அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தினரின் நடுநிலை!
1) எத்தனையோ வழிகெட்ட கூட்டங்கள் படைத்தவனை விட்டுவிட்டு, படைப்புகளை வணங்குகின்றது; ஆனால் இஸ்லாமோ படைத்தவனை மட்டும் வணங்கச் சொல்கிறது.
2) அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, அவனை பயந்து நடக்கும் நன்மக்களை இறைநேசர்கள் (அவ்லியா) என இஸ்லாம் சொல்வது உண்மைதான்.! ஆனாலும் இறைநேசர்கள் விஷயத்தில் எல்லைமீறி போகாதே.! எவரைப் பற்றியாவது அற்புதக் கதைகள் /கட்டுக் கதைகள் உன் செவிக்கு வந்தால் அவரை "அவ்லியா" என நம்பிவிடாதே..! எச்சரிக்கையாயிரு..!
3) குர்ஆன் -ஸுன்னாவிற்கு மறைவான அர்த்தங்கள் உண்டு, அவை மகான்களுக்கு மட்டுமே தெரியும் என்பதும், வெளிரங்கத்தில் செய்ய வேண்டிய அமல்களை உள்ளத்தில் செய்தால் போதுமென்பதும் வழிகெட்ட "பாத்தினிய்யா" கொள்கையாகும்.!
4) இறுதி நபித்துவத்தை மறுப்பது வழிகெட்ட "காதியானி" கொள்கையாகும்; ஈமானை பறிக்கக்கூடிய இந்த காதியானி காஃபிர்களை நம்பாதே.!
5) நபி ﷺ அவர்கள் கூறிய நேர்வழி பெற்ற கூட்டத்தினர் யாரென்றால், அவர்கள்தான் "அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தினர்"; அதாவது குர்ஆன்-ஸுன்னாவை ஸஹாபாக்களின் புரிதலில் புரிந்து நடைமுறைப்படுத்துவோர்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில்
'நேர்வழிபெற்ற கூட்டம் யாரென்றால், "நானும், என் தோழர்களும் எந்த வழிமுறையில் இருந்தோமோ அதனை பின்பற்றுவோர்தாம்" என்று நபியவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(பார்க்க : திர்மிதீ 2641; இமாம் அல்பானி, இமாம் இராக்கி رحمهما الله போன்றோர் இச்செய்தியை 'ஸஹீஹ்' என்கிறார்கள்).
அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தினரின் நடுநிலை!
1) இறைநேசர்களை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தி புகழாதே..! அவர்களது அடக்கஸ்தலங்களில் ஸஜ்தா செய்யாதே..! இன்னும் அத்தகைய இடங்களை சுற்றி வலம் வருதலோ, அங்கு அறுத்து பலியிடுவதோ மிகப்பெரும் பாவமாகும்.! இறைநேசர்களிடம் துஆ கேட்காதே..! நிச்சயமாக இவை அனைத்தும் வரம்பு மீறிய, வழிகெட்ட ஸுஃபி போன்ற கூட்டங்களின் ஷிர்க்கான கொள்கைகளாகும்.
2) அதேசமயம் இறைநேசர்கள் என யாரும் இல்லை என்று ஒரேயடியாக மறுக்காதே...! இதுவும் வழிகேடு..!
ஏனென்றால் அல்லாஹு கூறுகிறான் :
أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
(நம்பிக்கையாளர்களே!)‘அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நேசர்க(ளான நல்லடியார்)களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்''.
ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ
அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து நடக்கின்றனர்.
(அல்குர்ஆன் 10:62, 63)
3) அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை முறையாக செய்து, நல்ல முறையில் வாழ்ந்த ஸாலிஹான மக்கள் ''அவ்லியா (நல்லடியார்கள்)'' என்ற பட்டியலுக்குள் அடங்குவார்கள்; இவர்களை நேசிக்க வேண்டும், ஆனால் அந்த நேசமானது இவர்களது கப்ருகளையோ, (அல்லது) இவர்கள் பயன்படுத்திய பொருட்களையோ நாம் புனிதப்படுத்தும் அளவிற்கு செல்லக்கூடாது..!
ஸாலிஹான அமல்களை செய்வதின் மூலமாக நாமும் அல்லாஹ்விடம் சிறந்த நல்லடியாராக மாறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இன்'ஷா அல்லாஹ் ...
அஷ்ஷெய்க். அப்துல்லாஹ் அல்-ஜப்ரின் رحمه الله
நூல் : இஸ்லாமிய மார்க்கத்தில் அத்துமீறாமலும், அலட்சியப்படுத்தாமலும் சமநிலை
No comments:
Post a Comment