அல் ஹதீஸ் (நபிமொழிகள்)
அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் செய்யும்படி கூறியவை, அன்னவர்கள் செய்தவை, அன்னவர்களின் சமூகத்தில் பிறர் செய்யும்போது அதனை அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.
அல் ஹதீஸ் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் இரண்டாவதாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை, அல் குர்ஆனிற்கு விளக்க முறையாகவே இருந்தது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றாமல் மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாது.
ஹதீஸ்கள் அவற்றின் தரத்திற்கேற்ப ஸஹீஹ், ஹஸன், லயீப், மவ்து என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹதீஸ் வகைகள்
1. ஸஹீஹ்:
அறிவிப்பாளர் தெடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனன சக்தியுள்ளவராகவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச்சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.
2. ஹஸன்:
அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்பபட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.
3. லயீப்:
அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.
4. மவ்லூஉ:
உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ்கள் மவ்லூஉ எனப்படும்.
ஸஹீஹான ஹதீஸ் என்றால் என்ன ? மிக இலகுவாக அதனை எவ்வாறு புரிந்து கொள்வது ?#Mufaris_Thajudeen_Rashadi
No comments:
Post a Comment