அபூஹுதைபா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகனான சாலிம் (ரலி) அவர்களுக்கு தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் அருந்த கொடுத்து தாய் மகன் உறவு ஏற்பட நபி(ஸல்) அவர்கள் கூறிய கட்டளை சம்பந்தமாக வரும் ஹதீஸின் விமர்சனமும் விளக்கமும்.
இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வும் விமர்சனமும் வருவதற்கான பின்னணி காரணம் என்ன??
சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு தீர்வு, வெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான். அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்குத் தீர்வு என்ன?
அந்த டிரைவர்களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும், இவ்வாறு பால் கொடுப்பதன் மூலம் மஹ்ரம் ஆக்கிவிடலாம் என்று அண்மையில் ஒரு சவூதி மார்க்க அறிஞர் தீர்ப்பளித்திருக்கின்றார். சவூதியின் மூத்த அறிஞர்கள் குழு உறுப்பினரும் மன்னரின் ஆலோசகருமான ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் என்பவர் தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
இதற்கு ஆதாரமாக முஸ்லிம் நூலில் இடம் பெறும் சாலிமுடைய ஹதீஸை உபைக் கான் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த செய்தி தாள் செய்தியை வைத்துக்கொண்டு TNTJ ஆதாரப்பூர்வமான ஹதீதை விமர்சனமும் செய்து மறுக்கின்றார்கள்.
செய்தியின் உண்மை நிலை என்ன??
ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் அவர்கள் இந்த செய்தியின் உண்மை நிலைப்பாட்டை கூறுகையில்.
இந்த சஹாபி சாலிம் சம்பந்தமான எனது பத்வா பழமையானது . இதில் நான் எங்கேயும் டிரைவர் என்றோ, வேலையாள் என்றோ அல்லது அது சம்பந்தமான ஒரு வார்த்தையோ சொல்லவில்லை. இன்னும் தாய்ப்பாலை கோப்பையில் எடுத்து கொடுக்க வேண்டும்.
இந்த செய்தியை வைத்துக்கொண்டு TNTJ ஆதாரப்பூர்வமான ஹதீதை விமர்சனமும் செய்து மறுக்கின்றார்கள்.
விமர்சனமும் 1. சாலிம் என்ற இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க்கொண்டிருந்தார்.
விமர்சனம் செய்வோர் காட்டும் ஆதாரம்:“சாலிம் என்ற இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க்கொண்டிருந்தார். தமது மனைவியுடன் சாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூரிய போது…”
விளக்கம்:
சாலிம் (ரலி) அவர்கள் மதீனாவில் சேர்த்த அன்சாரியின் பெண்ணுடைய அடிமையாக இருந்தவர். சாலிம் (ரலி) சிறு வயதில் இருக்கும் போது அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களை தன்னோட வரப்பு மகனாக எடுத்து கொண்டார்கள்.
அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்து கொண்ட சஹாபி ஆவார். அபூ ஹுதைஃபா (ரலி) மனைவி பெயர் தான் சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) (குரைசி குலத்தை சேர்ந்த பெண்மணி).
இருவரும் தன் வீட்டில் சாலிம் (ரலி) அவர்களை சிறு வயதில் இருந்தே வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார்கள்.
சாலிம் (ரலி) அவர்கள் அசலில் அபூஹுதைபா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்தும் அதை குறிப்பிடாமல் மனைவியை மட்டும் பிரதானப்படுத்தியிருப்பது இந்த ஹதீஸை முறையாகப் புரிவதில் இடையூறு ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும்.
ஹதீஸை அருவருப்பாகக் காட்டுவதற்காகவும் படிக்கும் போதே வாசகர் அந்த ஹதீஸைக் குறித்து சந்தேகப்பட வேண்டும் என்பதற்காகவும் ஹதீஸில் திரிப்பு வேலை செய்துள்ளார்கள்.
இந்த ஹதீஸை எழுதியிருக்கும் விதத்தையும் உண்மையாக ஹதீஸில் இருப்பதையும் படித்துப் பாருங்கள்.
ஆதாரம் 1: அபூஹுதைபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) சாலிம் சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது அபூஹுதைஃபாவின் மனைவி சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து…”
(நூல்: முஸ்லிம் 2879)
ஆதாரம் 2: ஆயிஷா(ரலி) கூறியதாவது:
நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா இப்னு உத்பா(ரலி), (பாரசீகரான மஅகில் என்பவரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் இப்னு உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி(ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல் (சாலிமை அபூஹுதாஃபா(ரலி) வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள். மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.
33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது.)
பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களின் சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சகோதரர்ராகவும் மார்க்கச் நண்பராகவும் ஆனார்.
