Saturday, September 15, 2018

MAK-AJU

முஹம்மது அப்துல் காதர் இப்னு பீர் முஹம்மது சித்தையன் கோட்டை (MAK) ஆகிய எனக்கும் அப்துல் ஜப்பார் உத்தமபாளையம் (AJU) அவர்களுக்கும் நடந்த கருத்து பரிமாற்றம்.


என்னுடைய (MAK ) facebook பக்கம்: https://www.facebook.com/mdabdulkadermca

அப்துல் ஜப்பார் உத்தமபாளையம் (AJU) facebook பக்கம் : https://www.facebook.com/abdul.jabbarupm



விபச்சாரத்திற்கு நான்கு சாட்சிகள் பொருந்தாத சட்டம் என்று பிஜே கூறியது தவறு என்று முன்பே சொல்லாமல் பொதுக்குழுவில் அறிவித்தது ஏன்? என்ற பதிவின் தொடர்பில் நடந்த கருத்து பரிமாற்றம்.


MAK: குரானின் சட்டம் ஒன்று சாத்தியம் இல்லை என்று பிஜே என்ற ஒரு அறிஞர் அப்படி சொன்னதால், அதற்கு ஆதாரம் இருக்கலாம் என்று TNTJ வின் மற்ற அறிஞர்கள்  நினைத்துள்ளார்கள்.

AJU: 1) அவர் முலுவதுமாக விலக்காமல் கிரவுண்ட் இல்லை என்று சொல்லிவிட்டார் , அப்படி இல்லாமல் 4 சாட்சி தேவை இல்லை என்று அவர் இருந்தால் அதர்க்கு ஜமாத் பொறுப்பு இல்லை என்று ரஹ்மதுல்லாஹ் சொன்னார்.

MAK: 4 சாட்சி தேவை இல்லை என்று சொல்லியிருந்தால் அதை தவறு என்று அறிந்து இருப்பீர்கள், மாறாக கிரவுண்ட் இல்லை என்று சொன்னதால் சந்தேகம் கொண்டு அதுவும் பிஜே எனும் ஒரு அறிஞர் அப்படி சொன்னதால் நன்கு மாதங்கள் ஆய்வு செய்துள்ளீர்கள் கரெக்டா?. 4 சாட்சி தேவை இல்லை என்பதற்கும் கிரவுண்ட் இல்லை என்பதற்கும்  என்ன வித்தியாசம். கிரவுண்ட் இல்லை என்ற கவர்ச்சி வார்த்தையில்/பேச்சில் சூனியம் ஆகிவிட்டார்கள் போலும்.

AJU: 4 சாட்சி சமந்தமாக ரஹ்மதுல்லாஹ் பொதுக்குலுவில் விளக்கிய வீடியோவே போதுமானது , மேலும் இது மட்டும் எருமை, பிறை போன்றவையும் ஆய்வு செய்யப்படது , இவருக்காக ஆய்வு செய்யவில்லை அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் 

MAK: கேள்வி இதை மட்டும் ஆய்வு செய்தீர்களா மற்றத்தை ஏன் ஆய்வு செய்யவில்லை என்பதல்ல ? என் கேள்வியே

a . இதை ஆய்வு செய்துதான் மறுக்கணுமா
b . அதுவும் 4 மதத்திற்கு பின்
c . அதுவும் பிஜே TNTJ வில் இல்லாத போதுதான்
d. அதுவும் பிஜே TNTJ வின் மீது பொருளாதார குற்றச்சாட்டை வைத்து எதிரியான பின் அவர்களுக்கு தயிரியம் வந்துள்ளது ?

பிஜே வெளியானபின் இதை மறுத்ததும், TNTJ அறிஞர்கள் தங்களின் மஸாயிலில் உள்ள கருது வேறுபாட்டை (எருமை சட்டம்) வெளிப்படுத்துவதும் ஒரு நல்ல நிலை தான்.

