தனி மனித புகழ்ச்சியும், முஸ்லீம் தலைவர்களை/ஆட்சியாளர்களை பகிரங்கமாக விமர்சனம் செய்வதும் மிகவும் ஆபத்தான விஷயங்கள். இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லீம்கள் வழிகெட்டதற்கும் பின்னடைவு அடைந்ததற்கும் இவை இரண்டும் தான் காரணம்.
அது என்ன வரலாறு? தனி மனித புகழ்ச்சியும், முஸ்லீம் தலைவர்களை/ஆட்சியாளர்களை பகிரங்கமாக விமர்சனம் செய்வதும் எங்கே எப்போ நடந்தது?
சிபீன் யுத்தம்:
இஸ்லாமிய வரலாற்றில் உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு வகையான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. உஸ்மான்(ரலி) அவர்களின் மறைவைத் தொடர்ந்து அலி(ரலி) அவர்கள் ஆட்சியைப் பொறுப்பெடுத்த நேரத்தில் பல்வேறு வகையான நிர்வாகச் சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டார்கள்.
அதில் முதன்மையான சிக்கல் உஸ்மானைக் கொன்றவர்களை முதலில் கண்டுபிடிப்பதா? அல்லது ஆட்சித் தலைவர் ஒருவர் ஆட்சிபீடமேறிய பிறகு அதிகாரத்தினால் அவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதா? என்பதில் அன்று சிரியாவில் கவர்னராக இருந்த முஆவியா(ரலி) அவர்களுக்கும் அலி(ரலி)அவர்களுக்கும் கருத்து முரண்பாடு தோன்றியது.
இக்கருத்து முரண்பாட்டை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் இரு நபித்தோழர்களும் சமரச சபை ஒன்றை ஏற்படுத்த இணங்கினர். இதனை ஏற்றுக் கொள்ள ஒரு சாரார் மறுத்தனர். மறுத்ததோடு இவ்வாறு செயற்படுவதற்கு முன்னெனியாகத் திகழ்ந்த அலி(ரலி) அவர்களை நாகூசாமல் “காபிர்”எனக் கூறி கிழர்ச்சி செய்தனர். இவர்களையே “கவாரிஜ்கள்” என நாம் அழைக்கின்றோம். கவாரிஜ்களின் இம்மோசமான நடவடிக்கையை அன்றைய நபித்தோழர்கள் வன்மையாக எதிர்த்தனர். இஸ்லாத்தில் அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படாமல் கிழர்ந்தெழுந்த கவாரிஜ்களை அலி(ரலி)அவர்கள் கொன்றொழித்தார்கள்.
அதே நேரம் அலி (ரலி) தவறே செய்யமாட்டார்கள், அவர்களுக்கு அல்லாஹ்வின் தன்மை இருக்கிறது அன்று கூறி ஷியா பிரிவு தோன்றியது.
இவர்கள் இருவரும் தான் இன்று வரை முஸ்லீம்கள் வழிகெட்டதற்கும் பின்னடைவு அடைந்ததற்கு காரணம். உதாரணமாக
1. அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லீம் நாடுகளில் அமைதியற்ற நலமையை ஏற்படுத்தியது கவாரிஜ்கள்
2. அந்த பிரச்னையில் சிரியாவில் 4 லட்சம் சுன்னத் ஜமாத் முஸ்லீம்களை கொன்றது ஷீயா அரசு
'யார் ஒரு ஆட்சியாளனுக்கு நல்லுபதேசம் செய்ய விரும்புகிறாறோ அவர் அதனை பகிரங்கமாக செய்யாதிருக்கட்டும். உபதேசம் செய்ய விரும்புபவர் அதிகாரியின் கையைப் பிடித்து யாருமில்லாத வகையில் தனிமையில் அழைத்து அந்த உபதேசத்தை செய்யட்டும். அவர் அதனை ஏற்றுக் கொண்டால் சரி. இல்லாவிட்டால் அவர் தனது கடமையை நிறைவேற்றியவராவார்' (அதாரம்: ஹாகிம் 5269, அஹமத் 15369, அல்பானி இந்த ஸஹீஹ் என அறிவித்துள்ளார்)
பாவத்தின் பக்கம் ஏவப்படாத வரை தான் விரும்பும் வெறுக்கும் விடயத்திலாக இருந்தாலும் ஒரு முஸ்லிமான தலைவருக்கு கட்டுப்படுவதும் செவியேற்பதும் கடமையாகும். அவர் பாவத்தைக் கொண்டு கட்டளையிட்டால் செவியேற்கவோ கட்டுப்படவோ அவசியமில்லை என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு (புகாரி முஸ்லிம் )
பாவத்தின் பால் கட்டளை இடும் யாராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டிய அவசிமில்லை. ஏனென்றால், நபியவர்கள்; படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்புகளுக்கு வழிப்பட அவசிமில்லை என்று கூறினார்கள்.