பிறகு, அபூஹுதைஃபா இப்னு உத்பா(ரலி) அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சாலிமை (எங்களுடைய) பிள்ளையாகவே கருதிக்கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அருளிவிட்டான்'' என்று தொடங்கும் ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் இப்னு ஹகம்(ரஹ்) முழுமையாகக்) கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி 5088)
இந்த காலகட்டத்தில்தான் அல்லாஹ் தன்னுடைய அல்குர்ஆனில் சூரா -அல் அஹ்ஸாப், வசனம் 5-ல்.
("நீங்கள் வளர்த்த எவர்களையும் ,அவர்களின் தந்தைகளின் பெயர்களை கூறியே அழையுங்கள் "...)
என்ற இறைவசனம் அருளப்படுகிறது. இந்த இறைவசனத்தின் ஏற்ப்பாட்டால், ஸாலிம் (ரழி) அவர்களின் முன்னிலையில் ஸஹ்லா (ரழி) அவர்கள் ஹிஜாப் முறையை பேண வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் அபுஹுதைபா (ரழி) அவர்களுக்கு, தன்னுடைய மனைவி ஸஹ்லா (ரழி) அவர்கள் தங்களுடைய வளர்ப்பு மகனான ஸாலிம் (ரழி) முன்னிலையில் ஹிஜாப் முறையை பேணுவதில் சகஜமான நிலையில் உள்ளார்களே என்ற கவலை ஏற்படுகிறது. குறிப்பு: (வளர்ப்பு மகன் என்ற சகஜநிலையால் இறைகட்டளையை முறையாக கடைபிடிக்க முடியவில்லையே என்ற கவலை தான் இது). தன் கணவருடைய முகத்தில் இந்த கவலையை உணர்ந்த ஸஹ்லா (ரழி) அவர்கள், இறைத்தூதரிடம் சென்று முறையிடுகிறார்கள். இறைத்தூதர் ஸஹ்லா (ரழி)ஐ நோக்கி, "நீ ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் கொடுத்து விடு" என்று கூறினார்கள். இந்த ஹதீஸின் வரலாற்று தொடர் ஆசிரியர் "முஹம்மது இப்னு அப்துல்லாஹ" கூறுகிறார்கள்" ஸஹ்லா (ரழி) அவர்கள், ஸாலிம்(ரழி) அவர்களுக்கு தன்னுடைய பாலை கரந்து ஓர் சிறிய கிண்ணத்தில் ஐந்து நாட்கள் கொடுத்தார்கள்"). இந்த ஹதீஸ் அல்குர்ஆனில் உள்ள இரண்டு வருடமே பால்குடிக்கு அனுமதி என்கிற நேரடி வசனத்திற்க்கு முரணாகாது. ஏனென்றால் இந்த அனுமதி ஸாலிம்(ரழி) அவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட முதல் மற்றும் இறுதி தீர்ப்பாகவே அன்றைய ஸஹாபாக்கள் கருதினார்கள்.
விமர்சனமும் 2: சஹ்லா (ரலி) அவர்களால் சாலிம் வளர்க்கப்பட்டிருந்தார் என்ற தகவலைச் சொன்னால் மட்டும் சஹ்லா (ரலி) அவர்களுக்கு சாலிம் மகனாகி விடுவாரா? அவர் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டுக்குச் சென்று வருவது சரியானதாகி விடுமா? சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவலாகும். இதைச் சொல்வதாலோ சொல்லாமல் விட்டாலோ ஹதீஸின் கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
விளக்கம்:
(முஸ்லிம் 2879, 2880) இரண்டு ஹதீஸ்களிலும் சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையும் வளர்ப்பு மகனும் என்ற செய்தியும் அவர்களின் வீட்டில் இருந்து கொண்டிருந்தார் என்ற செய்தியும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரே தகவலை கொண்ட வரிசையாக வரும் மூன்று ஹதீஸ்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ள ஒரு ஹதீஸை மட்டும் வைத்துக்கொண்டு கொச்சைப் படுத்துவது முறையில்லாத செயலாகும்.
சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவல் என்று நீங்கள் எப்படி கூறுவீர்கள். வளர்ப்பு மகன் என்பது ஹதீஸிலேயே சொல்லப்பட்டிரிக்கும் போது அதை கூறாமல் விட்டது தவறு.
ஒரு ஹதீசையோ குர்ஆன் ஆயத்தயோ சரியாக புறிவதற்கு அதன் பின்னணி நிகழ்வு ஒரு முக்கியமான ஒன்று. சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்டவர் என்பது தான் இந்த ஹதீஸை சரியாக புரிவதற்கு மிக முக்கியமான செய்தி. இது ஒன்றும் கூடுதல் தகவல் இல்லை.