குரானின் சட்டம் ஒன்று சாத்தியம் இல்லை என்று பிஜே என்ற ஒரு அறிஞர் அப்படி சொன்னதால், அதற்கு ஆதாரம் இருக்கலாம் என்று TNTJ வின் மற்ற அறிஞர்கள் நினைத்துதான் ஆய்வு செய்துள்ளார்கள். அனால் குரானின் சட்டம் எல்லா காலத்திற்கும் சாத்தியம் என்பது தான் ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கை. பிஜே இந்த கருத்தை சொல்லிய வுடன் அணைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனால் TNTJ உறுப்பினர்கள் அமைதி காத்து TNTJ வின் அறிஞர் குழு பதில் சொல்லும் வரை பொறுத்து இருந்தார்கள். இந்த லட்சணத்தில் சுய ஆய்வு செய்கிறோம் என்றும் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்றும் வீண் வீராப்பு செய்கிறார்கள்.

நீங்களும் August 31 அன்று பிஜே விளக்கம் தருவார் அதற்கு பின் எனக்கு பதில் சொல்வதாக சொன்னீர்களா இல்லையா.

ஆக குரானின் சட்டம் ஒன்று சாத்தியம் இல்லை என்று பிஜே என்ற ஒரு அறிஞர் சொன்னவுடன் நீங்களும், TNTJ உறுப்பினர்களும் ஏன் TNTJ அறிஞர்களும் சற்று நிலைகுலைந்து போய் உள்ளார்கள்? இவ்வாறு தான் ஹதீஸ்களிலும் அவர் சாத்தியம் இல்லை என்றும் அதற்கான விளக்கமும் அவரே தந்து உங்கள் ஈமானை அசைத்து இருக்கிறார். இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் நல்லது.

மேலும், பொருளாதார குற்றச்சாட்டிற்கு ஏகுறி அடித்து பதில் சொன்ன TNTJ, அல்லாஹ்வின் சட்ட்டதை சாத்தியம் இல்லை என்றதை சிம்பிளாக அது அவரின் கருத்து என்று மட்டும் விலகி கொண்டது? இதன் பாரதூரத்தை, அல்லாஹ்வின் சட்டத்தை கேள்விக்குறியாக்கியதை, இது இறை நிராகரிப்பை கொண்டுவரும் என்பதை பற்றியெல்லாம் ஏன் வாய் திறக்காமல் இருப்பது ஏன் ?
இதை பற்றி வாய் திறந்தாள் அவரின் இந்த கேள்வியை வரிக்கு வரி பதிலடி கொடுத்தால் உங்களின் அஸ்திவாரமே கேள்விக்குறியாகும். இதை TNTJ அறிஞர்கள் செய்வார்களா ?



MAK: மற்ற அறிஞர்களின் கருத்து மற்றும் மற்ற கிதாபின் விளக்கம் என்ன என்று ஆய்வு செய்துள்ளார்கள்.

AJU: ஆய்வுகளில் இது பார்ப்பது வளக்கம் தானே 

MAK: 1. இது குரானின் சட்டம் என்பதாலும், 2. பிஜே கிரவுண்ட் இல்லை  என்று மட்டும் சொல்லிவிட்டு காரணம் மற்றும் (நாத்திக) விளக்கமும்  தராததாலும், 3. மற்ற அறிஞர்களின் கருத்து மற்றும் மற்ற கிதாபின் விளக்கம் என்ன என்று ஆய்வு செய்ததாலும் இதில் சரியான முடிவு எடுத்துள்ளார்கள். பிஜே TNTJ க்கு உள்ளே இருந்தால் இதுவும் மறுக்கப்பட்டிருக்கும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

AJU: ஒவ்வொரு ஆய்விலும் மற்ற அறிஞர்களின் ஆய்வுகளும் முன்பு இருந்தே எடுத்துக் கொள்ளப்படும் , ஆனால் அது சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படும், 

MAK: நல்லது


MAK: குரானின் சட்டம் ஒன்று சாத்தியம் இல்லை என்பதை ஆய்வு செய்து தான் தவறு என்று சொல்லும் அளவில் இவர்களின் ஈமானும் கல்வி ஞானமும் இருக்கிறது.

