ஈமானின் அடிப்படைகள் ஆறு
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்...(2:177)
(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்துதமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்...(2:285)
1. அல்லாஹ்வை நம்புவது
2. வானவர்களை நம்புவது
3. வேதங்களை நம்புவது
4. நபிமார்களை நம்புவது
5. மறுமையை நம்புவது
6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியேநடக்கிறது என்று நம்புவது ...(உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - புகாரி)
இந்த ஆறு அடிப்படைகளையும் நாம் விரிவாக ஆழமாக அறிந்து புரிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக மேலும் தெளிவை பெற்றுக் கொள்ள கீழுள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்
https://www.youtube.com/watch?v=uN4KhVbYI40
* இஸ்லாம் என்பது 5 தூண்களை அல்லது படித்தரங்களை அல்லது விதிமுறைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.*
அதாவது,
1. லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார் சாட்சியமளித்து சத்தியம் செய்து ஈமான் கொண்டு) மொழிவதன் மூலம் ஒருவர் இஸ்லாத்தில் நுழைகின்றார். இந்த அடிப்படை ஒருவர் இஸ்லாத்தில் நுழைவதற்குத் தேவையானதொன்றாக இருக்கின்றது.
2. பின் அவர் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்,
3. தன்னுடைய வருமானத்திலிருந்து ஏழை வரியாகிய ஜகாத்தைக் கொடுக்க வேண்டும்,
4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றும்,
5. தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது (பணம், உடல்நலம்) இயலுமானால் ஹஜ்ஜுச் செய்ய வேண்டும்.
லாயிலாக இல்லல்லாஹ் என்றால், ‘உண்மையாகவே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்பதாகும்.
“யார் (உண்மையாகவே) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறி, அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படுவதை நிராகரிக்கிறாரோ அவரது செல்வமும் அவருடைய உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இத் திருக் கலிமாவிற்கு மார்க்க அறிஞர்கள் ஏழு முதன்மையான நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றார்கள். அவற்றை அறிந்து பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
முதன்மையான ஏழு நிபந்தனைகள்: –
1) அறிவு
2) மன உறுதி
3) ஏற்றுக் கொள்ளல்
4) கட்டுப்படுதல் (கீழ்படுதல்)
5) உண்மை
6) மனத்தூய்மை
7) நேசம்
1) அறிவு: –
அதாவது, ‘வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே’ என்றும் ‘அவனல்லாதவைகளை வணங்குவது தவறானது, அவைகளால் யாருக்கும் உதவி, தீமை செய்ய முடியாது’ என்பதை எவ்வித அறிந்து கொள்வதாகும்.
“ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துக் கொள்வீராக“ (அல்-குர்ஆன் 47:19)
இந்த வசனத்தின் மூலம் ‘அறிவைத் தொடர்ந்து தான் அமல்கள் இடம் பெற வேண்டும்’ என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதை அறிந்த நிலையில் எவர் மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்”
2) மன உறுதி: –
அதாவது, ‘எவ்விதமான சந்தேகமுமின்றி உறுதியுடன் நம்ப வேண்டும்’. இவ்வடிப்படையில் கடுகளவேனும் சந்தேகப்படக் கூடாது.
“(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாதிருந்தவர்கள்” (அல்-குர்ஆன் 49:15)
“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வென்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன். எந்தவொரு அடியான், இவ்விரு விடயங்களிலும் சந்தேகமற்றவனாக அல்லாஹ்வைச் சந்திக்கின்றானோ அவன் சுவர்க்கம் நுழைவான்”
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
3) ஏற்றுக் கொள்ளல்: –
அதாவது இந்த சாட்சியத்தை ‘மறுப்பின்றி’ ஏற்றுக் கொள்ளவேண்டும். நிராகரிப்பதோ மறுப்பதோ கூடாது.
“மேலும் ‘அல்லாஹ்வைத் தவிர (உண்மையாகவே) வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமையடிப்பவர்களாக இருந்தனர். நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்திற்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விடுகின்றவர்களாக?என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்” (அல்-குர்ஆன் 31:35-36)
இந்த வசனம், ‘பெருமையின் காரணமாக ஏக தெய்வக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆற்பட்டார்கள்.’ எனவே ஏற்றுக் கொள்ளுதல் என்பது இங்கு ஒரு முக்கிய நிபந்தனையாக இடம் பெறுகிறது.
4) கட்டுப்படுதல் (கீழ்படுதல்): –
அதாவது, அல்லாஹ்வைத் தனது வணக்கத்திற்குரிய நாயனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை அவனது நபியாகவும் தூதராகவும் ஏற்று இக்கலிமாவின் கடமைக்குக் கட்டுப்படவேண்டும்.
“இன்னும் உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள். அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்படிந்தும் விடுங்கள்” (அல்-குர்ஆன் 39:54)
5) உண்மை: –
அதாவது உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த நிலையில் இந்தக் கலிமாவிற்கு கட்டுப்பட்டு இஸ்லாத்தைப் பின்பற்|றுவதாகும்.
‘விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்ளுங்கள்! (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்’ (அல்-குர்ஆன் 9:119)
இந்த வசனம் உண்மை எனும் நிபந்தனையின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
6) மனத்தூய்மை: –
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே எனும் மனத்தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும். எந்த வகையான உலக இலாபங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கக் கூடாது.
‘தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்துக் கொள்வீராக’ (அல்-குர்ஆன் 39:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
தனது உள்ளத்திலிருந்து மனத்தூய்மையோடு எவன் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுகிறானோ அவன் தான் (மறுமையில்) எனது பரிந்துரைக்கு மிகவும் தகுதியானவன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.
7) நேசம்: –
அதாவது இத்திருக்கலிமா மூலம் ஏற்படக் கூடிய கொள்கை கோட்பாடுகளை நேசித்தல், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அதே போன்று அவனுக்கு வழிபட்டு நடக்கும்) நல்லடியார்களையும் அத்து மீறாமல் நேசித்தலாகும். இறுதியாக அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பதாகும்.
இது அல்லாஹ்வின் மீது அன்புக் கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய தண்டனையைப் பயந்து அவனது நற்கூலிக்கு ஆதரவு வைத்ததாகவும் வேண்டும். ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முழுமையாகப் பின்பற்றுவது தான்.
“(நபியே) நீர் கூறுவீராக, நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்” (அல்-குர்ஆன் 3:31)
இன்னும் விரிவாக படிக்க https://islamiyapuram.blogspot.com/2014/11/blog-post_925.html
https://www.youtube.com/watch?v=CukQ-efxEWA
No comments:
Post a Comment