ஆதாரம்:
நபி(ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல் (சாலிமை அபூஹுதாஃபா(ரலி) ) வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள்... சஹ்லா பின்த் சுஹைல்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக்கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அருளிவிட்டான்'
நூல்: ஸஹீஹுல் புகாரி 5088
அந்த சகாபாக்கள் சாலிம் (ரலி) அவர்களை தங்களுடைய பிள்ளையாகவே கருதி வளர்த்து வந்துள்ளார்கள். சாலிம் (ரலி) அவர்கள் வீட்டினுள் வருவது இந்த ஆயத் இறங்கும் வரை தவறாக கருதப்பட வில்லை. அப்படி இருக்கும் போது வீட்டுக்குச் சென்று வருவது சரியானதாகி விடுமா? என்று கேட்பது ஹதீஸின் பின்னணி விபரம் தெரியாமல் கேட்கும் கேள்வி.
விமர்சனமும் 3: ஒரு இளைஞனின் வாயில் மார்பை வைத்து பாலூட்டுமாறும் அதனால் அந்த இளைஞன் மகன் என்ற உறவாக ஆகிவிடுவான் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுவார்களா?
இது தவறாகும். ஏனென்றால் இவர் பயன்படுத்தியுள்ள கொச்சையான வாசகம் எந்த ஹதீஸிலும் இல்லை. இந்த முறையில் தான் பால் ஊட்ட இந்த ஹதீஸ் சொல்கிறது என்று எதை வைத்து சொல்கிறீர்கள். ஹதீஸில் இதை குறிக்கும் நேரடி வார்த்தை இல்லை.
பெரியவருக்கு “பால்கொடு” என்று கூறப்படும் உத்தரவை பொதுவாக நடைமுறையில் இருப்பது போல் செயல்படுத்தினால் மார்க்கத்தின் வேறு வழிகாட்டலுக்கு முரண்படும். இந்நிலையில் அவ்வாறு முரண்படாத விதத்தில் பால் எடுத்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது தான் யதார்த்தம்.
இந்த ஹதீஸில்… எவ்வாறு நான் பால் கொடுப்பேன் என்று சஹ்லா (ரலி) அவர்கள் கேட்பதை எந்த விதத்தில் பால் கொடுப்பது என்று விவரம் கேட்பதாக எடுத்துக் கொள்வதை விட பெரியவருக்கு பால் கொடுத்தாலும் பிள்ளையாக ஆக முடியாதே? என்று கேட்பதாக எடுத்துக் கொள்வது தான் மிகப் பொருத்தமானது.
ஏனென்றால் “எவ்வாறு” என்று மொழியாக்கபட்டுள்ள வாசகத்தின் அரபி மூலம் ‘கைஃப’ என்பதாகும். இந்த பதம் ஆக முடியாது ஆகக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.
இதற்கு ஆதாரமாக குர்ஆனிலேயே சில வாசனைகள் உள்ளன.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின் வாசனைகள் உங்களுக்கு ஓதிக்காட்டப்படும் நிலையிலும் அவனுடைய தூதர் உங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலையிலும் நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்?
அல் குர்ஆன் 3:1௦1
இங்கு அல்லாஹ் எவ்வாறு (கைஃப) நிராகரிப்பீர்கள் என்று கேட்பதற்கு எந்த விதத்தில் நிராகரிப்பீர்கள் (அல்லாஹ்வை மறுத்தா? தூதரை மறுத்தா? வேதத்தை மறுத்தா?) என்று விவரம் கேட்பதாக கருத்துக் கொள்ள முடியாது. மாறாக, நீங்கள் நிராகரிப்பவர்களாக இருக்கக் கூடாது என்று தான் கருத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் குழந்தைப் பருவத்தை தாண்டியவர் பால் குடிப்பதால் தாய், பிள்ளை உறவு ஏற்படாது என்பது குர்ஆனிலும் நபிமொழியிலும் சொல்லப்பட்டதாகும். அதற்கு மாற்றமாக நபியிடமிருந்தே உத்தரவு வரும் போது அது குறித்த அன்னை சஹ்லா (ரலி) அவர்கள் எழுப்பிய கேள்வி பால் குடித்தாலும் பெரியவர் பிள்ளையாவது எப்படி என்பது குறித்துத் தான் என இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
அபூதாவூதில் இடம்பெறுவது:
சாலிம்(ரலி) அவர்கள் தொடர்பான இந்த ஹதீஸை வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாக இமாம் அபூதாவூத் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அந்த ஹதீஸுடன் சேர்ந்தவாறே, ”பால் எடுத்துக் கொடுக்கப்பட்டது என்பது தான் அறிஞர்களின் கருத்து” என்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் படிக்கும் போது இமாம் அபூதாவூத் அவர்கள் கூறும் விளக்கம் என்று கருதும் விதத்திலேயே அமைந்துள்ளது.