AJU: அல்லாஹ்வின் வேத வசனங்கல் சொல்லி அருவுருத்தப்பட்டால் குருடராகவோ செவிடராகவோ அவர்கள் விலமாட்டார்கல் , ஆய்வு செய்வார்கள் என்று அல்லாஹ் சொல்லுகின்றான் , அதைத்தான் தவ்ஹீத் ஜமாத் செய்தது , உங்கல் மூன்றாவது வாதம் மிகப்பெரிய தவறு

MAK: செவிடர்களாகவும் குருடர்களாகவும் விழ மாட்டார்கள் என்றால் என்ன ? சொல்வதை கேட்பார்கள், உள்ளதை பார்ப்பார்கள் என்று அர்த்தம். நீங்கள் சொல்வது போன்று குரான் வசனமாக இருந்தாலும் அதை ஆராய்ந்த பின்பு தான் ஏற்றுக்கொள்வோம் என்ற அர்த்தம் இல்லை .

குரானை ஆய்வு செய்ய வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பது இரண்டு வகை 1. வெளியில் உள்ளவர்கள் இந்த குரான் அல்லாஹ்வின் வார்த்தையா என்று சிந்தித்து உள்ளே வரவேண்டும். 2. உள்ளே வந்த முஃமின்கள் குரான் சொல்லும் விளக்கம் என்ன, இதன் பலன்கள் என்ன, அமல் செய்வதற்கு என்ன முயற்சிகள் வேண்டும் என்று ஆய்வு செய்யவேண்டும். நீங்கள் செய்தது என்ன? இது சாத்தியமா இல்லையா என்று தானே?. நீங்கள் குரானை ஆய்வு செய்ததில் இது வரை ஏதாவது குறை கண்டுபிடித்தீர்களா ? இல்லை ஏன்?

குர்ஆன் வசனத்தில் சுயவிருப்பத்தின் அடிப்படையில் (அதாவது உள்ளம் ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில்) எந்த மார்க்க ஆதாரத்தையும் ஏற்கவோ, மறுக்கவோ கூடாது என்பது தான் அல்லாஹ்வின் கட்டளை. “கேட்டோம்; கட்டுப்பட்டோம்” என்று அதை ஏற்றுக் கொள்வது தான் ஒரு முஃமினின் கடமை என்று தான் குர்ஆன் சொல்லுகிறது. 

”நிச்சயமாக முஃமின்களின் வார்த்தை எப்படி இருக்குமென்றால் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்வின் பாலும், தூதரின் பாலும் அவர்களை அழைத்தால், கேட்டோம், கட்டுப்பட்டோம் என்று கூறுவார்கள். அவர்கள் தான் வெற்றி பெற்றோர்” (ஸூரா அந்நூர்-வசன எண்-51)


நீங்கள் கேட்டோம் கட்டுப்பட்டோம் என்கிறீர்களா ? அல்லது கேட்டோம், சரியா பிழையா, சாத்தியமா இல்லையா  என்று ஆய்வு செய்து பிறகு கட்டுப்படுகிறோம் என்கிறீர்களா ?. 


குரானையும் ஆய்வு செய்து தான் பின்பற்றுவோம் என்பதும் உங்கள் புத்தியை, திறனை அடிப்படையாக கொண்ட நாத்திக சிந்தனை. குரானையும் ஆய்வு செய்து தான் பின் பற்ற வேண்டும் என்ற கொள்கை எப்படி TNTJ குல் வந்தது.

AJU: 3) ஹஹஹ முஸ்லிம் அல்லாதவர்கள் குரானை ஆய்வு செய்வதர்க்கும் முஸ்லிம்கள் ஆய்வு செய்யக்கூடாது என்ற வாதம் உங்கலுக்கே சிரிப்பை வரவைக்கலயா ?? மனித குலதுக்கு அல்லாஹ் அதை அருலினான் , ஆய்வு செய்தால். தான் தாவாவே செய்ய முடியும் , சலபிகல் எந்த ஆய்வும் செய்வது இல்லை என்று ஒத்துகொண்டீங்க ,,, எதர்க்கு எடுத்தாலும் இது நாத்திகம் முறை , ஆய்வு செய்வது நாத்திக கொல்கையா ? அது இறை நம்பிக்கியாலர்கலின் பண்பு அதை விளங்கி கொள்ளுங்கள் ஆய்வு என்பது அல்லாஹ் குரானில் ஒரு வார்த்தையும் தேவை இல்லாமல் சொல்லமாட்டான் , அதை ஆய்வு செய்யும் போதுதான் அதை விளங்க முடியும் 

MAK: நீங்கள் நான் சொன்னதை பார்க்கவில்லை போலும்.

