மனிதர்களாகிய நாம் நம்மை படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். இல்லை என்றால் நாம் நமது மனோ இச்சைக்கு கட்டுப் பட்டு வாழ்கிறோம் அல்லது பிறரின் மனோ இச்சைக்கு கட்டுப் பட்டு வாழ்கிறோம் அல்லது ஷைத்தானுக்கு கட்டுப் பட்டு வாழ்கிறோம் என்று அர்த்தம்.
ஷைத்தான் நமக்கு பகிரங்கமான எதிரியாவான். எதிரியின் ஆசைக்கு நாம் இணங்கிவிடக்கூடாது. ஷைத்தானை எதிரியாக நினைத்து அவனுக்கு எதிராக செயல்பட வேண்டும்.
35:3. மனிதர்களே! “உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப்பாருங்கள், வானத்திலிருந்தும்; பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி வேறொரு படைக்கிறவன் இருக்கிறானா? அவனைத் தவிர வேறொரு(வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை, ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?
35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களைத்திட்டமாக ஏமாற்றி விட வேண்டாம், (ஷைத்தானாகிய) ஏமாற்றுகிறவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களைத் திட்டமாக (மோசடியில் ஆக்கி) ஏமாற்றிவிட வேண்டாம்.
35:6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாக இருக்கின்றான், ஆகவே, அவனை நீங்களும் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள், அவன் (தனக்கு வழிபட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரகவாசிகளில் ஆகிவிடுவதற்காகவேதான்.
ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான்.
ஒன்று: இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான்.
இரண்டு: கொஞ்சம் இறை பக்தி ஆத்மீகப் பற்று, வணக்க வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவேரை வழிகெடுப்பதற்கு மற்றொரு வழிமுறையைக் கடைப்பிடிப்பான். அதாவது அவர்களின் மார்க்க அறிவின்மையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாம் தடுத்த விஷயங்களை – அவைதான் இஸ்லாமிய மார்க்க வழிபாடுகள் என நம்ப வைத்து அதன் வழியில் நடக்க வைத்து வழிகெடுத்து விடுவான்.
No comments:
Post a Comment