(அபூதாவூத் 2063 அல்மகத்பா அஷ்ஷாமிலா மென்பொருள் 3.28 பதிப்பு)
பெரியவருக்கு பால் கொடுப்பது என்பது பால் எடுத்துக் கொடுக்கப்படுவது தான் என்றும் இதுவே அறிஞர்களின் கூற்று என்றும் முஅதத்தாவின் விரிவுரையான அத்தம்ஹீதில் இமாம் இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(பார்க்க: அத்தம்ஹீத் பா: 8, பக்: 257)
விமர்சனமும் 4: இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று இவர்கள் நம்பினால் விரும்பக் கூடிய முஸ்லிம்கள் இதுபோல் செய்து கொள்ளலாம் என்று மார்க்கத் தீர்ப்பு அளிப்பார்களா? நிச்சயமாக அளிக்க மாட்டார்கள். அப்படியானால் இவர்களும் இதை நம்பவில்லை என்றும், நம்புவதாகப் பொய் சொல்கிறார்கள் என்றும் தெரிகிறது.
இவர் ஹதீஸ்களை ஒழுங்காக முறையாக படிப்பதில்லை என்பதற்கு பெரிய ஆதாரம் முஸ்லிம் நூலின், சாலிம்(ரலி) பால்குடி தொடர்பான பாடத்தின் இறுதி ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் எல்லோரும் ஆயிஷா(ரலி) அவர்கள் தவிர, சாலிம்(ரலி) அவர்களுக்கு மட்டுமே நபி(ஸல்) அவர்கள் கொடுத்த அனுமதி என்று கூறியது இடம் பெறுகிறது. நூல் : முஸ்லிம் 2883
மிகச் சிலரைத் தவிர மார்க்கம் கற்ற அறிஞர்கள் எல்லோரும் அக்காலத்திலும் இக்காலத்திலும் இதனைத்தான் சொல்கிறார்கள் என்பது பிரபலம். இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இந்தக் கேள்வியை கேட்கிறாரா? அல்லது பொதுமக்களை மிரட்சி அடையச் செய்வதற்காக கேட்கிறாரா? அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
விமர்சனமும் 5: அன்னிய ஆணுடன் தனித்து இருக்க விரும்பும் எல்லாப் பெண்களும் மார்பகத்தில் இருந்து பால் கறந்து கொடுத்து விட்டு தனிமையில் இருக்கலாம். எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் இந்த வழிமுறையைக் கடைப்பிடித்து தனிமையில் இருக்கலாம் என்று மார்க்கத் தீர்ப்பு கொடுப்பார்களா? இவர்கள் பத்வா கொடுக்காவிட்டாலும் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும்போது இப்பதான் பால் கொடுத்தேன்; இவன் என் மகன் என்று சொன்னால் அவனைத் தண்டிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சட்டம் சொல்வார்களா?
விரும்பியவர் செய்து கொள்ளலாம் என்று ஹதீசும் சொல்ல வில்லை, ஹதீஸ் விரிவுரையாளர்களும், மார்க்கம் கற்ற அறிஞர்கலும் சொல்லவில்லை.
இந்த ஹதீஸை நடைமுறை படுத்த சொல்லும் இமாம் இப்னுல் கையும் , இமாம் சித்தீக் ஹசன் கான் , இமாம் இப்னு தைய்மியா போன்றவர்கள், இந்த ஹதீஸ் இந்த சூழ் நிலையில் உள்ள வளர்ப்பு பிள்ளைகளுக்குதான் பொருந்தும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
பலர் இந்த ஹதீஸ் சாலிம்(ரலி) அவர்களுக்கு மட்டும் என்று சொல்லியுள்ளார்கள், சிலர் இந்த சூழ் நிலையில் உள்ள வளர்ப்பு பிள்ளைகளுக்குதான் பொருந்தும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
தாய் பால் என்பது குழைந்த பெற்ற பெண்களுக்குத்தான் வரும். அதே போல் ஒருவருக்கு தாய் பால் கொடுத்து மகனாக எடுத்து கொள்ள அந்த பெண்ணின் கணவனும் அனுமதிக்க வேண்டும்.
மேலும் பெரியவருக்கு பால் கொடுப்பது என்பது பால் எடுத்துக் கொடுக்கப்படுவது தான் என்றும் இதுவே அறிஞர்களின் கூற்று என்றும் இருக்கும் போது விபச்சார கற்பனை இவருக்கு தான் வருகிறது.
