Saturday, October 19, 2024

தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள் என்றால் என்ன ?

 தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள் என்றால் என்ன ?


தப்லீக் ஜமாஅதை ஆரம்பித்தவர்கள் சூஃபித்துவ கொள்கையை சார்ந்தவர்கள். அதன் தாக்கத்தின் காரணாமாக மார்க்கத்தில் இல்லாத பித்அதுகளை செய்பவர்களாகவும், நல்லோர்கள் விஷயத்தில் இல்லாத கற்பனை கதைகளை உருவாக்கி பரப்புவர்களாகவும் இருக்கிறார்கள்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ‘தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள்’ போன்ற சொற்கள் அனைவருக்கும் மத்தியில் பிரபல்யமானாதாகும். ஆனால் இதன் கருத்தோட்டம் எவ்வாறு இவர்கள் மத்தியில் புரிந்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கும் போதே ஆச்சரியம் கலந்த வேதனையை அளிக்கின்றது.

சாதாரண முஸ்லிம் சமூகத்தினர் ஆலிம்கள் முதற்கொண்டு பாமரர் வரைக்கும், ‘சூஃபிகள் எனப்படுவோர் இறைநேசச் செல்வர்கள். தொழுகை, நோன்பு, திக்ர், போன்ற இன்ன பல வணக்கங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்., இதனால் சாதாரண மக்களை விட ஒருபடி மேலேசென்று அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றவர்கள் என்றும், முழுக்க முழுக்க இஸ்லாமிய மார்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் இவர்கள்தான்’ என்பது போன்ற ஒரு போலியான கருத்துக் கண்ணோட்டமும் அதிகப்படியான முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் புரையோடிப் போயிருப்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. 

எனவே சூஃபித்துவம் என்றால் என்ன? இது எங்கிருந்து தோற்றம் பெற்றது? இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இது எந்தளவு முரண்பட்டு நிற்கின்றது போன்ற விடயங்களைச் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்...

No comments:

Post a Comment