2. உள்ளே வந்த முஃமின்கள் குரான் சொல்லும் விளக்கம் என்ன, இதன் பலன்கள் என்ன, அமல் செய்வதற்கு என்ன முயற்சிகள் வேண்டும் என்று ஆய்வு செய்யவேண்டும்.

முஃமீன்கள் எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2 ஆவது பாயிண்டில் சொல்லிருந்தேன். மீண்டும் இதை படித்து விட்டு நீங்கள் சொல்லும் (ஆய்வு என்பது அல்லாஹ் குரானில் ஒரு வார்த்தையும் தேவை இல்லாமல் சொல்லமாட்டான்) என்ற ஆய்வுக்கும் நான் மேலே சொன்ன ஆய்வுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள்.

"குரான் சொல்லும் விளக்கம் என்ன, இதன் பலன்கள் என்ன, அமல் செய்வதற்கு என்ன முயற்சிகள் வேண்டும் என்று ஆய்வு செய்யவேண்டும்" என்று சொல்லும் என்னை (ஸலஃபி ) `ஆய்வே செய்வதில்லை என்று ஒத்துக்கொண்டீர்கள்` என்று எவ்வாறு சொல்கிறீர்கள். இவ்வாறு தான் எதிர்தரப்பினர் மீது அபாண்டம் சுமத்தி ஏமாத்தி வருகிறது TNTJ.

நீங்கள் செய்தது என்ன? இது சாத்தியமா இல்லையா என்று தானே?. நீங்கள் குரானை ஆய்வு செய்ததில் இது வரை ஏதாவது குறை கண்டுபிடித்தீர்களா ? இல்லை ஏன்? . நீங்கள் கேட்டோம் கட்டுப்பட்டோம் என்கிறீர்களா ? அல்லது கேட்டோம், சரியா பிழையா, சாத்தியமா இல்லையா என்று ஆய்வு செய்து பிறகு கட்டுப்படுகிறோம் என்கிறீர்களா ?.

உங்களுக்கு புரியும் வண்ணம் வேறு முறையில் கேட்கிறேன் புரிகிறதா என்று பாருங்கள்.

குரானையும் ஆய்வு செய்து தான் பின்பற்றவேண்டும் என்ற இந்த கருத்து ஒன்று உங்கள் நிலைப்பாடே தவறு அல்லது அதை நீங்கள் தவறான இடத்தில உதாரணமாக கூறுகிறீர்கள்.

a) ஹதீஸ்களை ஏன் முரண்படுகிறதா என்று ஆய்வு செய்கிறீர்கள் என்று உங்களிடம் கேட்டால் அல்லாஹ்வே குரானை ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறான் என்று சொல்கிறீர்கள் .

b) குரானை அப்படியா ஆய்வு செய்கிறீர்கள் என்று கேட்டால் "ஆய்வு என்பது அல்லாஹ் குரானில் ஒரு வார்த்தையும் தேவை இல்லாமல் சொல்லமாட்டான் , அதை ஆய்வு செய்யும் போதுதான் அதை விளங்க முடியும் " என்று சொல்கிறீர்கள்.

ஆக நீங்கள் குரானை ஆய்வு செய்வதற்கும் ஹதீஸை ஆய்வு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

சரி நீங்கள் சொல்லும் இந்த நம்பிக்கையின்படியா இந்த 4 சாட்சி விஷயத்தில் நடந்துகொண்டீர்கள். "குரானில் ஒரு வார்த்தையும் தேவை இல்லாமல் சொல்லமாட்டான்" என்ற நம்பிக்கையில் நீங்கள் உறுதியாக இருந்தால்  பிஜே சாத்தியம் இல்லை என்ற உடன் நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும் ?