எனவே, அவர் எதனைச் சொன்னாலும் இறைவனுக்கு மாற்றம் செய்யும் விடயமாக இருந்தால் அதற்கு கட்டுப்பட வேண்டிய கடமை எம்மை விட்டும் நீங்கிவிடுகின்றது. ஆனால், நாம் அவருக்கு எதிராகச் செயல்பட நபியவர்கள் அனுமதி வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
குழப்பங்கள் நிகழ்ந்தே தீரும்:
குழப்பங்கள் உலகில் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது. அவை நிகழும்போது எவராலும் அவற்றை தடுத்து நிறத்தவும் முடியாது. அவை நிகழ்ந்தே முடியும் நிகழ்வுகளாகும்.
عَنْ أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُطُمٍ مِنْ الْآطَامِ فَقَالَ هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّي أَرَى الْفِتَنَ تَقَعُ خِلَالَ بُيُوتِكُمْ مَوَاقِعَ الْقَطْرِ صحيح البخاري
மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டை மீது ஏறிய நபி (ஸல்) அவர்கள் நான் பார்ப்பவைகளை எல்லாம் நீங்கள் பார்க்கின்றீர்களா? எனக் கேட்டுவிட்டு: மழைத்துளிகள் போன்று (அடுக்கடுக்கான) குழப்பங்கள் உங்கள் வீடுகளின் மத்தியில் நெகிழ்வதை நான் பார்க்கின்றேன் எனக் கூறினார்கள். (புகாரி).
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குழப்பங்கள் இறக்கப்படுவது பற்றிய ஹதீஸை விளக்குகின்றபோது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
…وَفِي الْحَدِيث النَّدْب إِلَى الدُّعَاء ، وَالتَّضَرُّع عِنْدَ نُزُول الْفِتْنَة وَلَا سِيَّمَا فِي اللَّيْل لِرَجَاءِ وَقْت الْإِجَابَة لِتُكْشَف أَوْ يَسْلَم الدَّاعِي وَمَنْ دَعَا لَهُ وَبِاَللَّهِ التَّوْفِيق . فتح الباري لابن حجر
– (20 / 72)
மேற்படி ஹதீஸில் துஆவின் பக்கம் அதிரடியாக நெருங்குவதும், குழப்பங்களின் போது அல்லாஹ்வை இறைஞ்சி வழிபடுவதும் உள்ளடங்கி இருக்கின்றது. குறிப்பாக இரவில் விடையளிக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொண்டு குழப்பங்கள் நீங்கிடவும், அல்லாஹ்வை அழைப்பவரும், யாருக்காக அவர் பிரார்த்திக்கின்றாரோ அவரும் அதில் இருந்து ஈடேற்றம் பெறவும் (பிரார்த்தனை செய்தல்) இந்த ஹதீஸில் காணப்படுகின்றது என்றும் மற்றொரு இடத்தில் விரிவுரை செய்கின்றபோது
… وَفِي الْحَدِيث اِسْتِحْبَاب الْإِسْرَاع إِلَى الصَّلَاة عِنْد خَشْيَة الشَّرّ كَمَا قَالَ تَعَالَى : ( وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاة ) وَكَانَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْر فَزِعَ إِلَى الصَّلَاة ، وَأَمَرَ مَنْ رَأَى فِي مَنَامه مَا يَكْرَه أَنْ يُصَلِّيَ ، وَسَيَأْتِي ذَلِكَ فِي مَوَاضِعه . وَفِيهِ التَّسْبِيح عِنْد رُؤْيَة الْأَشْيَاء الْمَهُولَة ، ((فتح الباري لابن حجر
– (1 / 184)
பொறுமையக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி வேண்டுங்கள் என்று அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்று தீமைகள் ஏற்படுவதை அஞ்சுகின்றபோது தொழுகையின் பக்கம் விரைதல் நபிவழியாகும் என்பது இந்த ஹதீஸில் உள்ளடங்கி இருக்கின்றது. திகில் கொள்ளும்படியான ஏதாவது நிகழ்வுகள் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் பக்கம் விரைவார்கள். கனவில் மனவெறுப்பான காட்சிகளைக் காண்போரை தொழும்படி கட்டளை இடுவார்கள். பாதகமான, திடுக்கிடும் நிகழ்வுகளின் போது ‘சுப்ஹானல்லாஹ்’ எனக் கூறுவதும் இதில் உள்ளடங்கி இருக்கின்றது.
No comments:
Post a Comment