நபி(ஸல்) அவர்களின் இந்த சட்டம் முஸ்லிம் என்ற புத்தகத்தில் மட்டும் சுமார் 1200 ஆண்டுகளாக உள்ளது. இதுவரை இந்த விபச்சார கற்பனை யாருக்கும் வந்ததாக வரலாறு இல்லை. இவரின் கற்பனை தான் இனி வரலாறாக போகிறது.
விமர்சனமும் 6: இவை அனைத்தில் இருந்தும் தப்பிக்க இவர்கள் கண்டுபிடித்த வழி என்ன? இது சாலிமுக்கு மட்டும் உள்ள சட்டம். எல்லோருக்கும் உரியது அல்ல என்பது தான். சாலிமுக்கு மட்டும் உரியது என்று ஹதீஸில் உள்ளதா? இல்லவே இல்லை.
இவர் ஹதீஸ்களை ஒழுங்காக முறையாக படிப்பதில்லை என்பதற்கு பெரிய ஆதாரம் முஸ்லிமில் உள்ளது.
ஸைனப் பின்த் அபீ சலமா(ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயாரும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான உம்மு சலமா(ரலி) அவர்கள் கூறுவார்கள்: (ஆயிஷா(ரலி) அவர்களைத் தவிர) நபி(ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் எவரும் பால் குடிப்பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து (‘செவிலித்தாய் மகன்’ என்ற) உறவை ஏற்படுத்தி அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்து விட்டனர். மேலும் நபி(ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ”அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சாலிம்(ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனுமதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை; எங்களை(த் திரையின்றிப் பார்த்தது மில்லை என்று கூறினர்
நூல் : முஸ்லிம் 2883
ஆக நபி(ஸல்) அவர்களின் மனைவியர் எல்லோரும் சாலிமுக்கு மட்டுமே உரிய அனுமதி என்று தான் கூறியுள்ளார்கள். இதில் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மட்டும் மாற்றுக் கருத்து இருந்துள்ளது.
விமர்சனம் 7: சில சந்தர்ப்பங்களில் சில தனிப்பட்ட நபர்களுக்கு பொது விதியில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதி விலக்கு அளித்துள்ளனர். ஆனால் அவை ஆபாசத்துக்கும், அசிங்கத்துக்கும் அனுமதி அளிப்பதாக இருக்காது. ஒருவருக்கு மட்டும் அந்நியப் பெண்ணின் மார்பகத்தைப் பார்க்கவும், சுவைக்கவும் அனுமதித்தார்கள் என்பது இதுபோல் தான் உள்ளது. தனிச்சட்டம் என்பது அசிங்கமான விஷயங்களுக்கு இல்லை. உதாரணத்துக்குப் பின் வரும் ஹதீஸை எடுத்துக் காட்டலாம். இன்று (பெருநாளில்) நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் தொழுகை. பிறகு நம் வீட்டுக்குச் சென்று குர்பானி கொடுக்க வேண்டும். யார் இப்படிச் செய்கிறாரோ அவர் நமது வழியைக் கடைப்பிடித்தார். தொழுகைக்கு முன்னர் யார் அறுத்து விட்டாரோ அவர் தனது குடும்பத்துக்காக அவர் அறுத்த இறைச்சியாகும். இது கிரியைகளில் அடங்காது என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அப்போது அபூபுர்தா எனும் தோழர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே, நான் முன்பே அறுத்து விட்டேன். (என்னிடம் ஒரு வருட ஆட்டுக்குட்டி இல்லை) . அதைவிடச் சிறந்ததாக ஆறுமாத குட்டி உள்ளது. (அதை அறுக்கட்டுமா) என்று கேட்டார். ஏற்கனவே அறுத்ததற்குப் பதிலாக இதை அறுப்பீராக. உமக்குப் பின் வேறு எவருக்கும் இது இல்லை என்று கூறினார்கள். (புகாரி 5560) இது போல் கூறப்பட்டால் தான் அது தனி நபருக்கு உரிய சலுகை எனக் கூற வேண்டும்.
அஸ்தக்பிருல்லாஹ், நீங்கள் சொல்லும் எந்த ஆபாசமான வார்த்தையும் ஹதீஸிலும் இல்லை ஹதீஸ் விரிவுரையாளர்களும் சொல்லவில்லை முஸ்லிம் சமுதாயமும் அப்படி புரிந்து கொள்ள வில்லை. ஆபாசமான வார்த்தை இல்லை என்று நிரூபனமானதால் இந்த வாதம் தவறானது என்று புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களில் சிலருக்கு வணக்கவழிபாடுகளில் மட்டுமே பொதுவான மார்க்க சட்டத்திலிருந்து,விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினீர்கள். அதற்க்கு அபூதர்தா(ரழி) அவர்களின் சம்பவத்தை மேற்க்கோள் காட்டினீர்கள். அதைதவிர,வேறு எந்த ஸஹாபாக்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு பொதுவான மார்க்க சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுத்தது இல்லை என்றும் கூறினீர்கள்.