குரானில் ஒரு வார்த்தையும் தேவை இல்லாமல் சொல்லமாட்டான், எனவே 4 சாட்சி என்று அல்லாஹ் சொன்னது எப்போதும் தேவை தான், சாத்தியம் தான் என்ற உங்கள் நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அனால் சாதாரண மனிதர் சொன்னால் பரவாயில்லை ஒரு அறிஞர் சொல்லிவிட்டார் என்று உயர்ந்தோன் அல்லாஹ்வின் சட்டத்தையே ஆயத்தின் வார்த்தையையே நம்ப வேண்டிய ஈமானில் ஆட்டம் ஏற்பட்டு மற்ற அறிஞர்களின் கருத்து மற்றும் மற்ற கிதாபின் விளக்கம் என்ன பார்த்து உங்கள் ஈமானின் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டீர்கள்.



MAK: குரானின் சட்டம் ஒன்று சாத்தியம் இல்லை என்று சொன்னவர்தான் சூனியம், கண்ணேறு, அஜ்வா, பால்குடி போன்ற ஹதீஸ்களை சாத்தியம் இல்லை என்று சொன்னார்.

AJU: அவர் சொன்னதர்க்க்காக நாங்கல் அந்த செய்திகளை மருக்கவில்லை , வஹீக்கு முரண் என்றே நாங்கள் மறுத்தோம் .

MAK: நீங்கள் யாரும் பிஜே/TNTJ  கருத்தை மட்டும் பின்பற்றவில்லை. பிஜே/TNTJ  சொன்ன கருத்திற்கு அவர் சொன்ன காரணம்,  அடிப்படை, விளக்கம் ஆகிய வற்ற கேட்டு, அறிந்து, நம்பி பின்பற்றுகிறீர்கள். இங்கே நீங்கள் ஆய்வு செய்ய வேண்டியது முரண்படும், ஆபாசம் போன்ற கருத்தை மட்டும் அல்ல, அதற்கு அவர்கள் சொன்ன காரணம்,  அடிப்படை, விளக்கம் ஆகியவற்றயும் சரியா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

4)அட்ப்படையான சில வாதங்கள் என்பது உண்மை , அது குரானின் கருத்தை ஒத்து இருக்க வேண்டும் என்ற அடிப்படை மட்டும்மே அது உங்கலுக்கு விளங்கவில்லை

MAK: இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் என்பது குரானும் ஹதீஸும் தான் (குரானுக்கு பின் ஹதீஸ் என்ற அர்த்தம் இல்லை). எனவே ஒவ்வரு விஷயத்தையும் ஹதீஸுடனும் குரானுடனும் எடை போட்டு பார்த்துதான் பின்பற்ற வேண்டும். ஆனால் ஹதீஸை குரானுடன் எடை போட்டு பார்க்க வேண்டும் என்பது பிஜே சொன்ன அடிப்படை. இந்த ஒன்றை நீங்கள் புரிந்துகொண்டால் பிஜே சொன்ன இந்த அடிப்படை எவ்வாறு சரியாக இருக்கும் என்று சிந்தீப்பீர்கள்?

குரானுடன் ஹதீஸ் ஒத்து போகிறதா என்று அடிப்படையை அமல்செய்வதற்கு முன் குரானுடன் ஹதீஸை எடை போட்டு பார்க்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது.

குர்ஆன் மற்றும் அதன் விளக்கமாக இருக்கும் ஹதீஸ் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு தான் எப்போதும் சிந்திக்க வேண்டும்; ஒன்றோடு ஒன்றை மோத விட்டு, முரண்பாடு கற்பித்து, அதில் ஒன்றை வீசிவிடக்கூடாது.

இத்தூதருக்கு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (4:80)

குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற உஸூல் மூலம் ஏற்பட்ட முதலாவது பித்னா என்னவென்றால், ஒட்டுமொத்த ஹதீஸ்கள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி, ஹதீஸை விட்டும் மக்களை இந்த உஸூல் தூரமாக்கிக் கொண்டிருக்கிறது.



