- ஒன்று அழகாகவும் அர்த்தமாகவும் இருக்க வேண்டும்!
- இது முற்றிலும் தவறாகும்!
நம்முடைய பெயருக்கு அர்த்தம் சரியானதா தவறானத என்று எத்தனை பேருக்கு தெரியும்!?
- நாங்கள் பார்த்த வரை சில சகோதர - சகோதரிகளின் பெயர்களின் அர்த்தம் மோசமானதாக இருந்தது!!!
- ஒரு சகோதரியின் பெயரின் அர்த்தம் : சோகம் / இவர்களுக்கு 24 வயது ஆகுகிறது - இவ்வளவு நாட்களும் இதே பெயருடன் இருந்து உள்ளார்கள்!
- ஒரு சகோதரனின் பெயர் அர்த்தம் : அரசருக்கு எல்லாம் அரசன் ( நவதுபில்லாஹ் )
- ஒரு சகோதரியின் பெயர் : விபச்சாரம் செய்யும் இடம்!
- ஒரு சகோதரர் தன்னுடைய பிள்ளைக்கு மலக் என்று பெயர் வைக்க விரும்பினார்! ஆனால் மலக் என்பார்கள் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல! இந்த பெயரை வைக்க கூடாது என்று மார்க்க அறிஞர்கள் கூறி உள்ளார்கள்!
- அல்லாஹ் பிச்சை
- நாகூர் பாவா
-பக்கீர் (பிச்சைகாரன் )
-நாகூரா
-ஆத்தங்கரையா
-காட்டுபாவா
இது போன்றப் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து விடுகிறார்கள்! பள்ளியில் சென்று படிக்கும் போது சக நண்பர்களால் கேலி செய்யப்படுகிறார்கள்!
பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்யும் நேரத்தில் தன் பெயரைக் கூற வெட்கப்படுகிறார்கள். தன் பெயரைக் கூறி யாராவது அழைத்தால் அவர்களுக்குள்ளே ஒரு கூச்சம் தோன்றுகிறது!
( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 147 )
உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4320 )
(நூல் : முஸ்லிம் : 4342)
( நூல் : அஹ்மத் )
- அல்லாஹ்வுடைய தனி தன்மைகளை குறிக்கும் பெயர்களை சூட்டுவது கூடாது!
- ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்)
- ஜஹாங்கீர் (உலகை வெற்றி கொண்டவன்)
- ஷாஜஹான் (உலகின் அரசன்)
ஆகிய பெயர்கள் சூட்டப்டுகின்றன. இந்த தன்மை எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது! இது போன்ற பெயர்களை வைக்க கூடாது 
நூல் : புகாரி (6205)
அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள்.
(ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள்.
அவர் ஷ‚ரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷ‚ரைஹ் என்று கூறினார்.
அப்படியானால் நீர் அபூ ஷ‚ரைஹ் (ஷ‚ரைஹின் தந்தை) ஆகும் எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.
( நூல் : நஸயீ )
( நூல் : அஹ்மத் )
சில பெயர்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.
(நூல் : முஸ்லிம் : 4328)
(நூல் : முஸ்லிம் : 4324)
- அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் பெயரென்ன?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஹஸ்ணன்' (முரடு) என்று கூறினார்!
- நபி(ஸல்) அவர்கள், '(இல்லை) நீங்கள் (இனிமேல்) 'ஸஹ்ல்' (மென்மை)' என்றார்கள்.
- அவர், 'என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்' என்றார்.
- அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குண நலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.
( நூல் : ஸஹீஹ் புகாரி : 6190 )
( நூல் : அபூதாவூத் : 4301)
ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : அஹ்மத்)
- குழந்தை பிறந்து ஏழாவது நாளில் நாம் பெயர் சூட்டலாம்!
- ஆலீம்கள்தான் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். பெற்றோர்களே குழந்தைக்கு பெயர்வைக்க அதிக தகுதியானவர்கள்!
- மர்யம் (அலை) அவர்களுக்கு அவர்களின் தாயார் தான் பெயர் வைத்தார்கள்.
- ஆலிம்கள் தான் பெயர்சூட்ட வேண்டும் என்றிருந்தால் மர்யம் (அலை) அவர்களின் தாயார் அன்று பெரும் ஆலிமாகவும் நபியாகவும் விளங்கிய ஸகரிய்யா (அலை) அவர்களிடம் சென்று பெயர்வைக்கச் சொல்லியிருப்பார்கள்!
- ஆனால் அவர்கள் சுயமாகவே தன் விருப்பப்படியே பெயர் வைத்தார்கள்!
- நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரிடவில்லை. சஹாபாக்கள் தாங்களாகவே பெயர் சூட்டினார்கள். நபியவர்கள் இதைத் தடுக்கவில்லை!
No comments:
Post a Comment