அவ்வாறு விதிவிலக்கு கொடுத்திருந்தால் ஆதாரம் காட்டச் சொன்னீர்கள். உங்களுக்கு மறுபடியும் ஞாபகம் ஊட்டும் விதமாக, நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் !.
இந்த விவாதத்தில் நாம் இருவரும் கருப்பொருளாக எடுத்துக்கொண்டோமே,ஸஹீஹ் முஸ்லிம் - "1453".ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ்தான் அது.
ஆக !
நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களில் சிலருக்கு வணக்கவழிபாடுகளில் விதிவிலக்கு அளித்த ஆதாரமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வீர்கள் !,
அதே, நபி(ஸல்) அவர்கள், ஸஹாபாக்களில் ஒருவரான ஸஹ்லா(ரழி) அவர்களுக்கு விதிவிலக்கு வழங்கிய ஆதாரமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள மறுப்பீர்கள் !.
நபி(ஸல்) அவர்களின் மூலமாக இடம்பெரும் ஆதாரமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதிலே, உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்களே .
உங்களின் மனோஇச்சை தான், நபி(ஸல்) அவர்கள், ஸஹ்லா(ரழி) அவர்களிடம் கூறிய, "நீங்கள் ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் கொடுத்துவிடுங்கள் என்கிற இறைத்தூதரின் வாக்கிற்க்கு,கொச்சையான நேரடி பொருள் அர்த்தம் செய்யும்படி தூண்டுகிறது.
உங்களிடம் நான் கேட்கும் கேள்வி,
1. ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெரும் - 1453 என்கிற ஹதீஸிர்க்கு ,ஆபாசமான நேரடி பொருள் அர்த்தம் செய்யும் அதிகாரம் உங்களுக்கு கொடுத்தது யார் ?.
2.நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கமாட்டார்கள் ,என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு கொடுத்தது யார் ? .
இஸ்லாம் மார்க்கத்தில் ஓர் மார்க்கச்சட்டத்தை அமுல்படுத்தும் உரிமை அல்லாஹ்வுக்கும் ,அவனுடைய தூதருக்கும் மட்டும் தான் உண்டு.
எனவேதான், அல்லாஹ் தன்னுடைய குர்ஆனிலே இவ்வாறு கூறுகின்றான், ""அல்லாஹ்வுக்கும் அவன் ரஸூலுக்கும் கட்டுப்படுங்கள் "".
ஆனால் கட்டுப்படுதல் என்கிற அடிப்படையிலேயே நீங்கள் முரண்படுகிறீர்கள்.
ஸாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டும் தான் இந்த சட்டம் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை,மேலும் இந்த ஹதீஸை அறிவித்த ஆயிஷா (ரலி) அவர்களே இந்த சட்டம் எல்லோருக்கும் பொருந்தும் என்று அறிவித்தது முஸ்லீமில் பின் வருமாறு பதியபட்டுள்ளது ""ஆயிஷா அவர்களே, உங்கள் இல்லத்தில் பருவ வயதுக்கு நெருக்கமான இளைஞர்கள் வருகின்றனர். அத்தகைய வயதுடையவர்கள் என் வீட்டில் நுழைவதை நான் விரும்ப மாட்டேன் என்று உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பருவமடைந்த ஆண் மகனான ஸாலிம் என் வீட்டுக்கு வருவதில் என் கணவர் அபூ ஹுதைஃபாவுக்கு அதிருப்தி உள்ளது என்று அபூ ஹுதைஃபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது அவருக்குப் பாலூட்டு இதன் பின் வீட்டுக்குள் ஸாலிம் நுழையலாம் என்று கூறினார்களே? இதில் உங்களுக்கு அழகான முன்மாதிரி இல்லையா? என்று திருப்பிக் கேட்டார்கள். நூல்-முஸ்லிம் 3558
ஆயிஷா(ரழி) அவர்களின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நபி(ஸல்) அவர்களின் மணைவி உம்முஸலமா(ரழி) அவர்களின் கூற்றை இங்கே பதிவு செய்கிறேன். நூல் :ஸஹீஹ் முஸ்லிம், எண் :2883,
"ஜைனப் பின்த் அபீஸலமா(ரழி)அவர்கள் கூறுகிறார்கள், என் தாயாரும் நபி(ஸல்) அவர்களின் மணைவியுமான உம்முஸலமா(ரழி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரழி) அவர்களை தவிர, நபி(ஸல்) அவர்களுடைய மற்ற மணைவிகள் எவரும் பால்குடி பருவத்தை கடந்த ஒருவருக்கு பால் கொடுத்து(செவிலித் தாய்-மகன்) என்ற உறவை ஏற்படுத்தி, அவரை தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும் நபி(ஸல்) அவர்களுடைய மற்ற மணைவிகள், ஆயிஷா(ரழி) அவர்களிடம் "அல்லாஹ்வின் மீது ஆணையாக ! நபி(ஸல்) அவர்கள் ஸாலிம்(ரழி) அவர்களுக்கு மட்டுமே இந்த பால்குடி முறைச்சட்டத்தை அனுமதித்தார்கள்". என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடி பருவத்தை கடந்த பின் பால்குடி உறவை ஏற்ப்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை, எங்களை திரையின்றி பார்த்ததுமில்லை என்று கூறினார்.)