MAK: பிஜே வின் ஈமானயும், கல்வி ஞானத்தையும், அல்லாஹ்வின் அச்சத்தையும் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு அல்லாஹ் சிந்திக்க ஒரு வாய்ப்பும், படிப்பினையும் கொடுத்துள்ளான்.

AJU: பிஜே செய்த தவருக்கு அவர்தான் பொறுப்பு , அவர் செய்யும் தவ்பாதான் பயன் தரும் , இதில் நாம் செய்ய வேண்டியது ஒன்னும் இல்லை , அவருக்கும் எங்கள் ஜமாத்துக்கும் சமந்தம் இல்லை. இந்த கொள்கையை சிந்தித்து விளங்கி ஏற்றுக் கொண்டோம் , எந்த தனி நபருக்காகவும் அல்ல, தவறு சுட்டிக்கட்டபட்டால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மாற்றிக் கொள்வோம் ,, 
அதே நேரத்தில் உங்கள் கொள்கையை நீங்கல் உரசி பார்க்க வேண்டும்

MAK: இங்கே ஒரு அடிப்படை விஷத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மத்ஹப் என்றால் என்ன? கிழே படிப்பதற்கு முன் சற்று நிதானித்து இதற்கு முன் நீங்கள் அறிந்த பதிலை ஒரு இடத்தில எழுதி விட்டு மீண்டும் தொடருங்கள்.

மத்ஹப் என்பது ஒரு சட்ட பிரிவு , அதில் உள்ளவர்கள் அதை தான் பின்பற்றவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளவர்கள் என்று மட்டும் நினைத்தீர்களா ?

மத்ஹப் என்பதன் தமிழ் அர்த்தம் என்ன. மத்ஹப் என்பது சிந்தனை கலாசாலை. எப்படி சிந்திக்க வேண்டும் என்று மக்களின் சிந்தனையையே கற்றுக்கொடுத்து கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மத்ஹப் என்பது ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் (school of thougths ) என்று. எட்டாவது சிந்தனை கலாசாலை.

இஸ்லாத்தில் ஒவ்வொரு பிரிவும் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையும் சேர்த்துதான் கற்றுக்கொடுத்துள்ளது . பிஜே /TNTJ வும் ஒரு தனி மத்ஹப் (சிந்தனை கலாசாலை) உருவாக்கியுள்ளார்கள். எனவே உங்களின் சிந்தனையே பிஜே/TNTJ மத்ஹப்-ல் இருக்கும் போது அதன் அடிப்படையில் சொல்லப்பட்ட காரணம்,  அடிப்படை, விளக்கம் ஆகியவை உங்களுக்கு சரியாகத்தான் தோன்றும். இது தான் எல்லா மதுஹபிலும் உள்ள மக்களின் பிரச்னை.

எனவே உங்கள் பிஜே/TNTJ வின்  சிந்தனையும், சிந்தனையின் காரணம்,  அடிப்படை, விளக்கம் ஆகையவற்றயும் கேள்வி கேட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

5) மதுஹப் என்று சொல்லுவது உங்கலுக்கு சலபிகல் மூலம் போதுக்கப்பட்டதால் இதை சொல்லுகின்றீர்கல் , தவ்ஹீத் ஜமாத்தின் வாதங்கலுக்கு பதில் சொல்ல வரும் யாரும் அதை உடைத்து சொன்னால் நிச்சயம் மாற்றுவோம் இப்போ உள்ள நிலை எளிதாக விலங்குவார்கல் , ஆகையால் சலபிகல் அதை முயர்ச்சி செய்யுங்கள், சத்தியம் எது என்பதை அல்லாஹ் மக்களுக்கு விளங்கசெய்வான்

MAK: 1. குர்ஆனுக்கு முரண்பட்டால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மறுக்க வேண்டும்
2. குர்ஆன் பாதுகாக்கப் பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப் படவில்லை
3. நிதர்சன உண்மைகளுக்கும், பகுத்தறிவுக்கும், விஞ்ஞானத்துக்கும் முரணாக எந்த ஹதீஸ் இருந்தாலும், அதன் நம்பகத்தன்மை பற்றி எதுவுமே பார்க்காமல் மறுக்க வேண்டும்