (யாவரும்) நம்மிடம் உள்ளச்சமுடையோர்களாகவும் இருந்தார்கள்.
வினா 6; ஒரு அடியான் (ரப்பை) அவனைப் படைத்து பரிபாலித்து பாதுகாப்பவனை நேசிப்பதற்கான அடையாளம் என்ன ?
விடை:
ஒரு அடியான் தனது ரப்பை நேசிப்பதின் அடையாளம் அல்லாஹ் நேசிப்பவற்றை அவன் நேசிப்பதும் அல்லாஹ்வுக்கு கோப மூட்டக்கூடிவைகளைத் தவிர்த்தும் அவனது கட்டளைகளை ஏற்று அவனது விளக்கள்களைத் தவிர்ந்துக் கொள்வான், மேலும் அல்லாஹ்வின் நேசர்களை நேசித்து அவனது விரோதி களைப் பகைத்துக்கொள்வான். எனவே தான் அல்லாஹ்வுக்காக நேசிப்பதும் அவனுக்காகவே பகைத்துக் கொள்வதும் ஈமானின் பலமான கயிராகும்.
No comments:
Post a Comment