நபி(ஸல்) அவர்கள் ஸஹ்லா(ரழி) அவர்களிடம் "நீங்கள் ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் கொடுத்துவிடுங்கள்" என்று கூறினார்கள். இதைகேட்ட ஸஹ்லா(ரழி) அவர்கள், யாரஸூலுல்லாஹ ! நான் எவ்வாறு பால்கொடுப்பது என்று கேட்டதற்க்கு ? (நீங்கள் எவ்வாறு பால் கொடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும்) என்று நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ஸஹ்லா(ரழி) அவர்களிடம் ("நீங்கள் ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் கொடுத்து விடுங்கள்") என்கிற இந்த குறிப்பிட்ட வசனம் தான் நபி(ஸல்) அவர்கள், ஸாலிம்(ரழி) அவர்களுக்கு மட்டுமே கூறிய மார்க்க தீர்ப்பு.
"நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்பவர்கள், தங்களின் வீட்டு பெண்கள் இந்த ஹதீஸை நடைமுறையில் செயல்படுத்துவார்களா?.
அன்புள்ள சகோதரர்களே! சற்று சிந்தித்துப் பார்த்தீர்களா?.
இந்த கேள்வி எங்கள் வீட்டு பெண்களை மட்டுமா குறிக்கிறது, அண்ணை ஆயிஷா (ரழி) அவர்களையும் தான் குறிக்கிறது. ஏனென்றால் !
நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸ், பொதுவானது என்று தன்னுடைய கருத்தில் கொண்ட ஆயிஷா (ரழி) அவர்கள், தன் வீட்டில் பருவ வயது நெருங்கிய ஆண்களை அனுமதித்தார்கள் என்றால், நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை, உங்களை போல் நேரடி பொருள் அர்த்தம் செய்து பால்குடி சட்டத்தை நிறைவேற்றிருப்பார்களா?
மேலும் தங்களின் புரிதலுக்காக !
ஆயிஷா (ரழி), அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களின் மற்ற மணைவிகளுக்கும் இடையில் இருந்த கருத்துவேறுபாடு என்பது, இருதரப்பினரின் சொந்த கருத்தே ஆகும்.
இதில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, ஆயிஷா (ரழி) அவர்களின் கூற்றை விட, மற்ற மணைவிகளின் கூற்று, நபி (ஸல்) அவர்களுடைய மார்க்க தீர்ப்பிற்க்கு இனக்கத்துடன் ஒத்துப்போகிறது.
இந்த ஹதீஸிற்கு உங்கள் இமாம்கள் தான், மன இச்சைபடி மாற்றுகிறார்கள், என்பதற்கு சான்று; மேற்கண்ட ஸாலிம் தொடர்பான ஹதீஸில் அர்ளியிஹி ﺍﺭﺿﻌﻴﻪ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் மார்பில் வாய் வைத்து குடிப்பது தான். கறந்து குடிப்பது அல்ல என்பதால் இவர்களின் விளக்கம் அடிபட்டுப் போகிறது. பால் கொடுக்கச் சொன்ன போது இவர் இளைஞராகவும் தாடி உள்ளவராகவும் இருக்கிறாரே என்று ஸஹ்லா கேட்டதாக அந்த ஹதீஸ் கூறுகிறது. கறந்து கொடுப்பது தான் அர்த்தம் என்றால் இக்கேள்விக்கு இடமில்லை. கறந்து கொடுக்கும் போது இளைஞராக இருந்தால் என்ன? சிறுவராக இருந்தால் என்ன? இவர் இவ்வாறு கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) புன்னகை செய்ததாகவும் கூறப்படுகிறது. கறந்து கொடுப்பது என்றால் இவர் கேட்டவுடன் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சிரிப்பார்களா?
ஸஹீஹ் முஸ்லிம்;" 1453" , '2879'ஆக இடம்பெறும் ஹதீஸ்களிலிருந்து" அர்ழியிஹி" என்கிற அரபி வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்த" அர்ழியிஹி" என்கிற அரபி வார்த்தைக்கு, நீங்கள் செய்யும் அர்த்தமாக ( மார்பில் உறிஞ்சி பால்குடி குடிக்க வையுங்கள்) என்கிற வார்த்தைகள் இடம்பெறும் ஹதீஸ் நூல்: "அல்முஅஜமுல் அவ்ஸத்", ஹதீஸ் எண்: 7178
இந்த குறிப்பிட்ட ஹதீஸ் ("மஜ்ஹூள்") என்கிற வகையைச் சார்ந்தது. "மஜ்ஹூள்" என்றால் ஹதீஸின் அறிவிப்பாளராக உள்ளவர்களில் ஒருவர் யாரென அறியப்படாதவர் என்று அர்த்தம். இந்த "7178" ஹதீஸின் அறிவிப்பாளராக உள்ள "அஹமத் பின் அர்க்கம் அத்தஸ்தரி" என்பவர் யாரென அறியப்படாதவர்.
இந்த" அல்முஅஜமுல் அவ்ஸத்" என்ற நூலில் இடம்பெறும் "7178" ஹதீஸைத்தான், உங்கள் ஜமாத்தாரின் வெளியீடான "ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா' என்ற பச்சை நிற அட்டைப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
மேலும் ! இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரிலேயே ஆட்டம் கண்டுவிட்டது என்கிற உண்மையை உங்களின் மூத்த மார்க்க அறிஞர்கள் யாரும் உங்களிடம் அறிவிக்கவில்லையா !
மேலும் !
நூல்: "திர்மிதி",
ஹதீஸ் எண் : 1072
அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரழி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரண்டு வருடம் முடிவடைவடைவதற்கு முன்பு மார்பகத்தின் வழியாக வயிறை (குடலை) நிரப்புகின்ற அளவிற்கு பால்புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும்.
இந்த ஹதீஸின், ("இரண்டு வருடம் முடிவடைவடைவதற்கு முன்பு" ") என்கிற ஆரம்ப வாசகத்தையே இருட்டடிப்பு செய்துவிட்டீர்களே !
இந்த திர்மிதி ஹதீஸ், சூரா அல்பகரா : 233 வசனத்திற்க்கு. நபி (ஸல்) அவர்களால், அனைவருக்கும் விளக்கமாகவும், பொதுவான மார்க்க சட்டமாகவும் அருளப்பட்டது.
இந்த திர்மிதியில் இடம்பெறும்" 1072" வது ஹதீஸில். "ரிலாஅத்" என்கிற அரபி வார்த்தை, "மார்பகத்தின் வழியாக வயிறை நிரப்புகின்ற பால்குடி முறையையே" குறிக்கின்றது.
மேலும் ! இந்த பொதுவான மார்க்க சட்டத்திலிருந்து விதிவிலக்கு பெற்ற ஹதீஸாகவே, "ஸஹீஹ் முஸ்லிமில்" இடம்பெற்றுள்ள" 1453, 2879 ஆகிய ஹதீஸ்களை நாம் அனுக வேண்டும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள், ஸஹ்லா (ரழி) அவர்களிடம் ("அர்ழியிஹி") என்று கூறும்போது, (ஹ்லா '" ஸாலிமுக்கு" அன்னியப் பெண்ணாகவே இருந்தார்கள்.
குறிப்பு : ( "அல் அஹ்ஸாப்" 5-வது இறைவசனத்தின் கட்டளையால்") .
நபி (ஸல்) அவர்கள் (..." நம்பிக்கையுள்ள பெண்கள் தங்கள் முந்தானைகளால் மார்பை மறைத்துக் கொள்ளவும் ...") என்கிற சூரா :அந்நூர், '31" வசனத்தை நினைவில் கொண்டே (" அர்ழியிஹி") என்கிற வார்த்தையை, ஸஹ்லா (ரழி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இதற்க்கு ஆதாரமாக;
நூல் :" தாஃபிருல் முஹ்தலிப்'
இமாம் :" இப்னு குதைபா அத்தய்நூரி"
அவர்கள் கூறுகிறார்கள்;
ஸஹ்லா (ரழி) அவர்கள், ஸாலிம் (ரழி) அவர்களுக்கு பாலை கறந்து தான் கொடுத்தார்கள் . ஏனெனில் பாலை கறந்து கொடுப்பதற்கு முன்பு வரை, ஸஹ்லா (ரழி) அவர்கள் ஸாலிம் (ரழி) அவர்களுக்கு அந்நியப் பெண்ணாகவே இருப்பார்.
No comments:
Post a Comment